வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்


குறள் 878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
வகை  - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).

தற் - தன் - தான் என்னும் சொல்வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும்திரிபு.

செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தற்செய்-தல் - taṟ-cey-   v. intr. id. +.1. To occur in natural course; to prosper byprovidence; தானே இயலுதல் (J.) 2. To beadvantageous, profitable; பலித்தல் வியாபாரம்அவனுக்குத் தற்செய்யவில்லை. (J.) 3. To makeone's position strong; தன்னைப்பெருக்குதல். வகையறிந்து தற்செய்து தற்காப்ப (குறள், 878).  

தற்செய்கை - தன்னைச்செப்பமுடையவனாக்குகை; தனதுசெயல்.

தற் - தன் - தான் என்னும் சொல்வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும்திரிபு.

காப்ப - காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

மாயும் - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.
பகைவர்

கண்பட்ட  - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

செருக்கு -  cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
பகைவரின் திறன் அறிந்து இயல்பறிந்து, பகைவரின் பலங்கள் பலவீனங்கள் அறிந்து, தன்னையும் தன் படைகளையும் வலிமை படுத்திக்கொண்டு, அறிந்தவற்றிற்கு ஏற்றார்ப்போல் தன் வீயுகங்களை தீட்டிக்கொண்டு, தன்னையும் தன் நாட்டுமக்களையும் பாதுக்காத்துகொள்ளக் கூடிய ஒரு அரசனை (நாட்டை) (அல்லது அரசனின் மேன்மையை நாட்டின் மேன்மையை) நினைத்தால் பகைவரின் ஆணவமும் அழிந்துவிடும். அதனால் வலிமை பொருந்தி இருந்தாலும் பகைவர் போர் தொடுக்க அஞ்சவும் (அல்லது மறுபடியும் தீர எண்ணுவார்).

கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரை சில பழம் பாடல்களை, புறநானூறு, பழமொழி நானூறு மற்றும் கம்பராமாயணம் இவற்றிலிருந்து முற்றுக் கருத்தையும் ஒத்ததாக எடுத்துக்காட்டுகிறது. அவற்றுள் கீழ்வரும் பழமொழிப்பாடலின் இறுதி இரண்டு வரிகளும் மிகவும் அழகான்வை, பொருத்தமானவை.

நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.

நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல், தீராப்பகை, ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் தானே அழிந்து விடும், இதிலேயே வகையறிந்து, தற்செய்து, தற்காத்து என்பவையெல்லாம் அடங்கிவிடுகின்றன.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறநா.35:32, 4)

“உற்றதற் கெல்லாம் உரஞ்செய்தல் வேண்டுமா
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்” (பழமொழி 83)

“நேற்ஓ டுங்கலில் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வி டம்பெறா வுணர்வினன் சூழ்ச்சியே போல” (கம்ப.வரைக்காட்சி.2)


பரிமேலழகர் உரை
வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.

மு.வ உரை
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.

No comments:

Post a Comment