மனந்தூய்மை செய்வினை தூய்மை

குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

இரண்டும் - இரண்டு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

தூவாத - tūvāta   n. து-. That which isunpalatable or undesirable; வேண்டாதவை தூவாத நீக்கி (குறள், 685).

தூவா - வேண்டாம் என்றாலும் / வேண்டாதவை

வரும் - உடன் வரும்

முழுப்பொருள்
நமது மனதின் தூய்மை நமது செயல்களின் தூய்மை ஆகிய இரண்டும் நமது இனத்தின் தூய்மையை பொறுத்தே உள்ளது என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் நமது இனம் அதாவது நட்பு, சூழல் ஆகியவற்றின் தன்மை நம் மீது வேண்டாம்/தூவா என்றாலும் அதனுடைய ஆற்றலை செலுத்தும். அந்த இனம் பெரியோராய் இருந்தால் அவர்கள் நல்வழிபடுத்த உதவுவர். நாம் தவறு செய்தால் நம்மை நல்வழியில் திரும்பி வர உதவுவர். அதுவே சிற்றினம் (அதாவது  அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம்; நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர்) நம்மை நல்வழியில் செலுத்தாமல் தீய வழியில் செலுத்தும். அதனால் சிற்றினதுடன் சேராதே என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர். பெரியோர் துணைக்கொள் என்று அறிவுறுத்துகிறார்.

நமது எண்ணங்களும் நமது செயல்களும் நமது சுற்றத்தின் எண்ணங்களையும் செயல்களையும் பிரதிப்பளிக்கும். ஆதலால் நமது சுற்றத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் மிக தேவை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையாக சுற்றத்தின் தாக்கமே பெரும்பான்மையிடம் ஆதிக்கமும் செலுத்தும்.

உதாரணமாக ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் மாணவர்கள் தங்கள் சக மாணவர்களின் தேடலுடன் ஒத்துப்போகும். விதிவிலக்காக இருக்கும் பட்சத்தில் அதுவும் அந்த மாணவனின் உற்றார் உறவினர் ஆசிரியர் என்போரின் வழிகாட்டுதலுடன் ஒத்துப்போகும். ஆதலால் நமது சுற்றத்தை நாம் மிக கவனமாக அமைத்துக்கொள்ளவேண்டும்.

”.................நெடுமனம்
தூயையா வுடையையால் உறவினைத் துணிகுவார்” (கம்ப.மராமரப்.52)

கம்பராமாயண சடாயு (54) படலத்தில், 
“தீயவர் சேர்தல் செய்தார் 
தூயவர் அல்லர் சொல்லில் தொன்னெறி தொடர்ந்தோர் என்றான்” என்பார் கம்பர்.

”மிக்குப் பெருகி மிகுபுனல் சேர்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்” (பழமொழி 11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.
(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த ,1 )என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும். இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

Thirukkural - Management - Personality Development - Environment
Kural 455 adds value to the thought in Kural 454 that the environment  of a person plays a major role in shaping one's personality. It says that lofty or highest thoughts and meaningful or beneficial deeds or acts are always the influence or reflection of a company a person keeps.

The pure thought and the pure deed
Come from pure company.

There is an unconscious influence of environment  on one's personality. George Bernard Shaw's thought, “Show me your friends I will tell who you are” makes meaning and gains validity on the backdrop of Valluvar's thought.

No comments:

Post a Comment