Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

குறள் 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

விழையான் விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

விழைவான் - விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

கேளிர் - தோழர்; உறவினர்

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

துடைத்து - உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

ஊன்றும் - ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

தூண் - தம்பம்; கட்டடத்தூண்; பற்றுக்கோடு; தறி.

முழுப்பொருள்
அறம், பொருள், இன்பம் வீடு - இவையே ஒருவன் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள் எனப்படும். அறம் பொருள் இன்பம் ஆகியவை சமநிலையில் வாழ்வில் இருக்க வேண்டும் என்றால் இவை அனைத்தையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அறம் என்றால் தர்மம் அதாவது ஒருவர் ஆற்றவேண்டிய கடமைகள். ஒருவர் வாழ்க்கையில் தனது கடமைகளை ஆற்றவேண்டும். அவ்வாறு ஆற்றினால் அவர் பொருளை ஈட்ட முடியும். அவ்வாறு தேவையான அளவு பொருள் இருந்தால் இன்பம் வாழ்வில் பயனாய் கிட்டும். காமமும் சுவைக்கும். செயல் புரியாமல் வீண் செலவு செய்தால் பொருள் தங்காது தரித்திரம் ஒட்டிக்கொள்ளும். இன்பம் இருக்காது. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றும் இருந்தால் தான் வீடுபேறு என்னும் நிலைக்கு நம்மால முயற்சி செய்ய முடியும். மேலும் இன்பம் என்பது நிலையில்லாதது. இன்பம் வந்து செல்வது.

ஆதலால் வாழ்வில் இன்பத்தை விழையாது தான் ஆற்றவேண்டிய கடமைகள் அதாவது செயல்களை செய்ய விழைந்து செய்கின்றவன் தன்னுடைய குடும்பத்தின் (மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகள்) துன்பங்களை நீக்கி அவர்கள் வாழ்வில் அவர்களையும் அவர்களது துன்பங்களையும் தாங்கும் ஒரு ஊன்றுகோலாய் இருக்கும் தூணாக விளங்குவான். 

தூண் இயக்கமில்லாதது, தளராத முயற்சி என்பது இடைவிடாத இயக்கத்தைக் குறிப்பது. ஆனால் தூண் என்பது, மனவலிமை, உறுதியான நிலைப்பாடு இவற்றைக் குறிக்கவே இங்கு சொல்லப்படுகிறது.

தளராமுயற்சியும், தன் குடிகளுக்கான வினைகளை ஆற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஆள்வோர், அவர்க்கு உறவும் சுற்றமுமாகிய குடிமக்களைத் தன் ஆட்சியென்னும் கூரையின் கீழ் தாங்கக்கூடிய உறுதியான தூண் போன்றவர் ஆவார்கள்.

பொருளின் மீது சலனப்படும் பொழுது எல்லாம் கீழ்க்காணும் குறளை நினைவில் கொள்க

பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் (பில் கேட்ஸ் (Bill Gates), மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) போன்றோர்) பெரும்பாலும் மிக எளிமையான துணிகளை உடுத்துவர். ஆடம்பரமாக அணியமாட்டார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிறத்தில் துணி அணியமாட்டார்கள். அவர்கள் கூறும் காரணம் ஒவ்வொரு முடிவு எடுக்கும் பொழுது எனது மூளையின் ஆற்றல் செலவு செய்யப்படுகிறது. அவ்வாற்றலை துணியின் நிறத்தை முடிவு செய்ய செலவிட மாட்டேன். மாறாக எனது வேலையில் செலவிடுவேன். அவ்வாறு சிந்திப்பதனால் தான் அவர்கள் நிர்வாகத்தை உயர்த்துகின்றனர். அவர்களுடைய நிர்வாகத்தின் அங்கத்தினர்(அதாவது கேளீர்) நன்கு சம்பாத்தித்து நன்றாக வாழ்கின்றனர். [பி.கு: பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் போன்றோர் விலை உயர்ந்த கார்களை வாங்கி இருப்பார்கள். ஆனால் அவையாவும் அவர்கள் வருமானத்தில் 0.1% சதவிகிதம் கூட கிடையாது. அன்றாட வாழ்வில் அவர்கள் எளிமையையே பின்பற்றுகிறார்கள்]


அது லௌகீக உதாரணம்.

மஹாத்மா காந்தி போன்றோர் இன்பத்தை விழையாமல் வேலையை விரும்பியதால் தான் தன் நாட்டுமக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்து அவர்களுடைய துன்பத்தை துடைத்தனர்.

இதைப் பொதுவாக “வினையே ஆடவர்க்குயிரே” என்று குறுந்தொகை( 135.1) வரி சொல்லும்

”வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி” (அகநா 33.1)

“இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது) (முதுமொழிக் 8:6)

கண்ணனும் கோவர்த்தன கிரியினை ஏந்தி தன் குடிகளைக் காத்தான் என்னும் புராணச் செய்தியும் இச்செய்தியைச் சொல்லுகிற உருவகம்தான்.




மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம். ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.

மு.வரதராசனார் உரை
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who does not seek pleasure and happiness, rather seeks/desires work would remove/reduce the sufferings of people (relatives, friends) around him and support them/their family like a pillar

Questions that I ask to the kid
Who lifts a family (Or WHO removes the difficulties of people in life) ? How?
What is the benefit of focusing on work?
If we desire pleasure, can we lift a family?

No comments:

Post a Comment