கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

 

குறள் 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]

பொருள்
கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;)

இல்லவர் - இல்லாதவர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இலர் - இல்லாதவர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
உடையார்

கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;)

இன்மையும்இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? ஒருவருக்கு கண்ணோட்டம் என்னும் தாட்சிணியம் அருள் இல்லையேல் அவருக்கு கண் இல்லை என்றே உணரப்படும். ஏனெனில் கண் என்பதே துன்பங்களை துயரங்களை கண்டறிந்து அதற்கு அருளுடன் கருணையுடன் உதவுவதே. குறைந்தது அவர்களிடம் கடுஞ்சொற்களோ சுமைகளோ சுமத்தாது இருத்தல்.  

ஆதலால் ஒருவருக்கு கண் ஒரு உடைமையாக செல்வமாக இருக்கிறது (ஆதனால் தான் கண் ”உடையார்”- கண்ணினை செல்வமாக பெற்றவர்கள்) என்றால் அவரிடம் கண்ணோட்டம் இல்லாமலும் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

செல்வம் படைத்து இருந்தாலும் பிறருக்கு கொடுத்து உதவாதவர் வறுமையில் இருக்கும் வறியோர்க்கு ஒப்பர். அதுப்போல் கண் என்பதும் ஒரு செல்வம். அச்செல்வத்தை கண்ணோட்டத்துடன் நடந்துக்கொள்வதற்கு பயன்படுத்த வேண்டும். கண்ணோட்டம் இல்லையேல் ஏதும் காண முடியாத கண் இல்லாதவர்க்கு ஒப்பர். அதனால் தான் இன்மை என்னும் சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்துக்கிறார் என்று நினைக்கிறேன்.

உன்னிடம்
அதிகமாக இருந்தால்
செல்வத்தைக் கொடு.
குறைவாக இருந்தால்
இதயத்தைக் கொடு.
- ரூமி

பி.கு: தன் மீதும் கண்ணோட்டம் வேண்டும். அதீத சுயவன்முறை கூடாது (குறிப்பாக தோல்வி அடையும் பொழுது சுயவன்முறை கூடாது. நம்பிக்கை இழக்க கூடாது). மனசோர்வு கூடாது. ஆனால் அதற்காக கழிவிரக்கம் கொள்ளகூடாது. நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தன் மீது அன்பு செலுத்தி (கண்ணோட்டம் கொண்டு) நம்பிக்கை வைத்து மீண்டு வந்து முன்னேற வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.

மு.வரதராசனார் உரை
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

No comments:

Post a Comment