கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

குறள் 575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கண்ணிற்கு - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அணிகலம் - நகை; Ornament, jewel; ஆபரணம் (சீவக. 117.)  

கண்ணோட்டம் - கண்பார்வை; இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல். கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;)

அஃது -  aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இன்றேல் - இல்லை என்றால்

புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு. காயம்; ஊன்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்

உணரப்படும் உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

முழுப்பொருள்
நம் முகத்தில் இருக்கின்ற கண் நமக்கு ஒரு அணிகலனாக அழகாக இருக்கிறது. ஆனால் அக்கண்ணிற்கு உண்மையான அணிகலன் என்னவென்றால் அது கண்ணோட்டம் இருக்கின்ற பார்வையாகும். கண் படைக்கப்பட்டதே பிறரை அன்போடு போற்றி தாட்சிணியத்துடன் இருப்பதற்கே. பிறர் துன்பத்தை அறிந்து அவரிடம் அருள் புரியும் கண்களே முகத்தில் கண்கள். அவ்வாறு அன்பும் அருளும் (கண்ணோட்டம்) இல்லாமால் கண்கள் இருந்தால் அவை புண்கள் என்றே பிறரால் உணரப்படும்.  மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை என்ன வாழ்க்கை?

அப்பேர்பட்டவரை மக்கள் ஏர் எடுத்துக்கூட மக்கள் பார்க்க மாட்டார்கள். ஒரு அழுகிய சீழ்ப்பிடித்த புண்ணை கண்டால் ஒதுங்குவதுப்போல ஒதுங்குவர் என்பதற்காக கூட இப்படி (கண் இல்லாதவர் கண் புண் என்று) சொல்லி இருக்கலாம். 

உன்னிடம்
அதிகமாக இருந்தால்
செல்வத்தைக் கொடு.
குறைவாக இருந்தால்
இதயத்தைக் கொடு.
- ரூமி

கண்ணோட்டம் பற்றி காந்தியின் பார்வை (நன்றி: சுனில்கிருஷ்ணன். புத்தகம் கல்மலர்/Kindle)
எழுத்தறிவுதான் கல்வி எனும் பார்வையையும் மேலை கல்வியையும் மறுக்கிறார் காந்தி. கல்விக்கண் வழியாக அதிருப்தியைத் தவிர வேறு எதைக் காண முடிகிறது? என்று வினவுகிறார் காந்தி. ஆதலால் கல்வி எழுத்தறிவோடு நின்றுவிடக் கூடாது. கண்ணோட்டத்துடன் நாம் நடந்துக்கொள்ள வேண்டும். 

ஒப்புமை
“கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்” என்றே திரிகடுகமும் (52) கூறுகிறது. 

சிறுபஞ்சமூலமும் (8), “கண்வனப்பு கண்ணோட்டம்” என்கிறது.

“ஒன்று நரம்பென்கோ ஒன்றாக என்பென்கோ
இன்றசை தான்என்கோ யாதென்கோ - மென்றொடையாழ்ப்
பண்ணோட்டும் இன்சொல் பணைத்தோளாய் சேர்ந்தவர்பால்
கண்ணோட்டம் இல்லாத கண்” (பாரதவெண்பா)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.
(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும். இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

Thirukkural - Management - Managing Emotions
Valluvar, in continuation of Kural 571, impresses us upon the importance of eyes with compassion, Kural 575. Compassion is an attractive jewel for a person's eyes. If there is no compassion in a person's eyes, they are not eyes. That sort of eyes are considered just as wounds on a person's face.

The jewel of the eyes is sympathy; without it
Eyes are but sores.

English Meaning - As I taught a kid - Rajesh
The jewel of the eyes is compassion; without it eyes would be considered as sores/wounds.

Eyes are like jewels to our face. But for the eyes, compassion is the jewel. Eyes are created for the purpose of seeing others with compassion. If someone sees others pain/suffering and doesn't do anything about it, then those compassionate less eyes are see as wounds. What is the lives if they don't allay the sufferings of others. When people see such uncompassionate people, they feel like they are around worms and move away from them. That's why it is seen as pus oozing wounds. 

Questions that I ask to the kid
What is the jewel of eye?
What if one doesn't have compassion? 
When eyes will be seen as pus oozing wound? Why?

No comments:

Post a Comment