Skip to main content

Posts

Showing posts with the label Index 112 நலம்புனைந்துரைத்தல்

112 நலம்புனைந்துரைத்தல்

பால்  - காமத்துப்பால் இயல்  - களவியல் அதிகாரம்  -  நலம்புனைந்துரைத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் குறள் 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று குறள் 1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு குறள் 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று குறள் 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை குறள் 1116 மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் குறள் 1117 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து குறள் 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி குறள் 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி குறள் 1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் பதிவு வரிசை