Skip to main content

Posts

முடிவும் இடையூறும் முற்றியாங்கு

குறள் 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் முடிவும் - இறுதி; எல்லை; அந்தம்; தர்மானம்; முடிவான உட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு இடையூறும் -  இடர், இடர்ப்பாடு, துன்பம், தடங்கல், வருத்தம், வறுமை, ஆபத்து முற்றி - முற்று, முடித்தல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி; ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை முற்றியாங்கு - அச்செயலை முடித்தல் எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எய்தும் -  நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும் படு - நன்மை, மகா, மிகுதியைக்காட்டுமோரடை சொல் படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை. பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர் படுபயனும் - மகா பயன் பார்-த்தல் - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. T...

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்

குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். [பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பெயக்கும்  - நன்மை/தீமை பெயக்கும் என்று சொல்வோம். ஒரு செயலினால் நன்மையோ தீமையோ பலனாக உண்டாகும்/பெயக்கும் காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். பெயக்கண்டும் - பெயக்கும் + கண்டு  - இச்செயலினால் வரும் பலன் என்னெவென்று அறிந்த பிறகும் நஞ்சு - விடம்; தீயது; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசைமுதலியன. உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் நஞ்சுண்டு  - நஞ்சினை உண்டு. விஷம் உண்டு அமைவர் - அமைவு - 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை. (குறள்,956, உரை.)  ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178). நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740) ; அமைதி; ஒப்பு; அமைவு; அமர்) நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்...

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்

குறள் 266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தவஞ்செய்வார் - தவம் செய்வார்;  பற்று அற்று வாழ்வோர்கள் கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில் வேத சம்பந்தமான சடங்கு; தொழில், இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. தங்கருமஞ் - தம் கருமம் - தான் செய்ய வேண்டிய செயல்களை செய்வார் - செய்வார்கள் மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) மற் றல்லார் - மற்று அல்லார் - மற்றவர்கள் அவம்   - வீண்; பயனின்மை; கேடு; ஆணை; அழைப்பு; வேள்வி; ஆகாயத்தாமரை ...

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்

குறள் 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற  படல்ஒல்லா பேதைக்கென் கண் [காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்] பொருள் மடல்  -  ஊர்தல் - மடலூர்-தல் - தான் காதலித்ததலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலானகுதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல் யாமம் - நள்ளிரவு; சாமம்; இரவு; இடக்கைமேளம் யாமத்தும்  - இரவிலும். அதாவது பகல் மட்டும் அல்லாது இரவிலும் உள்ளுதல் -  நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். உள்ளுவேன்   - மனதில் நினைத்துக்கொண்டிருப்பேன் உள் - உள்ளே - மனதில் உள்ளு -  உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. உள்ளல், உள்கல், உள்குதல் உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.  மன்ற - ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக. s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி படல்  - ஓர்அடைப்புவகை; மறைப்புத்தட்டி; பூந்தடுக்கு; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக் கட்டையிலுள்ள குழி; உறக்கம் ஒல்லா ...

உள்ளியது எய்தல் எளிதுமன்

குறள் 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்  உள்ளியது உள்ளப் பெறின் [பொருட்பால், அரசியல்,  பொச்சாவாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பொச்சா -  பொச்சாப்பு - மறத்தல் - மறதி பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை உள்ளி  - மனதில் நினைத்து உள் - உள்ளே - மனதில் இ - demonstrative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. -- are combinations; 2. a feminine appell, termination as, கூனி; 3. see any grammar for other terminations. உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.  எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எய் - எறி (cast, throw) எளிது  - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது. மன்  - part. 1. An expletive; ஓ...

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

குறள் 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். [காமத்துப்பால், கற்பியல்,  உறுப்புநலனழிதல்] பொருள் சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை; கழிகாமம் நமக்கு -   நமக்கு ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல். ஒழிய - தவிர;  நீங்க; கெட. ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease'] நமக்கொழியச்  - நமக்குக் கிடையாது சேண் -  அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம். சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். சென்றார் - சென்றவர் சேட்சென்றார் - அகல தொலைவிற்கு சென்றவர் உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல...

கேட்டினும் உண்டோர் உறுதி

குறள் 796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை  நீட்டி அளப்பதோர் கோல் [ பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல் ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கேட்டல் -  செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேட்டினும் - நமக்கு கேடு உண்டாகும் தருணத்திலும்  உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன். உண்டோர்  உறுதி   - உண்டு ஒரு நன்மை (உறுதியாக தெரிந்து கொள்ளக் கூடிய) கிளைஞர் - உறவினர்; நட்பினர்; மருதநிலமாக்கள். கிளைஞரை - நமது நண்பர்களை  நீட்...