செயற்பால செய்யா திவறியான் செல்வம்

குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
செயற்பால - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யாதுஇயற்றாமல் இருத்தல்

இவறி - கைவிடாது; ஆசைப்பட்டு, விரும்பி
இவறியான்  -  கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

உயற்பாலது - உயர்தல் - uyar-   4 v. intr. [M. uyar.] 1.To rise, as water; to ascend, as a body in theair; to move toward the meridian, as a heavenlybody; மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 2. To be high, elevated,tall, lofty; உன்னதமாதல். உயர்ந்த மலை 3. Togrow, increase, expand; வளர்தல் நெல்லுயரக்குடியுயரும். 4. To be excellent, exalted, eminent,dignified, superior; மேன்மையுறுதல். உயர்ந்தவர்க்குதவிய வுதவி (கம்பரா. வேள் 35). 5. To vanish,disappear, to be removed; நீங்குதல் இனிவரினுயருமற் பழியென (கலித். 129, 17). 

உயர்-தல் - உயர்ச்சி உயரம்; 

அன்றிக் - அல்லாமல்

கெடும் - கெடும்; கேடு விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
செல்வம் நிலையில்லாதது என்பதை நிலையாமை அதிகாரத்தில் பார்த்தோம். அத்தகைய செல்வத்தை ஒருவர் சேர்த்துவைத்து இருப்பர். அல்லது அவரது பெற்றோர்கள், முன்னோர்கள் சேர்த்துவைத்து இருப்பர். ஒரு நிர்வாகத்திலும் பல ஆண்டுகளாக பாடுபட்டு லாபத்தை சேர்த்துவைத்து இருப்பர். அரசாங்கமும் நாடுகளும் அதுபோல செல்வத்தை சேர்த்து வைத்திருக்கும். 

ஒருவர் செயல்புரியாது (சோர்ந்தோ அல்லது சோம்பி) இருந்தால் - அதாவது செயலை செய்ய - தவறினால் அவன் வறியவனாவான். 

ஏனெனில் அவனுடைய செல்வம் பெருகாமல் குன்றிவிடும். இக்காலகட்டத்தில் பணத்தை வீட்டில் வைத்தால் நமது செலவுகளுக்கு ஆட்பட்டு குன்றி விடும். அதுவே வங்கிகளில் நிரந்தர வைப்பில் (Fixed  Deposit) வைத்தால் குறைந்தது அதற்கான வட்டியை ஈட்டி அது வளரும் (ஆராய்ந்து நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்தால் லாபம் தரும்). ஆனால் வங்கியில் போடுவது கூட செயல். வங்கியில் வைப்பது ஒருவித தற்காப்புச் செயல்தான். ஆனால் அன்றாட செலவுகளுக்கு ஒருவர் செல்வம் ஈட்டியே ஆக வேண்டும். இல்லையேல் சேர்த்துவைத்த செல்வத்தைச் செலவுச் செய்ய நேர்ந்து ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து வறியவர் ஆகிவிடுவார். 

இது பொருட்செல்வத்துக்கு மட்டும் பொருந்துவது அல்ல. அறிவிற்கும் பொருந்தும். ஒரு மருத்துவர் 10 ஆண்டுகள் படித்துவிட்டு ஒரு சில வருடம் செயல்புரியாமல் இருந்தால் அவர் படித்ததில் பலவற்றை மறந்துவிடுவார். இது எத்தொழிலுக்கும் பொருந்தும். செயல்புரிந்து கொண்டு இருந்தால் தான் நாம் பெற்ற அறிவைக்கூட பாதுகாக்க முடியும். இல்லையேல் குன்றும்.  மேலும் அறிவை தன்னிடம் மட்டுமே வைத்துக்கொண்டால் அது குன்றிக்கெடும். அது பிறரிடம் பகிர்ந்துக்கொண்டால் நமக்கும் நமது கற்றலில் உள்ள கசடுகள் தெரியும் தெளிவுப் பிறக்கும் தன்னபிக்கை கிடைக்கும். அறிவும் வளரும். நாம் பிறரிடம் பகிரும் பொழுதும் நாம் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் நாம் பகிர்ந்தால் தான் மற்றவர்கள் நம்மிடம் பகிர்வார்கள். பிறரிடம் இருந்து கற்கும் பொழுது நமது அறிவும் வளரும். 

பொதுவாக பள்ளிநாட்களிலும் கல்லூரிகளிலும் படிக்கும் பொழுது மாணவர்கள் தங்களது பாட குறிப்புகளை, பயிற்சி பிறருடன் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களது பள்ளியோ (அல்லது tuition centre) அதனை பிறருடன் பகிரக்கூடாது என்பர் அல்லது மாணவர்களே அதனை ரகசியமாக காப்பர். அப்படி இல்லாமல் உண்மையாக கற்கும் ஆர்வம் இருப்பவர்களிடம் பகிர்ந்தால் அவர்களுடன் சேர்ந்து நாமும் கற்கலாம். அறிவை பூட்டி வைத்து என்ன ஆகப்போகிறது. ஏனெனில் நாம் இந்த ரகசிய பாடங்களை மற்றவர்களிடம் பகிர்ந்தாலும் உண்மையில் நூறில் பத்துப்பேர் தான் படிக்க துவங்குவார்கள். அதில் ஒன்று அல்லது மூன்று பேர் தான் படிப்பார்கள்.

ஆதலால் செயல் புரியாது இருப்பது குற்றம் என்கிறார் திருவள்ளுவர் 

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது ஔவையார் வாக்குதான்.

 நாலடியார் இக்கருத்தை அழகாக இவ்வாறு செல்வம் நிலையாமை என்னுமதிகாரத்தில் கூறுகிறது:
“உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்
துன்னருங் கேளிர்துயர் களையான் – கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் ஆஅ
இழந்தா னென்றெண்ணப் படும்” (நாலடி 9)

மேற்கண்ட வெண்பாவில் அஆ என்பது ஒரு சீராகக் கொள்ளப்படும், வெறும் “நிரை” என்றிராமல். அஆ, இஈ போன்றவை விட்டிசைக்கும் சீர்கள் என்பதை, “அஇ உஎ ஒஇவை குறிய மற்றைய” என்ற சூத்திரப்பாடல் குறிக்கிறது. நாலடியார் பாடலின் கருத்தும் இன்றியமையாதஉணவுகளைஉண்ணாமலும், மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும்,  இரப்பவர்க்குஉதவாமலும், ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, கருதப்படுவான்.

கார்காலப்படலத்தில் 108 வருகிற கம்பரின் இராமகாதைப்பாடலொன்று, 
“மேகா மலைகளின் புறத்து வீதலான்
மாகயா றியாவையும் வாரி யற்றன
ஆகையாற் றாககவிழந்து அழிவினன் பொருள் 
போகவாறொழுகலான் செல்வம் போன்றவே” 
என்று சொல்வது இதைத்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
(செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.

மு.வரதராசனார் உரை
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
Wealth with a person who spends that neither on himself nor on charity or philanthropic activities will disappear without any use. Wealth accumulates wealth. There is joy in sharing. The practice of sharing wealth with others brings back more wealth.

Use your organization's wealth to improve the lives of people so that that practice will add further wealth to your organization. This practice will put your organization on virtuous cycle since the shared wealth will be further useful to the society as suggested by Valluvar in Kural 437.

A miser's wealth unused does not increase
But is lost

When the society in which your business operates prospers, your business will prosper further. 

No comments:

Post a Comment