குறள் 471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
வலி - vali s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி.
வலியும் - வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப்பெறும் திரிபு
வலியும் - வலி
மாற்றான் - பகைவன்; ஒட்டுப்பலகை; மாற்றுமருந்து.
வலியும் - வலி
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
வலியும் - வலி
தூக்கிச் - தூக்கிவிடுதல் - மேலுயர்த்தல்; தூண்டிவிடுதல்; உதவிபுரிந்துகாத்தல்; காண்க:தூக்கிலிடுதல்
தூக்கு - தொங்கவிடும்பொருள்; உறி; உயர்ச்சி; நிலைகோல்; துலாராசி; ஐம்பதுபலமுள்ளநிறை; பாட்டு; கூத்து; இசை; பாக்களைத்துணித்துநிறுக்கும்செய்யுளுறுப்பு; ஆராய்ச்சி; காண்க:தூக்கணங்குருவி; வாரடை; கனம்.
செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வதற்கு முன்னர் நான்கு முக்கியமானவற்றை செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்
1. வினை வலி - செயலின் வலிமையை நாம் அறிய வேண்டும். செயல் விழையும் உழைப்பை பற்றியும் அதன் சாத்தியங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியும் அதன் ஆபத்துகள் பற்றியும் அச்செயல் விழையும் திறன்களை பற்றியும் அச்செயல் விழையும் முயற்சியை பற்றியும் நன்கு ஆராய வேண்டும். செயலை செய்யக்கூடிய இடம் நேரம் சூழல் போன்றவற்றை ஆராய வேண்டும். செயலின் நடுவே ஏற்படக்கூடிய தவறுகளையும் இடர்களையும் ஆராயா வேண்டும். இதுபோல் செயலை எல்லா கண்ணோட்டங்களிலும் ஆராய வேண்டும்.
2. தன் வலி - ஒரு செயலை செய்யும் பொழுது நம்முடைய ஆற்றலை நன்கு ஆராய வேண்டும். அச்செயல் விழையும் எல்லா திறனையும் நாம் கொண்டு இருக்கிறோமா என்று அறியவேண்டும். அச்செயல் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு, மனத்திட்பம், நேரம் என்று அனைத்தையும் ஆராய வேண்டும். அச்செயல் கெடுக்கும் உடல் வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
3. மாற்றான் வழியும் - ஒரு செயலை செய்யும் பொழுது அதற்கு எதிரிகள் இருக்கக்கூடும். அல்லது சூழ்நிலைகளும் இடர்களும் நமக்கு எதிரியாக வாய்ப்பு உண்டு. ஆதலால் அதனை பற்றியும் ஆராய வேண்டும். போர் அல்லது வணிகம் என்று வைத்துக்கொண்டால் எதிரியின் ஆற்றலை பற்றியும் ஆராய வேண்டும். எதிரியிடம் பணிபுரியும் மக்களின் திறன்களையும் ஆராயவேண்டும். வலிமையான எதிரியை எதிரியும் மதிப்பர்.
4. துணை வலி - நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை நம்முடைய முயற்சியால் மட்டும் செய்து விட முடியாது. அச்செயலை செய்வதற்கு ஒரு ஆயுதமோ அல்லது மற்ற மக்களின் உதவி என்று பலதரப்பட்ட துணை அவசியம் ஆகிறது. ஆதலால் நாம் செயலில் பயன்படுத்தும் கருவி அல்லது ஆயுதத்தின் வல்லமையை முழுமையாக ஆராயவேண்டும். அந்த ஆயுதம் பழுது பார்க்க படவேண்டும் என்றாலோ அல்லது வேறு பொருத்தமான ஆயுதம் வேண்டும் என்றாலோ அதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும். மற்றவர்கள் செயலுக்கு தேவை என்றால் அவர்களின் திறனையும், மனதிட்பத்தையும், உழைப்பையும் நன்கு ஆராய வேண்டும்.
இவ்வாறு ஒரு செயலை பற்றியும் அது சம்மந்தமாக அனைத்தையும் பற்றி சீர்தூக்கி ஆராய்ந்து ஒரு செயலை செய்ய வேண்டும். தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறையும். அப்படி செய்தால் அதில் வெற்றியும் ஆக்கமும் உண்டாகும்.

வாணிப நிர்வாக மேலாண்மை பாடங்களில் வியூகம்/திட்டமிடல் பற்றிய பாடங்களில் ஆகியவற்றில் முதலாவதாக சொல்லித்தரப்படும் பாடங்களில் ஒன்று SWOT Analysis (Strength, Weakness, Opportunities, Threats) Analysis/ஆய்வு. SWOT Analysis இத்திருக்குறளுடன் ஒத்து இருப்பதை காணலாம்.
மேலும்: அஷோக் உரை
பழமொழிப் பாடல் (321)
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.
அறிவிற் சிறந்தோர், தம்மால் முடியக்கூடிய செயலா என்று முதலில் ஆராய்ந்து, பின் தனக்குத் துணையானவர்களையும் ஆராய்ந்து, செய்யக்கூடிய செயலில் உள்ள பயனையும் ஆராய்ந்து, மேற்கொள்வர்.அங்கனமின்றி, முறையறியாமல், ஏதேனும் செய்தால், தாம் நினைந்ததற்கு மாறான துன்பமே விளையும் என்கிறது மேற்கண்ட பாடல்.
பரிமேலழகர் உரை
வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
(இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.).
மணக்குடவர் உரை
செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.
Thirukkural - Management - Decision Making
Besides time and place, the strength of the decision maker plays a critical role in deciding the outcome of one's decision. Kural 471 provides that a decision maker must acquire knowledge of four components before executing a task. The components are: 1) The challenges of the task, 2) The strengths of the decision maker, 3) The strengths of his competitor, and 4) The strengths and resources of his supporters. Assess thoroughly all these four components before you venture into any task.
Weigh the strength of these before you act-
The deed's, your own, your enemy's and ally's
English Meaning - As I taught a kid - Rajesh
Before one ventures into a work, one should assess these four components thoroughly and decide 1) The task at hand - the challenges of the task, value of the task, skills required, time, place of operation, benefits of the task etc 2) Strengths of the self/decision maker - what are the strengths and skills of the self, is there any gap between the requirement?, what is the scope of learning it before starting the task 3) The strengths of his competitor and 4) The strengths and resources of his supporters. Only after assessing and decide, one execute the task
Questions that I ask to the kid
What are the four components one should assess before decide upon a task?
No comments:
Post a Comment