ஆபயன் குன்றும் அறுதொழிலோர்

குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
இரண்டாம்உயிரெழுத்து; குரலிசையின்எழுத்து; பெற்றம் மரை எருமைஇம்மூன்றன்பெண்பாற்பெயர்; இடபம் ஆன்மா காண்க:ஆச்சா; விதம் ஆகுகை; ஆவது ஓர்இரக்கக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; இகழ்ச்சிக்குறிப்பு; புழுக்கக்குறிப்பு; நினைவுக்குறிப்பு; ஈற்றில்வரும்வினாவிடைச்சொல்; எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை; பலவின்பால்எதிர்மறைவினைமுற்றுவிகுதி; உடன்பாட்டுஇறந்தகாலவினையெச்சவிகுதி; தொடங்கிஅல்லதுவரையும்எனப்பொருள்தரும்ஒருவடமொழிஇடைச்சொல்.

பயன் பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

குன்றும் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

அறுதொழிலோர் aṟu-toḻilōr   n. ஆறு³+. Brāhmans; பிராமணர்.

நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை;
நூல் - ஒருவர் நூல்களால் பெற்ற அறிவு

மற-த்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).
மறப்பர்

காவலன் - பாதுகாப்போன்; அரசன்; மெய்காப்பாளன்; கணவன்; கடவுள்

கா - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்

காவான் - பாதுகாக்கவில்லை / கடமையை செய்யவில்லை

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
ஒரு அரசன் தனது கடமைகளை செய்யவில்லை என்றால், அதாவது மக்களையும், நாட்டின் செல்வத்தையும், செல்வம் எனப்படும் அறிவுச்செல்வத்தையும் பொருட்செல்வத்தையும், காக்கவில்லை என்றால் அந்த நாட்டில் எல்லா செல்வங்களும் குறையும், அறத்தொழில் செய்யும் பிராமணர்கள் தாங்கள் கற்ற நூலில் இருந்து பெற்ற அறிவினை மறந்துப்போவார்கள்.

பயன் என்ற சொல்லுக்கு பால் என்ற பொருளை பல உரைகள் கூறுகின்றன. பால் வளம் என்பது எல்லா தேசங்களிலும் பிரதானமான ஒன்று என்று சொல்ல முடியாது. ஆதலால் பயன் என்ற சொல்லுக்கு செல்வம் என்பதே பொருந்தும். செல்வம் என்றால் விவசாயம், விலங்குகள், மக்கள் என்று அனைத்துச்செல்வங்களும் அடங்கும். அரசன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் இச்செல்வங்கள் குறையும்.

அறுதொழிலோர் என்று இங்கு பிராமணர்களை கூறப்படுகிறது. ஆனால பிறப்பால் பிராமணர்கள் என்று கூறப்படவில்லை. மனுஸ்ம்ருதிகள் பிராமணர்களுக்கு வகுக்கபட்ட ஆறு தொழில்களை செய்யும் பிராமணர்களை குறிக்கிறது.  ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மை இங்கு குறிக்கிறது. ஆதலால் அரசன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் வேறு எந்த தொழிலையும் செய்யாமல் கல்வி கற்பதையும் வேள்வி செய்வதையும் மட்டும் கொண்ட பிராமணர்களை அரசால் சரிவர பாதுக்காக்க முடியாது. அப்படி பிராமணர்களை பாதுகாக்கவில்லை என்றால் அவர்கள் தலைமுறை தலைமுறையாக காத்து வரும் அறிவினை ஞானத்தினை மறந்துப்போவார்கள். ஞானம் ஒரு நாட்டின் மிக பெரிய சொத்து. அதனை ஒரு நாடு இழக்கும் என்றால் அதனை திரும்ப பெற பல நூற்றாண்டுகள் கூட ஆகும். அது ஆபத்தானது. அழிவானது.

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது அரசனின் தலையாய கடமை. அதனை செய்யவில்லை என்றால் அது கொடுங்கோல் ஆட்சியாகும். அனைத்து செல்வங்களும் குன்றும்.

மேலும்: அஷோக் உரை

அதேபோல பிராமணர்களைப்பற்றி அல்லது பிராமணத்தன்மை பற்றி குறள் சொல்வதென்ன என்றும் பார்க்கலாம். அந்தணர் என்று குறள் சொல்வது பிராமணர்களை அல்ல என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. அறவழி நின்றவர் என்ற பொருளில் அது பயின்றுவருவதனாலும் குறளின் பொதுவான கருத்துநிலையாலும் அது அறிவர் என்றும் அறவோர் என்றும் சமணர்களால் சொல்லப்படும் துறவிகளையே குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். குறட்பாக்கள் அதற்குத்தான் பொருந்தி வருகின்றன.

ஆனால் குறள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் [ குறள் 560]

என்று சொல்லும் இடத்தில் அது பிராமணர்களையே குறிக்கிறது. இங்கே புராதன ஸ்மிருதிகள் வகுத்த ஆறு தொழில்களையே குறிக்கிறது என்பது தெளிவு. வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின் ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்கு பட்டியலிடுகிறது.  பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக பிராமணர்களை வகுத்துரைப்பவை.

குறள் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற சொல்லாட்சியின் வழியாக பிராமணர்களின் இந்த செயல்சார்ந்த அடையாளத்தையே முன்னிறுத்துகிறது என்று சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு வரக்கூடிய மேலிடத்தையோ உரிமைகளயோ அது பொருட்படுத்தவில்லை. ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மையையே அது கணக்கில் கொள்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளில் உள்ள செய்தொழில் என்ற சொல்லுடன் இங்குள்ள அறுதொழில் என்ற வரியை இணைத்துக்கொள்ளலாம்.

ஆக, முழுமையாக மனு முதலிய ஸ்மிருதிகளில் இருந்து வேறுபட்டுச் செல்கிறது குறள்.

பரிமேலழகர் உரை
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

No comments:

Post a Comment