பால் - காமத்துப்பால் இயல் - கற்பியல் அதிகாரம் - கண்விதுப்பழிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. குறள் 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன் குறள் 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து குறள் 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து குறள் 1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண் குறள் 1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. குறள் 1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் குறள் 1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண் குறள் 1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் குறள் 1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து பதிவு வரிசை
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.