Skip to main content

Posts

Showing posts with the label Index 015 பிறனில் விழையாமை

015 பிறனில் விழையாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல்  அதிகாரம்  - பிறனில் விழையாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 141 பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து  அறம்பொருள் கண்டார்கண் இல் குறள் 142 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை  நின்றாரின் பேதையார் இல் குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார் குறள் 144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் குறள் 145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி குறள் 146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் குறள் 147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன் குறள் 148 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு  அறனொன்றோ ஆன்ற வொழுக்கு குறள் 149 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார் குறள் 150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று பதிவு வரிசை