பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை

குறள் 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]

பொருள்
பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றிமனம்நெகிழ்ந்திருக்கை

பொச்சாப்பார்க்கு - மறதி உள்ளவர்களுக்கு ; குற்றம் செய்பவர்களுக்கு; மன உறுதி இன்றி இருப்பவர்களுக்கு

இல்லை - இல்லை

புகழ்மை -புகழ்; புகழுடைமை; துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

உலகத்து -  உலகத்தினுடைய.

பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

எப்பால் - எந்த திக்கிலும்

நூலோர்க்கும் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர்.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

முழுப்பொருள்
மறதி உள்ளவர்களுக்கு குற்றம் செய்பவர்களுக்கு, (செய்யும் செயலின் கண்) மனதில் உறுதி இல்லாதவர்களுக்கு புகழ் என்னும் உடைமையும் வாகையும் இல்லை என்று உலகத்தில் எல்லாத்திக்கிலும் எல்லாத்துறையிலும் பலநூல்கள் கற்ற சான்றோர்களின் திண்ணமான முடிவும் நம்பிக்கையும் ஆகும். புகழ் என்றால் அருஞ்செயல் என்ற பொருளும் உண்டு. ஆதலால் மறதி, உறுதியின்மை கொண்டவர்கள் செயற்கரிய அருஞ்செயல்களை செய்யமாட்டார்கள். ஆதலால் அவர்களிடம் அருஞ்செயல்களை கொடுக்கவும் மாட்டார்கள். அருஞ்செயல்களை செய்யாதவர்களுக்கு புகழ் இல்லை. அத்தகையவர்கள் சிறியவரும் ஆவார்.

”Earn Trust” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அது ஒரு தலைமைப்பண்பு ஆகும். ஆனால் அதற்கு ஒருவர் அருஞ்செயல்களை செய்து அதில் சாதனைகளைப்புரிந்து இருக்கவேண்டும். அதாவது “Deliver Results" என்பது. "If you deliver results, you earn the trust". Because your work speaks for itself. அதற்கு தேவை “Bias for action" without forgetfulness. 

ஒப்புமை
கார்நாற்பதில் ஒரு அழகான உவமை கையாளப்படுகிறது. 
“பொச்சப் பிலாத புகழ் வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை” என்னும் வரிகள், 

“ஓங்கி வளர்ந்த வேள்வித்தீ வளர்ந்து 
எத்திக்கிலும் மறதியின்மையினால் வரும் 
புகழ்போல, பரவி நன்மையைப்போல், 
எத்திக்குளோர்க்கும் பெய்யும் மழை” என்கின்றன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
(அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.).

மணக்குடவர் உரை
பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு.

இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

Thirukkural - Management - Memory
All the written material of the world agrees, according to Valluvar in Kural 533, on one thing, that is, there is no recognition for a person who has forgetfulness as his asset. When a person has the ability to store information and retrieve that information when he needs that, he is resourceful. We become resourceful with memory.

All writings in the world conclude, 
“Fame is not for the fax.”

When many works emphasize the importance of memory, definitely there is a need to work on to improve one's memory. A person's fame and recognition are the results of 
his superior memory. Memory makes everything possible. A person with a superior memory, especially in business, has advantages over people who lack superior memory.

No comments:

Post a Comment