Skip to main content

Posts

Showing posts with the label Index 110 குறிப்பறிதல்

110 குறிப்பறிதல்

பால்  - காமத்துப்பால் இயல்  - களவியல் அதிகாரம்  - குறிப்பறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து குறள் 1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது குறள் 1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் குறள் 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் குறள் 1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் குறள் 1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் குறள் 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு குறள் 1098 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல பதிவு வரிசை