010 இனியவைகூறல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - இனியவைகூறல்
பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - இனியவைகூறல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்

குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்

குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்