Skip to main content

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மன - மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

உயிர்க்கு - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல்

இன - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

எல்லாப் - எல்லாம் -  ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.  

புகழும் - புகழ் துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
நமது மனதின் நலம் நம்முடைய உயிர் பெருமை / நிலைபேறு அடைவதற்கான ஆக்கத்தை தரும். ஆதலால் மனதின் நலம் மிக மிக முக்கியம். மனதை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள ஒருவர் அக பயிற்சிகளான ஊழ்கம் / தியானம் அதற்கு தேவையான பிராணாயாமம் யோகாசனம் ஆகியவற்றை செய்யவேண்டும். மனமே நமது உடலை வழிநடத்துகிறது. வாழும் முனைப்பையும் காரணத்தையும் நம் மனமே நமக்கு தருகிறது. நம் மன நலத்தை இழந்தால் நாம் எல்லாவற்றையும் இழப்போம். ஆதலால் நம் மன நலத்தை பேணி காக்க வேண்டும். கழிவுகளை அகற்றவேடும். ஊழ்கம்/தியானம் போன்றவை துணைபுரியும். நமது மனதுக்கு ஒரு நோய் வந்தால் உடலில் பல நோய்கள் மிக எளிதாக வந்துவிடும் (ஏனெனில் மன நலம் குன்றியதால் எதிர்ப்பு சக்தி குறையும், மன அழுத்தத்தை சமாளிக்க தேவையற்ற அமிலங்கள் (stress fighting hormones such as  cortisol ) சுரக்கும். அவ்வமிலங்கள் அதிகமாக சுரக்கும் பொழுது நீரழிவு (diabetes), ரத்த அழுத்தம்(hyper tension) போன்ற நோய்கள் உடம்பில் வந்து நம்மை தாக்கும். 

நம்முடைய இனம் எனப்படும் சுற்றம் நமக்கு எல்லாப் புகழும் தரும். நாம் பெரியோரை துணைக்கொண்டால் நம்மை அவர்கள் நல்வழிப்படுத்தி நமக்கு பெருமை சேர்க்க உதவுவர். அதுவே அறிவும் ஒழுக்கமும் அற்ற தாழ்ந்தோர் எனப்படும் சிற்றினதுடன் நாம் சேர்ந்தால் நமக்கு இகழ்ச்சியே வந்து சேரும்.  சிற்றினத்திற்கு நமது மனதின் நலத்தை கெடுக்கும் ஆற்றல் உண்டு. தேவையில்லாத பொறாமை, ஆசை, வஞ்சம், அதீத காமம், ஒழுக்கமற்ற காமம்,  இச்சை, சலனம் போன்ற தீயொழுக்கங்களை சிற்றினம் நமக்கு அறிமுகம் செய்து நமது மனதின் நலனை கெடுக்கும்.  நாம் தவறான திசையில் சென்று வழி தவறிவிடுவோம். அது நம்மை கெடுக்கும். நமது புகழை கெடுக்கும். 

நமது மனதின் நலம் நம்மை பாதிப்பது போல நம்முடைய சுற்றத்தின் குணமும் நலமும் நம்மை பாதிக்கும். 
ஆதலால் சிற்றினதுடன் சேராதே என்கிறார் திருவள்ளுவர். 

மீண்டும் ஒருமுறை ஔவையாரின் மூதுரைப் பாடலை நினைவு கூறுதல் நல்லது.
நல்லோரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

”ஆன தூயவ ரோடுடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுவர்” (கம்ப.நீர்.விளையாட்டு.20)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஆன தூயவ ரோடுடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுவர்” (கம்ப.நீர் விளையாட்டு.20)

பரிமேலழகர் உரை
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.

மு.வரதராசனார் உரை
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செயபவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும். 

Thirukkural - Management - Personality Development - Environment
Kural 457 brings out the importance of a beneficial company for the development of personality. Valluvar uses two different things to connect a point. The different  things are: 1) Healthy mind and 2) Environment. A healthy mind brings all the benefits to the life of a person. That is why it is said, 'As within, so without.' Similarly, a strong, positive, and influential environment brings all the positive things like fame and popularity to a person. 

A good mind is an asset to everyone 
While good company contributes to glory.

English Meaning - As I taught a kid - Rajesh
Mental health helps in keep us in peace, devoid of disturbances, thereby helping us in productivity and doing good and great works. Similarly, hanging out with good people will place us amidst a positive and conducive environment which would help us achieve all greatness and fame. 

Questions that I ask to the kid
Why is mental health important? Why is our friends environment important?
What is the similarity between mental health and friends?

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...