Skip to main content

Posts

Showing posts from October, 2014

கேட்டினும் உண்டோர் உறுதி

குறள் 796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை  நீட்டி அளப்பதோர் கோல் [ பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல் ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கேட்டல் -  செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேட்டினும் - நமக்கு கேடு உண்டாகும் தருணத்திலும்  உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன். உண்டோர்  உறுதி   - உண்டு ஒரு நன்மை (உறுதியாக தெரிந்து கொள்ளக் கூடிய) கிளைஞர் - உறவினர்; நட்பினர்; மருதநிலமாக்கள். கிளைஞரை - நமது நண்பர்களை  நீட்...

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது

குறள் 585 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்  உகாஅமை வல்லதே ஒற்று [பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்] பொருள் : கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல். கடாதல் - கடாவுதல், வினாவுதல். உருவம் -  வடிவம்; உடல் அழகு நிறம் வேடம் சிலை மந்திரவுரு; கூறு தெய்வத்திருமேனி. கடாஅ உருவொடு   - யாரும் எளிதில் கண்டு பிடிக்க முடியாத உருவோடு  கண் -   விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். அஞ்சுதல் - பயப்படுதல் அஞ்சாது - அஞ்சாமல்  கண்ணஞ்சாது - சந்தேகிக்கும் எந்த கண்களுக்கும் அஞ்சாமல் யாண்டும் - எப்பொழுதும்  உகாஅமை - மனதில்  உள்ளவற்றை வெளியே சொல்லாத உறுதி கொண்டமை  வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம். வல்லதே ஒற்று - இவ் வலிமைகளே ஒற்று . முழு விளக்கம் ஒரு ஒற்றனானவன் எவ்வாறு இருக்க வேண்டுமானால், அவனை யாரும் எளிதில் அடையாளம் கண்ட...

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்  மருளானாம் மாணாப் பிறப்பு. [அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. அல்ல - அல்லாத பொருளல்ல வற்றைப் - அதாவது மெய்ப்பொருள்  அல்லாத பொருள்களை பொருள்  - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. என்று - என பொருளென்று - வாழ்க்கையின் மெய்ப்பொருளாக உணரும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் மரு...

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்

குறள் 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் [அறத்துப்பால்,  துறவறவியல், வெகுளாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செல் -   To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).   - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான். செல் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல் - செலாவணி - செலாமணி - celāmaṇi   n. U. calāoṇi.1. That which can be passed, as coin; thatwhich is a legal tender; செல்லக்கூடியது. 2.Influence; செல்வாக்கு இப்போது அவருக்கு அவ்வளவு செலாமணியில்லை. Loc. ; புழக்கம்; செல்லக்கூடியது; செல்வாக்கு. இடத்துக் - இடம் -  தானம்; Context; சந்தர...