Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக

குறள் 711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆராய்ந்து - சோதித்தல்; சூழ்தல் தேடுதல் சுருதிசேர்த்தல்; ஆய்வு; பரிசீலனம்; சோதனை தலையாரி

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

சொல்தல் -கூறுதல் ; எடுத்துரைத்தல்  

சொல்லுக - கூறுக; உரைக; மொழிக 

சொல்லின் - கூறுபவற்றின் 

தொகை - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.
மெய்மை -  உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

முழுப்பொருள்
ஒருவர் ஒரு கருத்தையோ உரையினையோ ஒரு அவையில் எடுத்துரைக்கும் பொழுது அந்த அவையில் கூடியிருப்பவர்களை பற்றி ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு சொற்களை தேர்ந்தெடுத்து பேசவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவையை ஏன் ஆராய்ந்து பேச வேண்டும் என்றால் ஒரு சில அவைகளில் எளிதாக உள்வாங்கக்கூடிய சான்றோர்கள் அறிஞர்கள் கூடி இருப்பார்கள் ஒரு சில அவைகளில் எளிதாக கூறப்படவேண்டிய சாமான்யர்கள் கூடியிருப்பார்கள். 

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக என்று வள்ளுவர் நிறுத்திக்கொண்டு  இருக்கலாம். ஆனால் சொல்லின் தொகை அறிந்து என்று கூறியிருக்கிறார். ஏனெனில் சொல்லின் தொகை என்பது பேச்சாற்றலின் முக்கிய அம்சம் ஆகும். சான்றோர் அவையில் தேவையில்லாமல் நீண்ட நேரம் பேசக்கூடாது. சொல்பவற்றை சுருங்க சொல்ல வேண்டும். அவர்களின் நேரத்தை வீண் செய்யலாகாது. அதே போல் சாமான்யர்கள் மன்றத்தில் வளவள என கூறவும் கூடாது. அவர்கள் எளிதில் கவனம் இழக்க கூடும். அவைக்கு ஏற்றவாறு சொற்களின் தேர்ச்சியில் கவனம் செலுத்தி தேர்ந்து பேச வேண்டும்.  அவைக்கு ஒவ்வாத அநாகரிகமான சொற்களை பேசவும் கூடாது. 

அப்படி பேசினால் பேசுபவர்க்கு நன்மை ஏனெனில் கேட்போரின் நேரமும் வீணாகாது கேட்போருக்கு பேசுவது விளங்கும். அதுமட்டுமின்றி பேசுபவர்க்கு அடுத்த முறை வாய்ப்பும் வழங்கப்படும். 

பழமொழிப் பாடல், 
“கேட்பாரை நாடிக் கிளைக்கப் படும் பொருட்கண் 
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் தோற்பன
கொண்டு புகாஅர் அவை” 
என்கிறது. 

சொல்லின் தொகையென்பது, அரசோடு பறிமாறிக்கொள்கிற அமைச்சர், தூதர் போன்றோர், கொச்சைச் சொற்கள், மற்றும் அவைக்கேற்பிலாத சொற்கள் இவற்றை விலக்கியே பேசவேண்டும், என்பதைக் குறிக்கிறது.

இன்னும் எளிதாக சொன்னால், நடிகர் ரஜினிப் போன்றோர் தனது படங்களில் வரும் (punch)வசனங்களில் மிக முக்கியமான கருத்துக்களை மிக மிக எளிமையாக பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் அளவில் வைத்திருப்பர். ஏனெனில் ரஜினிக்கு தெரியும் தனது படங்களை காணும் திரையரங்குகளில் இருப்பது பொழுதுப்போக்கிற்காக வரும் பாமரர்கள் அறிவு பெற வரும் மாணவர்கள் அல்ல என்று. அதனால் தான் பாடம் எடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் punch வசங்களை ஒரிரு முறைக் கூறுகிறார்.

உதாரணமாய் சொன்னால், நடிகர் ரஜினி அவர்கள் “அதிகமாய் ஆசைப்பட்ற ஆம்பளையும் அதிகமாக கோபப்படும் பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை” என்று  படைப்பா படத்தில் punch வசனம் பேசுகிறார். பொழுது போக்கிற்காக வரும் திரையரங்குகளில் திருக்குறள் சொல்வது பொருத்தமற்றது. ஆனால் நடிகர் தனுஷ் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்தில் இரண்டு திருக்குறள்களை punch-ஆக சொல்லி இருப்பார். எத்தனைப்பேருக்கு அக்குறள் நியாபகம் இருக்கிறது என்றுப்பாருங்கள். அதனால் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக என்றுக்கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. (சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.).

மணக்குடவர் உரை
இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர். தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

Thirukkural - Management - Public Speaking - Audience Analysis
A great speaker is one who understands the quality, qualification, experience, and expectations of his audience. He also knows the nature or quality of the words he chooses and the way he presents the message to suit the standard of his audience, expresses Kural 711. 

Meticulous masters of words 
Must suit them carefully to the council.

So, knowledge of the audience, knowledge of the words you select, and knowledge of your style of speaking are essentials of speaking in public. 
Those who do understand their audience and the effects of their words on their audience are great orators. They have mastered the art of public speaking.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever one is speaking in front of an audience in a meeting / group / auditorum / mass gatherings etc, one should analyze the audience in terms of the intellect, mindset, the purpose of gathering, experience, value of their time, etc before speaking to the audience.  After analyzing, one should appropriately tailor the speech according to the target audience with right choice words at right length. For e.g, in a board meeting we can prioritze the points and give information in bullet points. CEOs, directors etc can undestand them easily. Whereas when speaking to a mass gathering oru speech should be simple and it might have to be explained with some stories and factors. If they don't understand, then they won't engage. They will loose interest and walk away.

Words have impact. So use it wisely. Others time have value. Take it into account as well. Don't waste your boss time. Similarly Don't waste mass gatherings time

Questions that I ask to the kid
How should one speak in front of an audience? Why?

No comments:

Post a Comment