குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]
பொருள்
பொருள்
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.
தமது - tamatu gen. of தாம், his.
பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி.
உண்டு - adv. part. of உண். - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - தன்மை அறிந்து
அம் - அழகு; நீர் மேகம் விகுதி சாரியை
மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.
அரிவை - பெண், இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுவரை உள்ள பெண்.
முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
முழுப்பொருள்
அந்த அழகிய அரிவையுடன் (இருபது முதல் இருபத்தைந்து அகையுள்ள பெண்ணுடன்) கூடி நான் கொண்ட இன்பம் எப்படிப்பட்டது தெரியுமா? என் உழைப்பில் ஈன்ற செல்வத்தில் இருந்து நான் மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பொழுது நானும் மற்றவர்களும் பெறும் மன இன்பம் போன்றதாகும். என் உழைப்பில் பகிர்ந்து அளிக்கும் இன்பம் பெருமையானது, அறமானது தூய்மையானது. அதுப்போல் இப்பெண்ணுடன் நான் கொண்ட புணர்ச்சியின்பமும் மிகவும் அறம் வாய்ந்தது. நேர்மையானது. தூய்மையானது. ஏனெனில் அது உள்ளத்தில் இருந்து அகத்தில் இருந்து வந்ததாகும். புற ஈர்ப்பால் வந்தது அல்ல.
Wizard of Oz கதையில் Dorothy சொல்வது போல ஒரு வசனம் வரும்.
"There is no place like home "
வீடு. தனக்கே தனக்கான வீடு என்பது பெரும் கனவு போல இருந்திருக்கிறது.
இலக்கிய உவமைகளில் வீடு முக்கியத்துவம் பெற்றதை இரண்டு இடங்களில் காணலாம்
குறுந்தொகையில் 83 வது பாட்டு
"தம்மிற் தமது உண்டன்ன " என்கிறது.
குறள் இன்னும் சற்று விரிவாகத் தலைவியைத் தழுவும் இன்பத்திற்கு இதனை உவமையாக்குகிறது.
"தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”தம்மில் தமதுண் டன்ன” (குறுந் 83:3)
“தந்தமில் இருந்து தாமும் விருந்தொடும் தமரி னோடும்
அந்தணர் முதலோர் உண்டி அயில்வுறும் அமலைத் தெங்கும்” (கம்ப.நாட்டுப் 19)
“அம்மா அரிவையும் வருமோ” (குறுந் 63:3)
”அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை” (புறநா 349:5)
பரிமேலழகர் உரை
(இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று).
மணக்குடவர் உரை
தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.
மு.வரதராசனார் உரை
அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.
No comments:
Post a Comment