Skip to main content

Posts

சிறைகாக்கும் காப்பென் செய்யும்

குறள் 57 சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை [அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சிறை -  காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று. காக்கும் - காத்தல் -  kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தா...

ஒருபொழுதும் வாழ்வது அறியார்

குறள் 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. [அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை] பொருள் பொழுது -  காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன் ஒருபொழுது - ஒருகாலம்; ஒருசந்தி. ஒருபொழுதும்  - எந்த ஒரு பொழுதும்; ஒரு காலமும் வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழ்வது - எப்படி வாழ்வது என்று. வாழ்க்கை என்றால் என்ன என்று. வாழ்வின் நிலையாமை என்ன என்று. (உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை. ஒரு நாள் உடம்பை விட்டு உயிர் பிரியும் என்ற நிலையாமை) அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியார்   -  அறிய மாட்டார்கள். அறியார் - அறிய மாட்டார்கள். கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல். கருதுப - (ஆனால்) எண்ணிக்கொண்டு இருப்பார்கள் கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச...

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்

குறள் 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். [பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை] பொருள் தெரிந்த - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல். இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் தெரிந்த இனத்தொடு - ஒருவர் ஒரு செயலை செய்ய அதற்குத் தேவைதான ஆற்றலுடைய அதை முடிக்கக்கூடிய சரியான துணை மக்களுடன்  தேர்ந்து - தேர்தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திர...

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

குறள் 211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு  என்ஆற்றுங் கொல்லோ உலகு [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல் ] பொருள் கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டா - வேண்டாம்  ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம். கடப்பாடு - கடமை; முறைமை; கொடை; ஒப்புரவு; அதிகப்படுதல். மாரி - மழை; நீர்; மேகம்; மழைக்காலம்; பூராடநாள்; புள்வகை; சாவு; அம்மைநோய்; ஒருதேவதை; துர்க்கை. மாட்டு -  அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும் முறை; அடி; சொல். மாரிமாட்டு - என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். ஆற்றுங் - ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்...

Kural 0341 - 🔓 சுதந்திரத்தின் சூத்திரம் — இது அல்ல இது அல்ல - The formula of freedom — Not this, Not this

Key Questions How can I live without fear of change, loss, or uncertainty? Is saying “no” a kind of power? Socrates : Can we come to know ourselves while still enslaved to the things we seek Aristotle : Is the highest virtue the ability to choose not just what to pursue, but what to leave behind? Aristotle : What is the role of moderation in achieving eudaimonia (the good life)? The Buddha : Can one walk the Middle Path unless he lets go, desire by desire? Jesus : Is the kingdom within not reached by emptying the self? Heidegger : Is letting go a form of ontological clarity Laozi / Taoism : Isn’t simplicity found when desire falls away? Thiruvalluvar : Letting go is not the end of desire, but the beginning of freedom; one who loosens each bond of attachment slowly becomes untouched by sorrow and walks toward an unshakable stillness. குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். [அறத்துப்பால், துறவறவியல், துறவு] (For meaning in English, scroll to the bottom ...