Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_111. Show all posts
Showing posts with label Athikaaram_111. Show all posts

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

 

குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
அறிது - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல்

அறியாமை  - அறியாத்தன்மை; மடமை

கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால் -  தன்மை அறிந்து

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

செறி - நெருக்கம்

தோறும் தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல்

சேயிழை - cēy-iḻai   n. செம்-மை + இழை Woman, as wearing beautiful ornaments;[அழகு திருந்திய அணியுடையாள்] பெண் சேயிழைகணவ (பதிற்றுப். 88, 36).  cēyiẕai   s. Splendid ornaments, நல் லணி. 2. A richly adorned lady, one of the fair sex, பெண். (p.) See இழை. சேயிழைமார்--சேயிழையார். s. The ornamented fair.

மாட்டு - அகன்றுகிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியு மாற்றாற் கொண்டு கூட்டிய சொல் முடிவு கொள்ளும் முறை; அடி; சொல்.

முழுப்பொருள்
நூல்கள் பலவற்றை ஆழமாக கற்கும் தோறும் நாம் அறிந்துக்கொள்வது எல்லாம் நமது அறியாமையை. அதுவும் ஏற்கனவே வாசித்த புத்தகத்தை மறுபடியும் வாசிக்கும் பொழுது நமக்கு புதிது புதிதாக ஒன்று தெரிந்துக்கொண்டே இருக்கிறது. அப்பொழுதும் நாம் அறிவது நமது அறியாமையை. புதியவற்றை நாம் கற்கும் பொழுதும் நாம் நமது அறியாமையை தான் அறிகிறோம். ஏனெனில் இவையெல்லாம் முன்பே அங்கு தான் இருக்கின்றன. நாம் ஒன்றும் புதிதாய் கண்டுப்பிடிக்கவில்லை. அதுவும் புதிதாக தோன்றவில்லை. ஆனால் ஆழமாக படிக்கும் பொழுதே புதிதாய் நாம் அறிகிறோம். நுனிப்புல் மேய்தால் ஒன்றும் அறிந்துக்கொள்ள மாட்டோம்.

ஒவ்வொரு முறையும் நூல்கள் கற்கும் பொழுது எப்படி அறியாமையை அறிந்துக்கொள்கிறோமோ அதுப்போல அழகிய நகைகளை (புற அணிகலன்களான தங்க நகை முத்து வைரம் போன்ற மணிநகைகளும் மற்றும் அக நகைகளான கண், அழகிய பல்வரிசை நிறைந்த வாய், புன்னகை) அணிந்துள்ள காதலியுடன் (பிரிந்தப்பின்) நெருங்கி கூடும் பொழுதும் பெறும் இன்பம் ஆகும். ஒவ்வொரு முறைக் கூடும் பொழுதும் புதியதோர் இன்பதை அறிகிறேன் அவளிடம். ஆனால் அதுவும் அகத்தால் ஆழமாக நினைத்து கூடும் பொழுது மட்டுமே அறிய முடியும் என்று நூல்களுடன் ஒப்பிட்டு குறிப்புணர்த்துகிறார் திருவள்ளுவர்.

அறிதோறும் அறியாமையைக் காண்பது பற்றிய பழமொழிப் (332) பாடலொன்று:

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

ஓர் இன்பத்தை அடையும் பொழுது அங்ஙனம் அடையாது நின்ற நாளுக்கு வருந்துதல், சோம்பலின்றி அறியாதவனாக மதித்து ஆராயவே இந்த அறிவு தோன்றும். அது தோன்றுமாதலால் மேலும் மேலும் கற்றலான ஊக்கம் பிறக்கும். அதனான் மிகுந்த இன்பம் பெறலாம். சிறந்த பொருள்களை அறியும் அருமை நோக்கியே ஆசிரியர் ‘உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்‘ என அறிவதன் அருமைக் கூறப்படுகிறது,

திருக்கோவையார் (9) பாடலொன்று மேலும் வெளிச்சமாகவே, கீழ்வருமாறு கூறும்

உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் 
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோன்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே.

மேலும்: அஷோக் உரை

ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.

ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.

இன்றுவரையிலான மானுட வாழ்க்கை காட்டுவதொன்றே. அறிதொறும் அறியாமை கண்டு அறியமுடியாமையின் இரும்பாலான தொடுவானில் சென்று தலையறைந்து விழுந்து மடிபவர்கள்தான் அறிவுதேடுபவர்கள். நான் முழுமையை அறிய விழையவில்லை, அனைத்துக்கும் விடை தேடவில்லை. என் கைகள் ஆற்றும் செயலை மட்டும் அறிய விரும்புகிறேன். ஏனென்றால் நான் எனக்கு பொறுப்பேற்றுக்கொள்ள விழைகிறேன். அடுமனையில் சமைப்பவன் தான் இடும்பொருட்களில் எது நஞ்சென்றாவது அறிந்திருக்கவேண்டும் அல்லவா?

“அறியாமையால் சூழப்பட்டுள்ளது அறிவு. கருவை கருவறைக்குருதி என. அறிவு அறியாமையையே உடலெனக்கொண்டு எழுகிறது. அறியாமை அதன் ஊர்தி. சென்றடைவதுவரை உடனிருப்பது” என்றார் இளைய யாதவர். 


பரிமேலழகர் உரை
(புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல். (களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்'என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.).

மணக்குடவர் உரை
யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை. காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.

மு.வரதராசனார் உரை
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

 

குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
ஊடல் - தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு பொய்ச்சினம் பகைத்தல் வெறுத்தல்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்.

இவை -அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல்.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

கூடியார் - கூடியவர்கள் 

பெற்ற - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

முழுப்பொருள்
காதல் கொண்டதால் பெற்ற பயன் என்ன? காதலர்கள் இருவரும் காதலித்தாலும் அவர்களுக்குள்ளும் மெய்யாகவோ பொய்யாகவோ சிறு சிறு பிணக்குகள் வரும். பிணக்குகளால் இருவரும் ஆவேசம் கூட அடைவர். அவ்வூடலை இருவரில் ஒருவருரோ அல்லது இருவரும் அதில் உள்ள அறியாமையை உணர்ந்து அமைதியடைவர். சிறிது நேரத்திலோ அல்லது சிறிது நாட்களிலோ இருவரும் அவ்வூடல் பெரிதாவதை விரும்பாமல் அதனை நிறைவு செய்ய விரும்பி அவ்வூடலை முடித்து அதனை கொண்டாட கூடுவர்.  கூடும் பொழுது ஒருவரை ஒருவரை நுகருவர் (foreplay). காமம் அகம் சார்ந்த ஒரு விஷயம். ஆதலால் நுகரும் பொழுது ஒருவரை ஒருவர் உணருவர். தக்க நேரத்தில் புணருவர். புணரும் பொழுது குறிப்பறிந்து தக்க நேரத்தில் இருவரும் ஒருநேரத்தில் உச்சத்தை தொடும் பொழுது இன்பதை பெறுவர். அப்படிப் கூடி தழுவிப் புணரும் பொழுது இவரும் பெறும் இன்பமே இன்பம். அதனால் தான் ஊடலும் உணர்தலும் புணர்தலும் ஆகிய மூன்றும் காதலால் கூடிய காதலர்கள் பெற்ற பயன் என்றென்கிறார் திருவள்ளுவர்.

நெல்லிக்கனியை உண்டால் துவர்க்கும். ஆனால் சற்று நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீர் குடித்தால் இனிக்கும். அதுப்போல் தான் ஊடலும் கூடலும். முதலில் துவர்த்தது இறுதியில் இனிக்கும்.

இதைப் பெண்களுக்குரிய இயல்பாக நாலடியார் பாடலொன்று கூறும்; கண்ணனுக்கு இனிதான உடல் வனப்பை உடையவளாகவும், தன் காதலானது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்ளுபவளாகவும், அச்சம் உடையவளாகவும் ஊரில் உள்ள பிற ஆண்கள் அஞ்சி ஒதுங்கும் இயல்பை உடையவளாகவும், தன் கணவனுக்கு அஞ்சி, பணிந்து, காலமறிந்து அவனோடு பிணங்கிப், பின் இன்பம் உண்டாகும்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்றவளாகவும் கபடமில்லாத பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே சிறந்த மனைவியாவாள். அப்பாடல்:

“கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் – உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்”. (நாலடி 384)

மேலும்: அஷோக் உரை

 பரிமேலழகர் உரை
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.

மு.வரதராசனார் உரை
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

சாலமன் பாப்பையா உரை
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

 

குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
இல்  - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

தமது - tamatu   gen. of தாம், his.

பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி.

உண்டு - adv. part. of உண். - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால் - தன்மை அறிந்து

அம் - அழகு; நீர் மேகம் விகுதி சாரியை

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

அரிவை - பெண், இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுவரை உள்ள பெண்.

முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

முழுப்பொருள்
அந்த அழகிய அரிவையுடன் (இருபது முதல் இருபத்தைந்து அகையுள்ள பெண்ணுடன்) கூடி நான் கொண்ட இன்பம் எப்படிப்பட்டது தெரியுமா? என் உழைப்பில் ஈன்ற செல்வத்தில் இருந்து நான் மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பொழுது நானும் மற்றவர்களும் பெறும் மன இன்பம் போன்றதாகும். என் உழைப்பில் பகிர்ந்து அளிக்கும் இன்பம் பெருமையானது, அறமானது தூய்மையானது. அதுப்போல் இப்பெண்ணுடன் நான் கொண்ட புணர்ச்சியின்பமும் மிகவும் அறம் வாய்ந்தது. நேர்மையானது. தூய்மையானது. ஏனெனில் அது உள்ளத்தில் இருந்து அகத்தில் இருந்து வந்ததாகும். புற ஈர்ப்பால் வந்தது அல்ல. 

Wizard  of Oz கதையில் Dorothy சொல்வது போல ஒரு வசனம் வரும்.
"There is no place like home "
வீடு. தனக்கே தனக்கான வீடு என்பது பெரும் கனவு போல இருந்திருக்கிறது.

இலக்கிய உவமைகளில் வீடு முக்கியத்துவம் பெற்றதை இரண்டு இடங்களில் காணலாம்

குறுந்தொகையில் 83 வது பாட்டு
"தம்மிற் தமது உண்டன்ன " என்கிறது.

குறள் இன்னும் சற்று விரிவாகத் தலைவியைத் தழுவும் இன்பத்திற்கு இதனை உவமையாக்குகிறது.
"தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தம்மில் தமதுண் டன்ன” (குறுந் 83:3)
“தந்தமில் இருந்து தாமும் விருந்தொடும் தமரி னோடும்
அந்தணர் முதலோர் உண்டி அயில்வுறும் அமலைத் தெங்கும்” (கம்ப.நாட்டுப் 19)

“அம்மா அரிவையும் வருமோ” (குறுந் 63:3)
”அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை” (புறநா 349:5)

பரிமேலழகர் உரை
(இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று).

மணக்குடவர் உரை
தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.

மு.வரதராசனார் உரை
அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.
உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்

தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.
தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

தளிர்ப்பத் - தளிர்ப்பு - துளிர்க்கை; மனவெழுச்சி

தீண்டலான்-  தீண்டல் - தீண்டுதல்; பிறப்புஇறப்புமுதலியவற்றால்உண்டாவதாகத்கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல்

பேதைக்கு - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

அமிழ்தின் -  அமிழ்து - amiḻtu   * n. id. 1. Ambrosia.See அமிர்தம் அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64).2. Milk; பால் (பிங்.)  

இயன்றன -  இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.
இயைவு - இணக்கம்; பொருத்தம் சேர்க்கை

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
தலைவன் கூறுகிறான் - நான் தலைவியை அணைக்கும் பொழுது (சேரும் பொழுது, கூடும் பொழுது) எல்லாம் என் உயிர் துளிர்க்கிறது உள்ளம் எழுச்சி கொள்கிறது. ஏனெனில் அவளை நான் (அல்லது என்னை அவள்) தீண்டியதால் இப்படி ஆயிற்று. அப்படி என்றால் இத்தனை நாள் அவன் உயிர் இல்லாத எலும்பு சதை குவியலாக தான் இருந்தானாம். அவனை உயிருள்ள மனிதனாய் மாற்றியது எது தெரியுமா?  தலைவியின் அழகிய தோள்கள். அவை அமிர்தத்துக்கு ஒப்பானவை. ஏனெனில் கூடும் பொழுது அவன் உடலுக்கு அமரத்துவத்தை தந்து உயிர் துளிரச்செய்தது அவள் தோள். தோள்களின் சிறப்பை கூறுவதை காட்டிலும் புணர்ச்சியின் இன்பத்தையும் அது தரும் உள்ள உவகையையும் கூறுகிறது இக்குறள் என்றே எனக்கு தோன்றுகிறது. 

கூடும் ஒவ்வொருமுறையும் அப்படித் தோன்றுவதால் இது அடங்கிய பின் தோன்றும் உவகை அல்ல. உள்ளத்தால் உணரப்படுவதாவே தலைவன் கூறுகிறான். அதற்காகவே "தோறு" என்ற சொல்லையும் "அமிர்தம்" என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளான் வள்ளுவன். 

”நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே” (நற்.82:1-2)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.).

மணக்குடவர் உரை:
சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வேட்ட - வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம்

பொழுதின் - பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

போலுமேபோலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

தோட்டுணை - கணவன்

தோள் தாழ் (தோட்டார்) – கலந்தகாலத்து தோள்வரைத் தளர்ந்து தழைந்த

கதுப்பு - கன்னம், தாடை; தலைமயிர், கூந்தல்; பழத்தின்நடுவேயுள்ளகொட்டையைநீக்கிஅறுத்ததுண்டம்; பசுக்கூட்டம்.

கதுப்பினாள் - கூந்தல் உடையவள்

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
நாம் விரும்பும் பொருட்கள் எல்லாம் நாம் விரும்பிய பொழுதெல்லாம் நமக்கு பயன் தருகின்றன. அதுபோல பூக்களைச் சூடி தோள்வரை தழையதழைய கூந்தலை உடைய என் காதலியுடன் நான் விரும்பும் பொழுதெல்லாம் முயங்கினால் (கூடினால்) எனக்கு இன்பமே தருகிறாள் அவள். 

“தோட்டார் குழலியொடு” என்று சிலம்பிலும் (15:198, “தோட்டார் கதுப்பின் என்தோழி” என்று கலித்தொகையிலும் (117:10) வரும் எடுத்துக்காட்டுகள் தோட்டார் என்ற சொல்லை தோள் வரைத் தாழ்ந்த கூந்தலாகவே காட்டுகின்றன. தோட்டார் என்ற சொல் அகராதிகளில் காணப்படாத சொல்.

“வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்தோள்
பூட்டார் சிலைநுதலாட் புல்லாத் தொழியேனே”  (சீவக..1042)


என்ற சீவக சிந்தாமணி வரிகள் கூறுவது இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலின் யுடையாள் தோள்கள். (தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.).

மணக்குடவர் உரை
காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும், தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள். தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.


மு.வரதராசனார் உரை
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

வீழும் இருவர்க்கு இனிதே

குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

இருவர்க்கு - தலைவன் தலைவி இருவருக்கும் 

இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் ; இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

போழப் - போழ்தல் - பிளவுபடுதல்; பிரிவுபடுதல்; பிளத்தல்; ஊடுருவுதல்; அழித்தல்.

போழப்படா - புக முடியாத

படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய.  

முயக்கு - முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

முழுப்பொருள்
காதலில் ஆசையாக வீழ்ந்த இருவருக்கு எது இனிது தெரியமா? கலவி / புணர்ச்சி. எப்படிப்பட்ட புணர்ச்சி? மெல்லிய காற்றுக்கூட (வளிகூட)  இவர்களுக்கு நடுவே(இடையே) புகமுடியாத அளவுக்கு (போழப்படா) இவர்கள் இரண்டுபேரும் முயங்கி இருப்பது. புணர்ச்சியில் இன்பம் கொள்கிறார்கள். கலவி கொள்ளும் பொழுது  காற்றுக்கூட இவர்களின் நடுவே இல்லாமல் இவர்கள் ஒருமையாகி விடுகிறார்கள்.

ஆதலால் கல்யாணத்திற்கு முன்பு இருவர் கலவி கொள்வது முற்றிலும் இயற்கையானதே என்பதை நாம் இங்கு அறியலாம். அது தவறில்லை. அக்காலகட்டத்தில் அது இயற்கையென  எண்ணியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். பின்பு ஒழுக்க நெறிகள் மக்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம். அதனால் தான் இன்று கல்யாணத்திற்கு முன் கலவி என்பததை தவறாக பார்க்கின்றார்கள்.

அகநானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

“மெய்யில் தீரா மேவரு காமம்” (அகநா 28:1)
“வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையும் கழிபெருங் காமத்து” (அகநா 361:5,6)

எனக்கு ஸ்பீடு(வேகம்/speed) எனும் 1994 ஆண்டு வெளிவந்த ஆங்கில/Hollywood படம் நினைவுக்கு வருகிறது. திரைப்படத்தில் இறுதியில் வரும் வசனம் / உரையாடல் கீழே. இதில் கலவி மூலமாக உறவை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்பதை கூறிக்கொள்கிறார்கள்.
Jack:
I have to warn you, I've heard relationships based on intense experiences never work.

Annie:
OK. We'll have to base it on sex then.

Jack:
Whatever you say, ma'am.

(Speed Movie - Intense Relationship Scene Link from 0:49)

மேலும்: அஷோக் உரை

மைதுனம் பற்றிப் பகர்ந்தபின், காமத்துப் பாலின் இன்னொரு குறள் சொல்லாமல் கட்டுரையை முடிப்பதா என இருமனதாக இருக்கிறது. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துக் குறள், காதலர் இருவர் சம்மந்தப்பட்ட குறள் அது. காதலன் என்ற சொல்லுக்கு பகரமாக நீங்கள் தோழன் – தோழி, தலைவன் -தலைவி, நாயகன் – நாயகி, கணவன் – மனைவி, Partner, Pair, Mate, சேர்ந்து வாழ்பவர் என்று எதையும் பொருத்திக் கொள்ளலாம்.

‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு’

எப்போதுமே அளபெடை பயன்படுத்தப்படும் திருக்குறள் உச்ச பட்சக் கவித்துவத்துடன் இருக்கும். வளி என்றால் காற்று. போழப்படா என்றால் புக முடியாத, முயக்கு என்றால் மைதுனம். காமத்தில் வீழ்ந்த இருவருக்கு, வளி இடை போழப் படா முயக்கு இனிதே. காற்றுக்கூட இடை புகமுடியாதபடி உடல்களின் நெருக்கம் கொண்ட கலவி இனிது. யாருக்கு அந்தக் கலவி இனிது? காதலில் வீழ்ந்த இருவருக்கு இனியது. காதலில் வீழ்ந்த நாயகி – நாயகன் இருவருக்கும் நுண்ணிய மெலிய தென்றல் காற்றுக்கூட இடையே நுழைய முடியாத அளவிலான இறுக்கமான உடற்சேர்க்கை மிக இனிமையானது. அப்போது அவர்கள் இருவர் அல்ல, ஒருவர். அந்தக் கலவி நிலை இருமையல்ல, ஒருமை.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்

குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
நீங்கின் - நீங்குதல்  - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்

தெறு - சுடுகை; கோபம்; அச்சம்; துன்பம்.
உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி

தெறூஉம் - தெறு -

குறு - kuṟu   VI. v. i. become short, diminish, குறுகு
குங்குதல் - குன்றுதல், குறைதல்.

குறுகுங்கால் - குறுகுங்குதல் - நெருங்கி வரும் பொழுது

தண் - taṇ   n. 1. [K. M. taṇ.] Coolness,coldness; குளிர்ச்சி (பிங்.) 2. Water; நீர் Brāh.3. Grace; love; அருள் தண்கலந்த சிந்தையோடு(சேதுபு. சீதைகுண்ட. 5)
குளிர்ச்சி - kuḷircci   குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death.. 

தண்ணென்னும் - குளிர்ச்சியாக 

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

யாண்டுப் - எங்கு; எப்பொழுது; ஆண்டு

பெற்றாள் - பெற்றாள்

இவள்? -இந்த பெண் (என் காதலி, தலைவி)

முழுப்பொருள்
பொருள் 1
தலைவன் நான் தலைவி இவள் அருகில் வரும்தோறும் மிக அருகில் இருக்கும் பொழுது என்னுடன் முயங்கும் (புணர்ச்சி கொள்ளுதல்) பொழுதும் குளிர்ந்தநீர்ப்போல குளிர்ச்சியாக அதாவது அன்பாக என்னிடம் நடந்துக்கொண்டாள்.  ஆனால் இவளை விட்டு நான் நீங்க போகிறேன் என்று தெரிந்தவுடன் நெருப்புபோல என்னை சுட்டெரிக்கிறாள். கோபம்கொள்கிறாள். குளிர்மையான நீர் போன்றவள் என்று நினைத்தேன். எங்கிருந்து இப்படிப்பட்ட சுட்டெரிக்கும் தீயை பெற்றாள் இவள் ?

நெருப்பு மூட்டி சற்று தொலைவில் இருந்து குளிர்காயும் பொழுது இதமாக இருக்கிறது. ஆனால் மிக அருகே சென்றால் சுடுகிறது அல்லவா? ஆனால் இங்கோ அருகில் இருக்கும் பொழுது இதமாக இருக்கிறது. விலகிச்சென்றால் சுட்டெரிக்கிறது. இது போன்ற தீயை எங்கு பெற்றாள் இவள்?  

பொருள் 2
இக்குறளை வேறு ஒரு மாதிரியும் பொருள் கொள்ளலாம். தலைவனும் தலைவியும் கூடும் பொழுது, பெண் தலைவனை எவ்வளவு விரும்புகிறாள் தன் அகத்தோடு உணர்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. தன் தலைவனை கூடும் பொழுது அவன் அவளை நெருங்கும் பொழுது குளிர்கிறாள். மகிழ்ச்சி அடைகிறாள். இன்பம் கொள்கிறாள். தலைவனும் அவ்வின்பத்தை கொடுக்கிறான் பெறுகிறான். அவ்வின்பத்தருணத்தில் தலைவன் சிறிதளவு பிரியும் பொழுது அச்சிறுப்பிரிவைக்கூட விரும்பாத தலைவி கோபம் கொள்கிறாள். தீயைப்போன்று சுடுகிறாள். [பின்பு என்ன, விலகும் தலைவனை அள்ளி அனைத்துக்கொள்கிறாள் தலைவி என்பதை யாரும் விளக்கவேண்டாம். ]

முயங்கும் பொழுதே பிரிவை விரும்பாத தலைவி எப்படி தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் பொழுது அதனை ரசிப்பாள்? அதான் அவள் சுடுகிறாள். பிரிவைப் பற்றியும் அதனால் வரும் துயரைப்பற்றியும் வரப்போகும் அதிகாரங்களில் விரிவாக காணலாம்.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் வருவதால் பொருள்-2ஏ பொருத்தமானதான பொருளாக எனக்கு தோன்றுகிறது.

பழம்பாடல் ஒன்று அழகாக இதைக் கூறும்.

“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து 
தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல்லாதே”


மற்றொரு நாலடியார் (90) பாடல் வரி, 
“நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி 
ஒளிப்பினும் காமம் சுடும்” என்கிறது.

“அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (குறுந் 257:5-6)

“கவவிற் கமைந்த காமக் கனலி
அவவுறு நெஞ்சத் தகல்விடத் தழற்ற” (பெருங் 2:18:8:9)

“நின் பிரிவினும் சுடு மோபெருங் காடென்றாள்’ (கம்ப.நகர்நீங்கு 226)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.).

மணக்குடவர் உரை
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.

மு.வரதராசனார் உரை
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

தீயென்றால் தொட்ட உடன் சுடும் என்று
     தீண்டி அதை உணர்ந்துள்ளோம் அனைவருமே
மாயப் பெண் இவளிடத்தில் உள்ள தீயோ
     மாற்றங்கள் கொண்டதுவாய் இருப்பதென்ன
தோய்ந்து அவளைத் துய்த்திருந்தேன் அப்போதெல்லாம்
     துடியிடையாள் தீயதனின் குளிர்ச்சி தேர்ந்தேன்
போய் வரலாம் என்றே தான் பிரிந்தேன் தீ
     போட்டு என்னை வறுத்ததினை உணர்ந்தேன் வெந்தேன்
பிரிகையிலே சுடுகின்ற இந்தத் தீயைப்
     பெண் மகளாள் பெற்றதிங்கு யாரிடத்தில்
அறிவதற்கு முயல்கின்றேன் முடியவில்லை
     ஆனாலும் அனுபவித்தே மகிழ்கின்றேன் நான்
துடியிடையைத் தொட்டவுடன் தீயைக் காணோம்
     தொட்டு உடன் விலகி நின்றால் குளிரைக் காணோம்
அட அட இப் பெண்ணாளை அடைந்ததிலே
     அறிவியலின் தோல்வியினைக் கண்டேன் நானும்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
பிணி - நோய்; கட்டுகை (Fastening,binding); கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை. 

பிணிக்கு - நோயிற்கு

மருந்து - maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

பிறமன் - மற்ற மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து (மந்திரம்)

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

இழைதல் - நூற்கப்படுதல்; உராய்தல் சோறுமுதலியனகுழைதல்; கூடுதல் நெருங்கிப்பழகுதல்; உள்நெகிழ்தல்; மூச்சுச்சிறுகுதல்; குறுமூச்சுவிடுதல்; மனம்பொருந்துதல்

அணியிழை - aṇi-y-iḻai   n. id. +.Woman, as adorned with jewels; பெண். அணியிழை தந்நோய்க்குத் தானே மருந்து (குறள், 1102).

தன்நோய்க்குத் - தன்னுடைய நோயிற்கு

தானே - தானே

மருந்து - maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)

முழுப்பொருள்
அணியிழைக்கு - அணிகள் சூடிக்கொண்ட பெண் என்ற புறவயமான அழகை திருவள்ளுவர் கூறியிருக்க மாட்டார். இழை என்றால் நெருங்கிபழகுதல், கூடுதல், மனம் பொருந்துதல். ஆதலால் இவர்கள் மனம் அழகாக பொருந்தியது என்ற பொருளே சரி என்று நான் நினைக்கிறேன்.

இவ்வுலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மருந்துகளை மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உடலில் உள்ள நோய்க்கு (அதாவது புறவயமான நோய்க்கு) மருந்து உண்டு.

ஆனால் அழகாக நெருங்கிப்பழகி உள்ளம் நெகிழ்ந்து மனம் பொருந்தி உண்டான காதலினால் நாங்கள் படும் ஆசைநோய்க்கு இவ்வுலகில் யாராவது மருந்து கண்டுப்பிடித்து உள்ளனரா? இல்லை. முடியவும் முடியாது. தன்னால் ஆன நோய்க்கு தானே மருந்து. இவர்கள் ஒன்றுக்கூடி காதலை பெருக்கிக்கொள்வதே இவர்களுக்கு மருந்தாகும்.

கலித்தொகை 89 பாடலில்? "மருந்து இன்று - மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த இன் நகை! தீதோ இலேன்;"  என்ற வரிகளுக்கு அர்த்தம் மன்னவன் சினந்தால் அதனைப் போக்கும் மருந்து உண்டா? என்னிடம் தவறு உண்டோ? நீ உன் இனிய புன்னகையால் என்னைக் கட்டிப் போட்டவள் ஆயிற்றே! நான் குற்றமற்றவன்.

ஆதலால் காதலில் ஒரு பிரிவு, சினம், ஊடல் அல்லது வேறு எதனாலும் நோய்வந்தால் அதற்கு மருந்து என்பது அவர்களே ஆவார்.

இதை நற்றிணைப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. 
“பெருந்தோட் குறுமகள் அல்லது 
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே” ! (நற் 80:8-9)

“அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறி தில்லயான் உற்ற நோக்கே” (நற் 140:10-11)

“களைநர் இல் நோய்செய்யும் கவின்” (கலி 58:9)
“நின்முகம் தான்பெறின் அல்லது கொன்னே
மருந்து பிறிதியாதும் இல்லேன்” (கலி 60-20-21)

”மென்பனி எரிந்த தென்றால் இவனிலை விளம்ப லாமோ
அன்பெனும் விடமுண் டாரை ஆற்றலாம் மருந்து முண்டோ” (கம்ப.மாரீசன் 100)

மாயாசனகப் படலத்தில் வரும் கம்பனின் பாடல் வரிகள் இன்னும் அழகானவை!

“மந்திரம் இல்லை, வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால் அமுதச் சொல்லீர்! (கம்ப.மாயாசனகப்.16)

கம்பராமயணத்தில் மிதிலையில் ஆசை நோய்க்கு மருந்தும் உண்டோ என்று கேட்கப்படுகிறது.

வாச மென் கலவைக் களி வாரி, மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்;
வீச வீச வெதும்பினள், மென் முலை;-

ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ? 80

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன்நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள். (இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.).

மணக்குடவர் உரை
நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம். இது புணர்வதன் முன்னின்ற வேட்கை

மு.வரதராசனார் உரை
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை
நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

உலகெங்கும் நோய்களுக்கு மருந்து கண்டார்
ஊர் போற்ற வாழுகின்றார் உண்மை உண்மை
பலமான அவர் அறிவு கண்டு போற்றி
பணிந்தவரைக் கேட்டு நின்றேன் எந்தன் நோய்க்கு
சரியான மருந்து எது என்று அவர்
சலிக்காமல் சிரிக்கின்றார் என்ன என்றேன்
விரிகின்ற விழியாளின் வழியாய் வந்த
வெம்மை நோய்க்கு அவள் தானேமருந்து என்றார்

Thirukkural - Management - Health - Counsel for Individuals
There are medicines, cures and treatments for external or physical injuries and diseases. But, the treatments, cures, and medicines for the diseases of the mind are found in the mind itself. Diseases are classified as psychosomatic and Soma psychic. Psyche means mind and Soma means body. Psychosomatic diseases are mind induced. Soma psychic diseases are body caused.

Though Valluvar has written Kural 1102 to refer to love sickness, the Kural can also be referred to diseases that are caused by one's own mind. A ladylove says that the disease caused by her lover can be cured only by her lover. So, the source of a disease has the cure in it. 

Medicine differ from ills, their enemies
But this my jewel is both disease and cure

It has been proved by many research works that 90% of the diseases is psychosomatic, that is., the diseases caused by mind. Cures for the diseases caused by the mind are found in the same mind. Mind can either make or mar our health. There is a popular saying in Tamil that one fourth of the cure for a disease is found in medicine and three fourth  of the cure for a disease is found in one's mind. So, one's mind is both creator and destroyer of diseases.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்

குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

தாம்வீழ்வார் - தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்); தாம் விரும்பும் மகளிர்

மென்றோள்  - மெல்லிய தோளுடைய மகளிர்

துயிலுதல் - உறங்குதல்; தங்குதல்; இறத்தல்; மறைதல்.

துயிலின் - (அவளுடன்) உறங்குவது போல

இனிது - இனிமையானது (சொர்க்கமானது); இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

கொல்  A poetic expletive--as in காணுங்கொல், he will see, அசைச்சொல். 2. A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி. 3. An imitative sound--as in கொல்லெனச்சிரித்தார்கள், they broke out into laughter, ஒலிக்குறிப்பு. 4. s. Suffering, distress, affliction, வருத்தம். (சது.) 5. [With suitable prefixes,] Gold or iron. 6. The blacksmith's caste; a blacksmith, கொல்லன். 7. A mason's trowel, கொல்லற்று. 8. (loc.) Brass or iron, nailed across a door, or gate, for strength, குறுக்குத்தாழ்.

தாமரை - s. the lotus, or water lily. தாமரைக்கொடி; ஒருபேரெண்; பதுமவியூகம்; எச்சில்தழும்பு.

கண்ணான் - கண் உடையவன்

தாமரைக்கண்ணான் - தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக் கண்ணை உடைய அந்த திருமாளின் (வைகுண்ட சொர்க்கம்) உலகம்

முழுப்பொருள்
ஐம்புலனும் (கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள) நுகர்வர்தற்குரிய தனது காதலுக்கு பாத்திரமான மகளிரின் மெல்லிய தோளில் துயிலும் துயிலைவிட இனிதான சொர்க்கம் இருக்குமோ ? அது அந்த தாமரைக் கண்ணையுடைய திருமாளின் சொர்க்கத்தை விடவா சிறியது  இது?

பி.கு: சமீபத்தில் கர்ணாடக சங்கீத பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் ஒரு (நேர்காணல் போன்ற ஒரு) காணொளியை கண்டேன் (Notes to myself - Bombay Jeyashree @ 1:14:53). அதில் அவர் Life of Pi என்ற ஒரு திரைப்படத்தில் பாடிய ஆராரோ ஆரிரரொ பாடல் உருவான விதத்தைப் பற்றி கூறியிருப்பார். அதில் ஒரு ஆராரோ ஆரிரரோ பாடல் முதலில் உருவான பொழுது சங்கீதம் நன்றாக இருந்தது என்று கூறியிருப்பார். ஆனால் அப்படத்தில் இயக்குனர் ஆராரோ ஆரிரரொ வகையான பாடல்களை கேட்கும் குழந்தைகள் சங்கீதத்திற்காக உறங்குவதை விட தாயிடம் அப்பாடல் மூலமாக கிடைக்கும் பாதுகாப்பு உணர்விற்காக உறங்குகின்றன என்று கூறினாராம். 

அப்பேட்டியை நேற்று கேட்டேன். இன்று (11-sep-2021) இக்குறளை யேதேச்சையாக ஒரு கூட்டு வாசிப்பில் வந்தது. அப்பொழுது தொடர்பு படுத்தி பார்த்தபொழுது, ஒரு உறவில் தலைவன் தன் அறம் (கடமை) தனை முறையாக செய்து பொருள் ஈட்டினால் அவன் இன்பத்தை (இன்பத்துபாலை) முழுமையாக அனுபவிக்க முடியும். அப்படி புறச்சூழலும் நன்றாக அமைந்து மனமும் மகிழ்ச்சியாகவும் பாதுக்காப்பு உணர்வுடனும் இருக்குமானால் அப்பொழுது தலைவனும் தலைவியும் ஐம்புலனும் அகமும் அறியுமாறு புணர்ந்தால் அவர்கள் அதில் உணரும் அவ்வின்பம் சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பத்திற்கு குறைவில்லாததாக கருதக் கூடும். அதுவும் கூடலில் உச்சத்தை தொட்டப்பின் அவர்கள் துயிலும் பொழுது நிறைவாக உறங்கும் இன்பமே இன்பம். 

ஒப்புமை
”தாம்வீழ்வார் ஆகம் தழுவுவோர்” (பரி10:31)

“வேய்புரை மென்தோள் இன்துயில்” (குறிஞ்சிப் 242)
“அரிவை தோளிணைத் துஞ்சி” (குறுந் 323:6)
“வேயுறழ் மென்றோள் துயில்பெறும்” (கலி 104:24)
“தோள்புலம் பகலத் துஞ்சி” (அகநா.187:1)
“முருந்தேர் முறுவல் இளையோள்
பெருந்தோள் இன்றுயில் கைவிடு கலனே” (அகநா 193:13-4)

“விரிதிரைப் பெருங்கடல் வளை இய வுலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போன் மேனி
மாண்வரி யல்குற் குறுமகள்
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே” (குறுந்.101)

பரிமேலழகர் உரை
'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
விளக்கம் (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நிலையான பேரின்பத்தைப் பெறற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இங்ஙனம் நைவது தகாதென்று கழறிய பாங்கற்குச் சொல்லியது)

தாமரைக் கண்ணான் உலகு - நீ மிகச் சிறந்ததாக வுயர்த்திக் கூறும் செங்கண்மாலின் வீட்டுலகம்; தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல்- ஐம்புல வின்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில்போல இன்பஞ்சிறந்ததோ?

இஃது ஒரு பெண்ணின்பப் பித்தன் கூற்று;

"தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பா மகல்வானத்
தும்ப ருறைவார் பதி."

(நாலடி.137)

என்னும் போக்கில் அமைந்தது. ஐம்புல வின்பம் நுகர்வார் என்னும் பெயர் "கண்டுகேட் டுண்டுயிர்த்து" என்னுங் குறளினின் றமைக்கப்பட்டது. தாமரைக்கண்ணா னுலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; திருவள்ளுவர் சிவனுந்திருமாலும் ஒன்றென்னும் கடவுண் மதத்தாராதலின், சிவனடியார்க்கும் திருமாலடியார்க்கும் பொதுவாக ஒரே வீட்டுலகங்கொண்டாராதலானும்; பெண்ணின்பச் சிறப்பை உயர்வு நவிற்சியாகக் கூறுதற்கு வீட்டுலகத் தின்பத்தோ டுறழ்வதே யேற்குமாதலானும்; அவ்வுரை பொருந்தாதென்க. இனி, இதனாலே,சிவ வீட்டுலகமும் திருமால் வீட்டுலகமும் வெவ்வேறென்று கொண்டு ஏற்றத்தாழ்வு கூறும், குறுநோக்காளர் கூற்றும் பொருந்தாமை காண்க. இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழ வறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது." என்றும், காலிங்கர் கூறியதும் பெருந்தவறாம். இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கரடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல். திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

மணக்குடவர் உரை
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

மு. வரதராசன் உரை
தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
புலர் காலைப் பொழுது. மணம் முடித்துச் சில நாட்களே ஆன இளம் தம்பதியினர். அதிகாலை எழுந்து குளித்து தலை ஈரம் காய துண்டினைத் தலையில் சுற்றிக்கொண்டு துணைவனுக்கு தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கிச் செல்கின்றாள் பனிமலர் போன்று.

உறக்கத்தில் இருப்பவனைத் தொடாமல் எழுப்ப மேஜையினைத் தட்டுகின்றாள். உறக்கம் கலைந்தவனோ நீராடி நிற்கும் நிர்மலமான அழகில் திளைத்து வியக்கிறான்.

தேநீரை மேஜையில் வைத்து அருந்தச் சொல்லுகின்றாள் அழகுப் பெண்.

அருகில் வந்து தரச் சொல்கின்றான் அவன்.

நோக்கம் புரிந்து கொண்டவள் கவனமாக மறுக்கின்றாள்.

ஒன்றும் செய்ய மாட்டேன் உறுதி அளிக்கின்றான் அவன்.

அவளைப் பொறுத்த வரையில் அவனது உறுதி மொழி உறுதியாய் இராது என்று
உணர்ந்திருந்தாள்.

நான் நீராடி விட்டேன் சீக்கிரம் எழுந்து வாருங்கள்.குளித்தீர்கள் என்றால் கோயிலுக்குப்போகலாம் என்றாள்.

என்னை நம்ப மாட்டாயா என்று கெஞ்சினான்.

நம்புகிறாற் போல் நீங்கள் நடந்து கொண்டதில்லையே என்றாள்.

நீ பக்கத்தில் வந்து கொடுத்தால்தான் அருந்துவேன். இல்லையெனில் எழவே மாட்டேன்என்றான் அவன்.

சரி கோப்பையை மட்டும்தான் தொட்டு வாங்க வேண்டும் என்றாள்.

ஆணை என்றான்

அருகில் சென்றாள்

தந்த உறுதியில் உறுதி காத்தான் அவன்

வியந்தாள் அவள்.

கோப்பையைத் திரும்பப் பெறும் போது கைகளைப் பற்றிக் கொண்டான் அவன்.

திருட்டுத்தனம் என்றாள் அவள்.

உரியவளைத் தொடுதல் திருட்டுத்தனமா என்றான்.

கோப்பையை மட்டும் தான் தொடுவேன் என்று சொல்லி விட்டு இது என்ன ஏமாற்றுஎன்றாள் அவள்.

வாங்கும்போது மட்டும்தானே சொன்னேன் என்றான் அவன்.

அவன் தொடாமல் விட்டிருந்தால்தான் தோகை துவண்டிருப்பாள்.

கட்டித் தழுவிக் கொண்டான்.

விட்டு விலக முயற்சிப்பவள் போல் அவளும் கட்டித்தான் கொண்டாள்.

மீண்டும் குளிக்க வேண்டும் என்று அலுப்பது காட்டி அணைத்துக் கொண்டாள்.

என்னை விட்டு விட்டு தனியாகக் குளிக்கக் கூடாது இனிமேல் என்றான் அவன்.

கனிச் சுவைகள் அனைத்தும் கன்னியிடம் பெற்றான்.cமலர்ந்த பெண்ணின் மலர்ந்த கண்கள் மயங்கிச் செருகிக் கொள்ள அந்த மென் தோளில் அவன் சாய்ந்தான். உறங்கியும் போனான்.

தாயாகிப் பெண்ணாள் அவன் தலைக்குள் விரல் கொண்டு கோதி அவனைக் கொஞ்சுகின்றாள். மாட்டேன் என்று சொன்னவுடன் எங்கே சரி என்று எழுந்து விடுவானோ என்று தயங்கியதையும் ஆனால் அவன் தழுவிக் கொண்டதையும் எண்ணி எண்ணி மகிழுகின்றாள்.

மெல்ல விழிக்கின்றான் மென்னகையாள் கோபிக்கின்றாள். கோபமில்லாக் கோபம்.மாட்டேன் மாட்டேன் என்றேன். போங்கள் என்று சிணுங்குகின்றாள்.

அவன் கல கலவென்று சிரிக்கின்றான்.

அவளை வெட்கம் வாட்டுகின்றது. எதற்குச் சிரிக்கின்றீர்கள். இதற்குத் தான் நான்மாட்டேன் மாட்டேன் என்றேன். என்றாள்.

அட கிறுக்கே எதற்கு நான் சிரித்தேன் தெரியுமா. நேற்று வீட்டிற்கு வரும் வழியில்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னார் தாமரைக் கண்ணனின் உலகைச் சென்றடைவதுதான் பேரின்பம் என்று. உனது இந்த மென் தோளில் துயில்வதனை விடவா சொர்க்கம் பெரியது என்று கருதினேன். சிரிப்பு வந்தது என்றான். தோளின்தலையை மார்பிற்கு மாற்றினாள் செல்லப் பெண்.

குறள்
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு

கண்டுகேட்டு உண்டுயிர்த்து

குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
கண்டு - கண்ணால் கண்டும்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேட்டு - செவியால் கேட்டும்

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டு - நாவால் உண்டு

உயிர்-த்தல் - uyir-   11 v. [K. usir, M. uyir.]intr. 1. To revive; to regain consciousness;to be re-animated; உயிர்பெற்றெழுதல். 2. To bein vigorous functioning activity; தொழிற்படுதல் அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ 3, 4).3. To breathe hard; மூச்செறிதல் உரைதடுமாறாவுயிர்த்து (பாரத. பதினெட். 173). 4. To be waftedas fragrance; கமழ்தல் உயிர்த்த தாமத்தன (கம்பரா. நிகும். 114). 5. To breathe one's last; இறந்துபடுதல் உயிர்ப்பது மோம்பி (சீவக. 1989).--tr. 1.To give birth to, bring forth; ஈனுதல் குழந்தையை யுயிர்த்தமலடிக் குவமைகொண்டான் (கம்பரா.உருக்காட். 65). 2. To smell; மோத்தல் கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியும் (குறள், 1101). 3. To say,declare; கூறுதல் விட்டுயிர்த் தழுங்கினும் (தொல்.பொ. 111). 4. (Math.) To multiply a number;பெருக்குதல். அம்மு வாறுமுயிரொடு முயிர்ப்ப (நேமிநா.3, உரை). 5. To emit, send forth; வெளிப்படுத்துதல் கொங்குயிர்த்த பூந்தடத்துலாய் (நைடத. நாட்டுப். 5).  

உயிர்த்து - மூக்கால் நுகர்ந்தும் / மோந்தும்

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.
உற்று - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  
உற்று -  இன்புறுதல்

ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.

ஒண்தொடி - பைந்தொடி, பொற்றொடி, ஒளிமிக்க வளையல் வளையல், பெண்கள் கையில் அணியும் அணிகலன்; ஒண்டொடி = ஒண்(மை) + தொடி;
ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர் (புறநானூறு)

தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்

ஒண்தொடி கண்ணே  - ஒளிமிக்க வளையல்கள் அணிந்த நல்ல அழகிய பெண்ணின் கண்ணில்

உள - உள்ளது

முழுப்பொருள்
விழிகளால் கண்டு
செவிகளால் கேட்டு
நாவால் சுவைத்து
மூக்கினால் முகர்ந்து
(மேலே சொன்ன நான்கும் புறவையமான புலன்கள் தரும் இன்பம்)
அன்பினால் இன்புற்று காதல் கொள்வது
(காதல் இன்புறுவது என்பது அகவயமான புலன் இன்பம்)
என
ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும் இன்பம்
பெண்ணிடம் மட்டுமே உள்ளது.

பாரதியாரின் குறிப்பு (தமிழ் நாட்டு நாகரிகம் என்னும் கட்டுரையில் இருந்து)
புகழ் அதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனியபக்‌ஷணங்களையும் கணிகளையும் உண்டல் மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகாரம் இல்லாததனவும் ஆதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலே சேர்க்கவில்லை.

கண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே தானுள்ளது என்பது அக்குறளின் பொருள். இதனுடன் உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள் அதாவது மனிதப்பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும்பயன்களைக் கணகிடப்புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையே இன்பமெனும் பொதுப் பெயரால் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும்: அஷோக் உரை
மணிமேகலையில் வரும் கீழ்காணும் வரிகளைப் பார்ப்போமா?

இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று
மன்னவ னறியான் மயக்க மெய்தாக்
கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்
பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த
மலர்வா யம்பின் வாசங் கமழப்
பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்
பொருவரு பூங்கொடி போயின வந்நாள்

மேலும் பல இலக்கிய எடுத்துக்காட்டுகள், பெருங்கதை, சீவகசிந்தாமணி, திருவாய் மொழி, கம்ப இராமாயணம் போன்றவற்றிலும் இக்குறளின் கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காணலாம்.


”வாயினும் செவியினும் கண்ணினும் மூக்கினும்
மேதகு மெய்யினும் மோதல் இன்றி
உண்டும் கேட்கும் கண்டும் நாறியும்
உற்றும் மற்றிவை சுற்றம் இன்றி
ஐம்புல வாயிலும் தம்புலம் பெருக
வைகல் தோறும் மெய்வகை தெரிவார்” (பெருங் 2.15:64:9)

“ஏலங் கமழ்குழல் ஏழை யவரன்ன
ஆலைக் கரும்பின் அகநா டணைந்தான்” (சீவக.1613)

“மகளிரைப் போலே ஐம்புலனுக்கும் வேண்டும்
பொருள்களை உடைய மத்திம தேசத்தைச் சேர்ந்தான் என்க” (ஷ ந.உரை)

”கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளவென்று பண்டையோர்
கட்டுரையே மேம்படுத்தாள்” (திருக்கைலாய ஞானவுலா 173-4)

“கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்” (திருவாய் 4.9:10)

“பண்டுநிகழ் பான்மையினால் பசுபதிதன் அருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம் புணர்ந்த வன்றொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்
கண்டு கேட்டுண்டுயிர்த்துற் றமர்ந்திருந்தார் காதலினால்” (பெரிய 3426)

“பொன்னின் சோதி போதினி னாற்றம் பொலிவேபோல்
தென்னுண் டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோ
டன்னம் மாடும் முன்றுறை கண்டங் கயனின்றார்” (கம்ப.மிதிலைக்காட்சி.23)

நன்றி: KFTD TTAMIL
காதல் தோன்றினால் அதில் காமம் இருந்தே ஆகவேண்டும்.  காமம் இருந்தால் கூடலும் இருக்க வேண்டும்.  அந்தக் கூடலிலும், கூடிக் களித்தபின் உள்ளதில் தோன்றும் இன்பத்தையும் பற்றிய அதிகாரம் ‘புணர்ச்சிமகிழ்தல்’.

“கண்ணால் கண்டு, காதல் கேட்டு, நாவால் ருசித்து, மூக்கால் முகர்ந்து, அன்பால் இன்புற்று காதல் கொள்ளும் ஐம்புலன்களும் ஒரே நேரத்தில் விருந்து படைக்கும் திறன் அழகிய, பொருத்தமான வளையல்கள் அணிந்த உன்னிடத்தில் மட்டுமே உள்ளது.” என்று நாயகியை தலைவன் புகழும் வண்ணம் அமைந்துள்ளது குறள்.

எல்லா அனைத்து  புலன் சார்ந்த இன்பங்களில், உச்ச உயர்வான, ஒப்புயர்வற்ற  மகிழ்தல் என கருதப்படும் ஐம்புல இன்பங்களும் நிறைந்த  காம இன்பம் ஒரு பெண்ணிடம் நிறைந்துள்ளன என்பதை திருவள்ளுவர் இக்குறள் மூலம் கூறுகிறார்.

கூடலில் உள்ள தேக சுகம் பற்றியல்லாமல் அதன் முன்பும் பின்பும் வரும் நுண் உணர்ச்சிகளை அடிகோடிடும் விதம் இந்த அதிகாரத்தில் மிகவும் இரசிக்கதக்கது.  சாதாரணமாக ஒரு சமையத்தில் ஒரு புலன் மூலமே நாம் இன்பம் அனுபவிப்போம்.  கூடலில் ஐந்து புலன்களும், மூன்று காலத்திலும் ஒரு சேர இன்பம் சுகிக்க வைக்க தலைவியோடு கூடுவதால்  மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது இதில் தொக்கியுள்ள அர்த்தம்.  கூடலில் உள்ள இன்பம் அதை அனுபவிப்பதாலும், அதை எதிர்பார்ப்பதாலும், பின்னர் அசை போடுவதாலும் பல மடங்கு அதிகரிக்க படுவதை சுட்டிகாட்டுகிறது குறள்.

பரிமேலழகர் உரை
இயற்கைப் புணர்ச்சி (சுட்டியை சொடுக்கவும்) இறுதிக்கண் சொல்லியது. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள்கண்ணே உளவாயின.

விளக்கம் (உம்மை, முற்று உம்மை. தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)

பி.கு
இயற்கைப் புணர்ச்சி
முன்னர் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தல்; கூடிமகிழ்தல்; அன்பு காட்டுதல் ஆகியவை இயற்கைப் புணர்ச்சிஎனப்படும். இது தெய்வத்தால் நிகழும்; அல்லது தலைவி விருப்பத்தால் நிகழும்.

மணக்குடவர் உரை
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள. இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

ஐம்புலனின்பமே இல்லாள் [நன்றி: குருநாதன்]
சமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை. காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக்
கணவன் கூறுகிறான்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.          
              
தன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்பு. 

கண்களுக்கான நிறைவுப் பயிற்சி இது. கண்களின், அதன் பயன்பாடுகளின் அருமை பெருமைகளையெல்லாம் அறிந்து உணர்ந்து, அந்தக் கண்களை பலப்படுத்துகிற, பார்வைக்கு உரமூட்டுகிற நிறைவுப் பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபடுவது, கண்களுக்கும் கண்களால் நமக்கும் நன்மைதானே?

'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள'

காதலியின் பெருமையை காதலன் சொல்வதாக வள்ளுவப் பெருந்தகை எழுதிய திருக்குறள் இது. காதல் என்பது ஆசைப்படுவது; அன்பு செய்வது; நேசத்துடனும் கனிவுடனும் பார்ப்பது! அப்படியரு கனிவுடன், நேசத்துடன், பிரியத்துடன், மிகுந்த வாஞ்சையுடன் நாம் நம் உடலைப் பார்க்கத் துவங்கிவிட்டால் எப்படியிருக்கும்? எந்த நோய்களும் தாக்காதவாறு, பூரண பொலிவுடன் விளங்கும் நம் தேகம். என்ன, உண்மைதானே!

ஐம்புலன்களையும் காதலிக்கத் துவங்குங்கள். நம் விருப்பத்துக்கும் நேசிப்புக்கும் உரியவர் களைக் கொண்டாடுவதுபோல், மதிப்பது போல், நம் உடலையும் மதித்து நேசித்தால், உடலானது எந்தச் செய்கூலியும் சேதாரமும் இன்றிச் சீராக இயங்கும். அதிலும், 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து...' என்பதில் முதலாவதாக இடம்பிடித்த கண்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நம் கடமை!

குறளும் தேவாரமும்
பாடல் எண் : 267
பண்டுநிகழ் பான்மையினால்
    பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
    மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
    புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
    றமர்ந்திருந்தார் காதலினால்.

பொருள்:
முன் திருக்கயிலாய மலையில் நிகழ்ந்த நியதியால், உயிர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் அருளாலே, வண்டுகள் மொய்த்திடும் கூந்தலையுடைய சங்கிலியாரைத் திருமணம் செய்த நம்பிகள், தாமரை மலர்மேல் இருக்கும் திருமகளின் வனப் பையும் புறங்கண்ட அத்துணை அழகுடைய தூய நலமுடைய சங்கிலி யாரைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் விருப்பம் மீதூரத் துய்த்திருந்தார்.

குறளும் வைரமுத்துவும்
இந்த குறள் ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தில் ‘அவள் வருவாளா’ என்ற பாடலில்  அமரர் ஷாகுல் அமீது என்ற பாடகர் பாடும் வாரு வரும்.  இதனை கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியிருப்பார்.

பாடலில் இருந்து சில வரிகள்

அவள் வருவாளா 
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை 
ஒட்டவைக்க அவள் வருவாளா
.............
.............
அவளை ரசித்தபின்னே 
நிலவு இனிக்கவில்லை
 மலர்கள் பிடிக்கவில்லை
கண்டு கேட்டு 
உண்டுயிர்த்து உற்றறியும் 
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து 
நானும் பிறந்ததற்கு 
பொருளிருக்கு பொருளிருக்கு
.............
.............

உடல் உறவில் பயன்கள்
கீழ்க்காணும் சுட்டிகளை தட்டவும்


எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே 

அத்தியாயம் 22 // உணவும் உடலுறவும் 
"காமம் என்பதும் உணவு, மற்றும் நீர் போன்றே முக்கியமானது. தேவையற்ற அடக்கமும், கட்டுப்பாடும் இன்றி, இம்மூன்றின் வேட்கையையும் தணித்தல் அவசியம்."  — Marquis de Sade 
எந்தவிதமான சுவையும் சேர்க்காது, வெற்றுச் சோற்றையோ, இட்டிலியையோ அல்லது ரொட்டியையோ நாம் உண்ண முடியுமா? குறைந்தபட்சம் உப்பையோ அல்லது மசாலாவையோ இவற்றோடு நாம் எதிர்பார்ப்போம் எதிர்பார்ப்போம் இல்லையா? இல்லை இனிப்பையாவது சேர்த்துக்கொள்வோம் அல்லவா?  இப்படி வெறுமையாக சுவையற்ற உணவை, நொந்து கொள்ளாது, ஒருமுறையாவது உண்ண இயலுமா?  

காமம் என்பதும் உணவு போன்றதே. புலனின்பத்துக்காக, அவை பயன்பட்டாலும், நம் பசியையும் அவையே போக்குகின்றன. வெற்றுச் சோறு நம் பசியைத் தணிக்கும் என்றாலும், நாம் சுவைகளைச் சேர்க்காது உண்டு, நம்மை நாமே வருத்திக்கொள்வதில் பயன் இல்லை. அதைப்போலவே, காமத்தின் சுவையையும் இன்பத்தையும் ஏன் நாம் புறக்கணிக்கவேண்டும்? அப்படிச் செய்வதற்கான தேவைதான் என்ன? நம் உடலின் சிறிய பாகமான நம் நாவே உணவின் ருசிக்காக ஏங்கும்போது, நம் உடல் மட்டும் இன்பத்துக்கும், ஆசைக்கும் ஏங்குவதில் என்ன தவறு? ஆனால், காமம் என்று வரும்போது, நாம் என்ன செய்கிறோம்? நாம் நம்மையும், நமது துணைவரையும் புறக்கணிக்கிறோம். சேர்த்து உண்ண ஏதுமற்ற நிலையில், வெற்று சோற்றை நம் துணைவருக்குக் கொடுத்துவிட்டு, அவர் உண்பதை நம்மால் பார்க்க இயலுமா? அது பரிதாபமாக இருக்கும் அல்லவா? 

எல்லா ஆண்களும், தங்கள் விந்துவை வெளியேற்ற ஒரு துவாரம்  மட்டுமே  தேவை எனக் கருதினால், அவர்கள் பெண்களைத் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டு, கழிவறையின் இருக்கையையே பயன்படுத்திக்கொள்ளலாம். அத்தகைய கழிவறை இருக்கையாக தாங்கள் பயன்படுத்தப் படுவதைத் தவிர்த்து, பெண்கள், சுய இன்பத்தால் தங்கள் வேட்கையைத் தணித்துக்கொள்ளலாம்.