இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

 

குறள் 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை

உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  , உண்டாயிருக்கிற; உண்மையான.

உள்ள - uḷḷu   உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி.

உள்ளம்  - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உருகும் - உருகுதல் - இளகுதல், மனநெகிழ்தல், மெலிதல்

கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.

உள்ளது -  உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி

இன்றிக் - இல்லாமல்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
பிறரிடம் யாசிக்கும் ஒருவரைக் கண்டால் அவர் அவ்வறுமையில் எவ்வளவு துன்பப்படுகிறார் யாசிக்கவும் எவ்வளவு துன்பப்படுகிறார் என்று நினைத்துப்பார்ப்போருக்கு உள்ளம் உருகும் இலகுவாகும். அதுவே வறுமையில் துன்பப்பட்டு யாசிப்பவரை கண்டும் மனம் இரங்காமல் தன்னிடம் இருக்கும் செல்வத்தை மறைத்துவைத்துக்கொள்வோரிடம் உள்ள செல்வமும் அழிந்துவிடும். மேலும் அத்தைகைய கஞ்சர்களிடம் இருக்கக்கூடிய புண்ணியமும் புகழும் கூட அழிந்துவிடும். ஏனெனில் செல்வம் என்பது பிறருக்கு கொடுத்து உதவுவதற்காக மறைத்துவைத்துக்கொள்ள அல்ல. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும் ('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305)என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம்.இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்'என்று உரைத்தார்.).

மணக்குடவர் உரை
இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும். இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.

மு.வரதராசனார் உரை
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

No comments:

Post a Comment