Skip to main content

Posts

Showing posts with the label Index 065 சொல்வன்மை

065 சொல்வன்மை

பால்  - பொருட்பால் இயல்  - அமைச்சியல் அதிகாரம்  - சொல்வன்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று குறள் 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு குறள் 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் குறள் 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் குறள் 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து குறள் 646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் குறள் 647 சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை  இகல்வெல்லல் யார்க்கும் அரிது குறள் 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் குறள் 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர் குறள் 650 இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் பதிவு வரிசை