களவின்கண் கன்றிய காதல்
thirukkural meaning விளக்கம்
அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
பொருள்
கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.
இய - இயைவு - iyaivu n. இயை¹-. Union, joining together; சேர்க்கை
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்
விளைவு - நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
வீயா - அழியாத
விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்
மு.வரதராசனார் உரை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
பொருள்
கள்ளாமை - களவுசெய்யாமை.
களவின் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.
இய - இயைவு - iyaivu n. இயை¹-. Union, joining together; சேர்க்கை
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்
விளைவு - நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
வீ-தல் - vī- 4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).
வீயா - அழியாத
விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்
தரும் - தரும்
முழுப்பொருள்
கன்றிய காதல் என்றால் முதிராத காதல் /வேட்கை /விழைவு. ஆதலால் பிறர்பொருளை வஞ்சித்து திருடும்(களவு செய்யும்) முதிராத வேட்கையும் விழைவும் கொண்டு சேர்க்கப்படும் பொருளானதின் விளைவு அழியாத (சிறப்புப்போல் தோன்றும்) துன்பத்தையே தரும். பிறர் பொருளை வஞ்சிக்க நினைக்கும் எண்ணமானது மிக மிக அற்பமான கீழமையான சிறுமையான வேட்கை/விழைவு என்றென்கிறார் திருவள்ளுவர்.
ஒப்புமை
கீ.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சித் தொகுப்பில், வினைப்பயன் விளைவைப்பற்றி மணிமேகலையிலிருந்து இவ்வாறு கூறுகிறார். “வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும்” (மணி:30:62-3). முற்றுக் கருத்தையும் எதிரொலிக்கும் பாடல் வரிகளையும் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற காவியங்களிலிருந்து எடுத்துக்காட்டியிருப்பார். கள்ளாமை என்பது சமணக்கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றானதால், சமணகாவியங்களே இவற்றைப் பற்றி வெகுவாகப் பேசியுள்ளன.
”முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீற
அளவில்துயர் செய்வரிவண் மன்னரத னாலும்
விளைவரிய மாதுயரம் வீழ்கதியுள் உய்க்கும்
களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே” (சீவக.2870)
“களவின் ஆகிய காரறி வுள்ளன்மின்
விளைவில் வெவ்வினை வீவில் கதிகளுள்
உளைய வுள்ளழித் தொன்றல வேதனை
வளைய வாங்கி வருத்தம் உறுக்குமே” (குளா)
”பீடில் செய்திக ளாற்கள வில்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயன்எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி உலையக் குறைக்குமே” (வளையாபதி)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.
பரிமேலழகர் உரை
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
திருட்டு இன்பம், தீராத துன்பம்.
Join the conversation