Skip to main content

Posts

Showing posts with the label Index 115 அலரறிவுறுத்தல்

115 அலரறிவுறுத்தல்

பால்  - காமத்துப்பால் இயல்  - களவியல் அதிகாரம்  -  அலரறிவுறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1141 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் குறள் 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர் குறள் 1143 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து குறள் 1144 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து குறள் 1145 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது குறள் 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று குறள் 1147 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் குறள் 1148 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் குறள் 1149 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர் பதிவு வரிசை