Skip to main content

Posts

Showing posts with the label Index 113 காதற்சிறப்புரைத்தல்

113 காதற்சிறப்புரைத்தல்

பால்  - காமத்துப்பால் இயல்  - களவியல் அதிகாரம்  -  காதற்சிறப்புரைத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் குறள் 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு குறள் 1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம் குறள் 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து குறள் 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் குறள் 1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர் குறள் 1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து குறள் 1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து குறள் 1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர் குறள் 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர் பதிவு வரிசை