நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

 

குறள் 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நண்பு - அன்பு; உறவு; நட்பு.

ஆற்றார் - செய்யாது இருப்பவர்; இல்லாதவர் 

ஆகி -  ஆகுதல் - ஆதல்.

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

இல  - இல் - இல்லை, வறுமை

செய்வார்க்கும் - செயலை செய்பவர் / நடத்துபவர்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

ஆற்றாராதல் - இல்லாமல் இருத்தல்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
பிறர் நம்மிடம் அன்பல்லாதவராக இருப்பினும் நட்பும் உறவும் பாராட்டாதவராக இருப்பினும் நன்மைகளும் செய்யாது தீயவை செய்தவராக இருப்பினும் மகிழ்ச்சிதராதவராக இருப்பினும் நம்மிடம் மலிவாக நடந்துக்கொண்டிருந்தாலும் அவரிடம் விரோதம் பாராட்டாமல் பண்புடையவராக இருத்தல் வேண்டும் மாறாக பண்பில்லாதவராக இருந்தால் அது நமக்கு கீழ்மையே ஆகும். 

எங்கோ கேட்ட ஞாபகம்,  உனக்கு ஒருவன் தீயது செய்கிறானா? அல்லது விரோதம் பாராட்டுகிறானா? அல்லது சிறுமையானவற்றை செய்கிறானா? அவனுக்கு பெரிய மனதுடன் நல்லது செய்து காண்பி. அதுவே சிறந்து என்று. உதாரணமாக, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் (அவரைப்பற்றிய ஆவணப்படம் The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - D.Jayakanthan @1:15:48) ஒன்றில்) சொன்னது இது, கர்நாடக்காவில் தமிழ் படிக்க கூடாது என்றால் தமிழ்நாட்டில் கன்னடம் படிக்கலாம் என்று சொல்லுக என்கிறார். அது தான் வழி. தாராளமாக நாமிருந்தால் தாராளம் என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். நாகரீகத்தை நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு. They are immature. தெரியலயா உங்களுக்கு? இதற்கு ஆராய்ச்சி வேண்டுமா? அல்லது அவன் ஒத்துக்கொள்ள வேண்டுமா? நாம் தான் உணர வேண்டும். நீ(நாம்) உலக மனிதன் என்பது பெருமை அல்ல. நமது பெருமை என்ன? புலம் சார்ந்தவர்கள் நாம். இந்த புலம் என்பது பூமி. இதைத்தான் பாரதி கூறினார் “வையத் தலைமை கொள்” என்று. இந்தியா அதனால் தான் கூறுகிறது நாங்கள் என்றும் அலேக்ஸாண்டார் ஆகமாட்டோம் என்று. 

என்பதையும் இங்கு நினைவில் கொள்க. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.).

மணக்குடவர் உரை
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.

மு.வரதராசனார் உரை
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.

Thirukkural - Management - Relationship
To be good to someone just because he is good to you is reactive behavior. Anyone will be good to the other person in that situation as that is the minimum quality expected of a human being. To be good to someone who is good to you does not need any effort. It is basic courtesy also. However, to be good, courteous, and polite even to someone who is discourteous to us is needed  for sustained relationships and that is possible only when we give importance to relationship, says Kural 998.

It is base to be discourteous
Even to one's enemies.

We are cheaply mean, if we are mean to someone who is mean to us. There is no defense against that behavior. It is said revenge is a wild justice. We are not in the wild or in a jungle. We are human beings living in the presence and company of other human beings. Effective relationships demand personal initiatives to connect  and stay with others.

No comments:

Post a Comment