பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

குறள் 874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
பகை -  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நட்பாக் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

கொண்டு - கொள் - koḷ   கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்; 2. contain, hold, பிடி; 3. have, bear, வைத்திரு; 4. buy, வாங்கு; 5. take food, medicine etc. உட்கொள்; 6. marry, take a wife, பெண் கொள்; 7. get, obtain, பெறு; 8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து; 2. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below).

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

உடையாளன் - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

தங்கிற்று - தங்குதல் -  வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
பகை என்பது எல்லோரையும் கொல்லும். ஆக்கப்பூர்வமான செயல்களை அழிக்கும். ஆனால் நட்பென்பது வளர்ச்சியை கொடுக்கும். பகையென்பது பல சமயங்களில் சமீபத்தில் தோன்றியப் பகையாக அல்லாமல் நெடுங்காலமாய் தொடரும் பகையாக இருக்கும்.

பகையை முடிக்க மனதால் எண்ணிப் பகைவரிடம் சென்று அவர் மனதில் இடம் பிடித்து அவர் நம்பிக்கையை பெற்று நட்பு வளர்த்து இருவருக்கிடையே உள்ள உறவை ஆற்று நீர்போல பெருகியோடச்செய்யும் ஆற்றலும் பண்பும் படைத்தோரின் தன்மையான /இயல்பான பொறுமையில் இவ்வுலகம் நிலைபெற்று அடங்கியிருக்கிறது. பகைவரிடம் நட்புப்பாராட்ட வேண்டும் என்றால் ஒருவருக்கு எவ்வளவு பொறுமை தேவை. அந்த பொறுமை வெற்றிபெறுவதாலே இவ்வுலகம் நிலைத்து நிற்கிறது.

மூதுரையில்,  இவ்வுலகமானது, “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்வது போல”, நிலை பெறுகிறது என்கிறார் ஒளவையார்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.).

மணக்குடவர் உரை
பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும். இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.

மு.வ உரை
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

No comments:

Post a Comment