Skip to main content

Posts

Showing posts with the label Index 051 தெரிந்துதெளிதல்

051 தெரிந்துதெளிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - தெரிந்துதெளிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்  திறந்தெரிந்து தேறப் படும் குறள் 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு குறள் 503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்  மிகைநாடி மிக்க கொளல் குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்  கருமமே கட்டளைக் கல் குறள் 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி குறள் 507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும் குறள் 508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் குறள் 509 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் குறள் 510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் பதிவு வரிசை