குறள் 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல் இழந்தேம் - இழத்தல் - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அல்லா-த்தல் - allā 12 v. intr. 1. To suffer, to be in distress; துன்பமுறுதல். வயவுநோய் நலிதலி னல்லாந்தார் (கலித். 29). 2. To rejoice, to beglad; மகிழ்தல் அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப். 143). அல்லாவார் - துன்பப்படாதவர் ஊக்கம் - மனத்திடம்; உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை. ஊக்கம் - ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்; ஒருவந்தம் - உறுதி; ஒருதலை; நிலைபேறு; சம்பந்தம்; ஒற்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.