Skip to main content

Posts

Showing posts with the label Index 132 புலவி நுணுக்கம்

132 புலவி நுணுக்கம்.

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  புலவி நுணுக்கம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு குறள் 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து குறள் 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று குறள் 1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று குறள் 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள் குறள் 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் குறள் 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று குறள் 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று குறள் 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று குறள் 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று பதிவு வரிசை