Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சிறைகாக்கும் காப்பென் செய்யும்

குறள் 57
சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிறை காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று.

காக்கும் - காத்தல் kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

சிறைகாக்கும் - சிறையில் மதில்கள் சூழ ஒருவரை காக்கும் முறை

காப்பு - காத்தல் - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

காப்பென் செய்யும் - அத்தகைய காவல் என்ன செய்ய முடியும் ஒருவரை ?

மகளிர் - பெண்கள், பெண்டிர்

காக்கும் காத்தல் kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டு தாக்குடையதாள வகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்து அமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம் நான்கனுள் காப்பன காத்துக்கடிவனகடியும் திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நிறைகாக்கும் - அவர்களின் கற்பு நெறியில் நின்று தன் மானத்தை காக்கும் குணம்

- எட்டாம்உயிரெழுத்து; பெருக்கம்; அடுக்கு; மேல்நோக்குகை; இறுமாப்பு; உழையிசையின்எழுத்து; எய்யும்தொழில்; அம்பு; பிரிநிலை, வினா, எண், தேற்றம், ஈற்றசை, இசைநிறைஎன்னும்பொருள்களில்வரும்ஓர்இடைச்சொல்; விளிக்குறிப்பு; இகழ்ச்சிக்குறிப்பு.

காப்பே -  காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
ஒரு பெண்ணை மதில்கள் சூழ வீட்டுக்குள் வைத்து, வெளியுலகத்திற்கு காட்டாமல் அவளை காவல் செய்வதனால் (possessive) ஒரு பெண்ணை காவல் செய்ய முடியாது. 

மாறாக ஒரு பெண் தன்னை நல்கற்பு நெறியில் தன்னை நடத்திக்கொண்டால் தன்னை காத்துக்கொள்ளும் காவலாக அரணாக அமைந்தால் அதைவிட தலையானது வேறில்லை.

ஆதலால் வீட்டில் கணவன், தந்தை, சகோதரன், நண்பன் போன்ற ஸ்நானத்தில் இருக்கும் அன்பர்கள் பெண்களை மதித்து, அவர்கள் நல்வழி நடக்கும்படியாக உடனிருந்து உதவும் ஆண்களே, பெண்களை நல்ல கற்பு நெறியில் நிறுத்தமுடியும். பெண்களை அடிமைப் பொருளாக நடத்துவதன் மூலம் அதை சாதிக்கமுடியாது. அடிமைபோல நடத்துவதின் மூலம், கணவன்பால் மதிப்பு குறைந்து, இழந்து, மனைவி அவ்வுறவை சிறிதளவு வெறுத்தாலும், அது கற்பு நெறி தவற ஒரு தூண்டுதலாக அமைந்துவிடும். 

மேலும், கற்பு நெறி என்பதை தாண்டி யோசித்தால், ஒரு பெண் தன்னுடைய வலிமையாலும், அறிவாலும், கவனத்தாலும் தன்னை காத்துக்கொள்ளவேண்டும் என்று சூளுரைத்துக்கொண்டு அதன் படி திண்மையாக நடந்தால் அதுப்போல் காவல் வேறு ஏதும் இல்லை. 

மேலும், ஒரு பெண்ணின் உடல் அப்பெண்ணை சார்ந்தது, அகவயமானதும் கூட. அதனை புறவயமாக அவளின் வேண்டுகோலோ அனுமதியோ இன்றி பிறர் (பெண்கள் - அம்மா, மாமியார், உற்றார், உறவினர் என்று யாரும்) அடக்குவதோ காப்பதோ சரியானது இல்லை. 

ஒரு சூழல் பாதுக்காப்பாக இல்லாத சூழ்நிலையில் ஒரு பொறுப்பான தந்தையாக, சகோதரனாக, நண்பனாக, கணவனாக, அலுவலனாக அப்பெண்ணிற்கு ஒரு பாதுக்காப்பாக இருக்கலாம். அதுவும் அவர்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில் மட்டுமே. 

ஒரு பாட்டி மற்ற பெண்களிடம் சொல்வதாக ஒரு சொலவடை “ஒன் முந்தி ஒன் கையில” 

மேலும்: அஷோக்

ஒப்புமை
”நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்த லாகா” (பழமொழி 30)

“உண்டியுட் காப்புண் டுறுபொருள் காப்புண்டு
கண்ட விழப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே” (வளையாபதி)

“கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்” (மணி 18:98-102)

“கட்டழ கமைந்த கண்ணாள் நிறையெனும் சிறையைக் கைபோய்” (சீவக 710)

“பூவை கற்பெனும்
இருஞ்சிறை யிறாதெனா விடரும் நீங்கினான்” (கம்ப.சடாயு உயிர் 144)

“தருமமே காத்ததோ சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ கற்பின் காவலோ” (கம்ப.காட்சிப் 57)

“வழக்கெனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதேஅச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது” (நாலடி 362)

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கற்பைப் பற்றி “கற்பு என்பது” (சுட்டியைத் தட்டவும்) என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்

எழுத்தாளர் ஜெயமோகன் (குரு என்னும் உறவு)’இன் கருத்து (சுட்டியை தட்டவும்)
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

என்பதுதான் குறள். சரியாக மேற்கோள்காட்டவும்

XXX
அன்புள்ள XXX,

நன்றி. குறள் மீதிருக்கும் ஆர்வத்துக்கும் மகிழ்ச்சி.

அந்தக்குறளுக்கு ‘என் செய்யும்’ என்றுதான் பொருள். எவன் செய்யும் என்று ‘வ’ எழுவது என்செய்யும் என்று வரும்போது வெண்பா தளை தட்டுவதனால்தான். திருக்குறளின் மூலம் அதற்காக பிற்பாடு பிரதிசெய்தவர்களால் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் எவன் என்ற சொல்லுக்கு ‘என்ன’ என்ற பொருள் வருவதில்லை. அரும்பத உரைகளில் அதை அப்படியே தாண்டிச் செல்கிறார்கள்.

ஆகவே சொல்லும்போது ‘என் செய்யும்’ என்று சொல்வதே சரியானது. வ என்ற எழுத்து ஒலியின்மை கொள்கிறது என்று சொல்லலாம். என்னைப்பொருத்தவரை இது ஒரு பெரிய சிக்கலாக நான் எடுத்துக்கொள்வதில்லை. திருக்குறளின் இன்றைய பிரதி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் செம்மை செய்யப்பட்டது. இன்று  அதற்கு ஆதாரமாக அமைந்த மூல ஏடுகள் கிடைப்பதில்லை.

ஒரு கட்டுரையில் எவன் செய்யும் என்று சொல்லி பொருள்குழப்பம் கொடுத்து அதை மீண்டும் விளக்குவதை விட என் செய்யும் என்றே சொல்லிச்செல்லலாம் என்பது என் எண்ணம்.

குறள் போன்ற நூல்கள் மீது எளிமையான வாசிப்புக்கு அப்பால் ஏதும் நிகழாத சூழல் இங்குள்ளது. இம்மாதிரி எழுத்து எண்ணுவதையும் அதை இலக்கண விதியாக எடுத்து அலைவதையும் மதநூல்களுக்கு விட்டுவிடலாமே. திருக்குறளுக்கும் முல்லாக்களும் மீமாம்சகர்களும் கிளம்பினால் நாடு தாங்காது

ஜெ  

காதலர்தினம் விமர்சினையாகக் கொண்டாடப்படட்டும். காதலர்கள் உருவாகட்டும். மனச்சிக்கல்கள் இல்லாமல் அவர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளட்டும். மேலான உறவுகள், சமநிலையில் உருவாகும் உறவுகள், உருவாகட்டும். சென்ற கால மனநிலைகளில் இருந்து விடுபட்டு, வரும்காலகட்டத்துக்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களாக அ¨வை அமைவதாக.

உடனே நம் ஆண்கள் கற்பைப் பற்றிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். உண்மையில் இந்தப் பண்பாட்டுக்கவலைகளின் அடியில் இருப்பதெல்லாம் பெண்கள் கற்போடு இருப்பார்களா என்ற பதற்றம் மட்டும்தான். நம்முடைய பெண்– சகோதரி,மனைவி, மகள்– கற்போடு இருக்கவேண்டுமே என்ற துடிப்பு மட்டும்தான். பெண்ணின் கற்பு அவளுடைய சொந்த விஷயம். அதை பாதுகாக்கும் பொறுப்பை அவளிடமே விட்டுவிடலாம். புது உலகை எதிர்கொள்ள அவளால் முடியும் என்றால் தன் ஒழுக்கத்தைப் பாதுகாக்கவும் அவளால் முடியும்.

இந்த ஆசாமிகளுக்காக வள்ளுவர் சொன்னார்’
 
சிறைகாக்கும் காப்பு என் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை!

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சி நிகழ்ச்சியில் (23-apr-2023, episode-2) வில் சங்கரேஸ்வரி என்கிற பேச்சாளர் தனது பேச்சில் இப்படி சில வரிகளை பேசி இருப்பார்.

படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் வேலைக்கு போனும் வெளியூர் போனும் அப்படினா, சொந்தகாரங்களான் சேந்து என்ன செய்வாங்கன்னா, பட்டனம் போன புள்ள கெட்டுப் போய்டும்னு எதுகை மோனைல நமக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க. எங்க கெழவி/கிழிவி சொன்னா ஒரு வார்த்தை. வெளியூர் போரீயா, வேலைக்கு போரீயா? போய்ட்டு வா. போய்ட்டு வா. ”ஒன் முந்தி ஒன் கையில”. அவள் சொன்ன ”உன் முந்தி உன் கையில” கொடுத்த தைரியத்தையும் பொறுப்பையும் எது ஒன்றாலும் தந்துவிட முடியாது என்பது தான் உண்மை. 

பரிமேலழகர் உரை
மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்-மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை-அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். 

விளக்கம் 
((சிறை: மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை:நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்-பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?; நிறை காக்கும் காப்பே தலை -அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.

சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை.

மு.வரதராசனார் உரை
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

மணக்குடவர் உரை
மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

பொருள்: சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் ‡ அரணால் காக்கும் காப்பு யாது (பயனைச்) செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை‡ பெண்கள் (தமது) கற்பால் (தம்மைக்) காக்கும் காப்பே தலையாய காப்பு.

அகலம்: தலையாய காப்பைத் தலை என்றார். தலையாய காப்பு‡ சிறந்த காப்பு. நச்சர் பாடம் ‘கற்பெவன்’, ‘கற்பே தலை’. ‘உண்டியு’என்னும் தொடக் கத்துச் செய்யுளில் ‘பெண்டிரைக் காப்ப திலமென்று, கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே’ என்றார் வளையாபதியார். ‘நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச், சிறையா னகப்படுத்த லாகா’ என்றார் பழமொழியார்.

கருத்து: இல்லாளை வீட்டினுள் வைத்துப் பூட்டி அவள் கற்பைக் காக்கலா மென்று நினைத்தல் மடமை.

சாலமன் பாப்பையா உரை
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

மேலும் (நன்றி: அடைமழை)
நல்லொழுக்க நகை சூடி
கரும்பெட்டியிலே அவளைப் பூட்டி வைத்து
பெரும் சாதனைப் புரிந்துவிட்டதாய் நினைக்கும் கணவனே கேள்!
அவள் ஒழுக்கத்தை அவளாலன்றி வேறு யாராலும் காக்க முடியாது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அறிவும் ஆற்றலும் மிக்க பெண்களை அடிமைப்படுத்த இயலாது.

English Meaning - As I taught a kid - Rajesh
Will 4 walls of a cell or rules and regulations protect a girl? No. Only a girl can and should protect herself using her conduct as a weapon.

Questions that I ask to the kid
What cannot control or protect a girl? What can protect a girl?

No comments:

Post a Comment