குறள் 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செயற்பாலது - செய்யக்கூடிய செயல்கள் ஓரும் - ஆசை நிலை. ஓர்தல் - ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல். அறனே - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உயற்பாலது - ஒழிக்கத் தக்கவை, விலக்கத் தக்கவை, கொய்தெறிய வேண்டியவை ஓரும் - ஆசை நிலை. ஓர்தல் - ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல். பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன் முழுப்பொருள் 1) ஒருவன் செய்ய வேண்டியவை என்ன? செய்யத்தக்க செயல்களை ஆராய்ந்து செய்வதே அறம் ஏனெனில் அறத்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.