Skip to main content

Posts

Showing posts with the label Index 043 அறிவுடைமை

043 அறிவுடைமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - அறிவுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் குறள் 422 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் 424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு குறள் 425 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு குறள் 426 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு  அவ்வ துறைவ தறிவு குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் குறள் 428 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது  அஞ்சல் அறிவார் தொழில் குறள் 429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் குறள் 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் பதிவு வரிசை