அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

குறள் 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

நோக்கி  - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

கொல்  - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஆற்றுங்கொல் – பொறுமையாக இருக்கிறது

வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

புறன்  - puṟaṉ   புறம்¹. n. 1. See புறம்¹. 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவையடக். 9).--adv. Behind one's back;காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள்,182).- 

நோக்கிப் -  நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி

சொல்  - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

உரைப்பான் - உரை-த்தல் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.)

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை

முழுப்பொருள்
இந்தப் பூமியிற்கு என்று ஒரு அறம் இருக்கிறது. அவ்வறத்தை கருதியே (கருத்தில் கொண்டே) இவ்வுலகம் பலவற்றை மிகப் பொறுமையாக தாங்கிக்கொள்கிறது. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" என்று அதனால் தான் திருவள்ளுவர் முன்னர் கூறியிருந்தார். 

பிறரைப் பற்றிப் புறம் பேசுவது மிகுந்த இழிச்செயல். எல்லாவற்றையும் பொறுக்கும் இவ்வுலகிற்கே புறம் பேசுவோரை பொறுத்தல் மிக கடினமான/கொடுமையான ஒன்று. ஆனால் என்ன செய்வது இவ்வுலகம் தன் அறத்தை பேணுவதற்காக இவர்களையெல்லாம் விட்டுவைத்திருக்கிறது. இல்லையென்றால் இவ்வுலகமே இவர்களை தண்டித்திருக்கும் என்று கூறாமல் கூறுகிறார் திருவள்ளுவர். புறம் அத்தகைய இழிவான செயல். ஆதலால் புறம் பேசாதே.

உபரி கருத்து : இவ்வுலகம் புறம் பேசுவோரையும் மற்ற இழிச்செயல்களை செய்வோரையும் தாங்கிக்கொள்ளவில்லையென்றால் இவ்வுலகத்தில் எத்தனை பேர் எஞ்சுவர்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாடடானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.

சாலமன் பாப்பையா உரை
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

Thirukkural - Management - Avoiding Backbiting
The earth considers that to bear even a person who practices harmful acts of talking the negatives of others in their absence is its responsibility, Kural 189.

The earth bears a scandalmonger 
Only for the sake of duty.

As the earth fulfills its responsibility, we, with all our education, learning, knowledge, and common sense, need to be more responsible not to give such a chance to the earth.

English Meaning - As I taught a kid - Rajesh
This earth has a principle/rule/duty. Only considering that principle this world is tolerating and living with many injustice stuffs [just like the land bears those archeologists despite they hit the ground with heavy equipment]. Though the world tolerates all these injustice stuffs, yet. for this earth, it is difficult to tolerate backbiting / talking behind the back / gossiping etc. If not those principles, the earth would have punished these people. 

Talking behind back, gossiping are very disgusting and trivial stuffs. Do not do that.

Questions that I ask to the kid
What if earth isn't tolerant?

No comments:

Post a Comment