Skip to main content

Posts

Showing posts with the label Index 071 குறிப்பறிதல்

071 குறிப்பறிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அமைச்சியல் அதிகாரம்  - குறிப்பறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 701 கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி குறள் 702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் குறள் 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் குறள் 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு குறள் 705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் குறள் 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் குறள் 707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் குறள் 708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின் குறள் 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் குறள் 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற பதிவு வரிசை