குறள் 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கடிது - கடுமையானது; விரைவாய்; மிக. ஓச்சி - ஓச்சுதல் எறிதல்; பாய்ச்சுதல்; செலுத்துதல்; வீசுதல்; உயர்த்துதல்; ஓட்டுதல்:தூண்டிவிடுதல். மெல்ல - மெதுவாக எறிக - எறிதல் - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல். நெடிது - நீண்டது; தாமதம் ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து நீங்காமை - nīngkāmai neg. v. noun. That which is inseparable, பிரியாமை. 2. Unchange ableness, continuance, நித்தியமாயிருக்கை. வேண்டுபவர் - விரும்புபவர், வேண்டுகின்றவர் முழுப்பொருள் ஒரு நாட்டில் தவறுகள் குற்றங்கள் நடக்கும். அதற்கு தண்டனைகள் கொடுக்கப்படும். ஒரு அரசர் அல்லது அரசாங்கம் குற்றங்களை சகித்து...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.