நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்

குறள் 452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.
இயல்பால் - தன்மை போல
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
திரி - முறுக்குகை; விளக்குத்திரி; தீப்பந்தம்; தீக்குச்சி; காதுக்குஇடும்திரி; எந்திரம்; மெழுகுவத்தி; புண்ணுக்குஇடும்திரி; காண்க:வெள்ளைப்பூண்டு; பெண்; மூன்று.
திரி-தல் -tiri-   4 v. [T. tirugu, K. tiri, M.tirikka.] intr. 1. To walk about, wander,go here and there; அலைதல் வண்டாய்த்திரிதருங் காலத்து (நாலடி, 284). 2. To turn, whirl,revolve, as the heavenly bodies; சுழலுதல் வலந்திரியாப் பொங்கி (பு. வெ 9, 12). 3. To be twisted,convolved; திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி(கலித். 15). 4. To move; சலித்தல் நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6).5. To proceed; போதல் (பிங்.) 6. To return;திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான்(கம்பரா. அங்கத. 10). 7. To change, vary;வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா.2). 8. To be substituted, as a letter byanother; எழுத்து மாறுதல் தோன்ற றிரிதல் கெடுதல்(நன். 154). 9. To perish; கெடுதல் (திவா.) 10.To change in quality; to become sour, as milk பால் தன்மைகெடுதல். 11. To be confused;மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54).--tr. To abandon, leave; கைவிடுதல் இனந்திரியேறுபோல (சீவக. 2720).  
திரிந்து - கெட்டு
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
ஆகும் - நடக்கும்
மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.
மாந்தர்க்கு - மனிதர்களுக்கு
இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்
இனத்து’ - உறவாடும் மக்கள்
இயல்பது - இயல் - தன்மை; தகுதி சுகுமாரதை ஒழுக்கம் உழுவலன்பு செலவு ஒப்பு இயற்றமிழ் இலக்கணம் நூல் நூலின்பகுதி; திவ்வியப்பிரபந்தத்தைக்குழுவாகநின்றுஓதுகை; மாறுபாடு சாயல் பெருமை
ஆகும் - ஆதல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
இது மிகவும் எளிமையான ஒரு குறள். ஒரு நீரின் இயல்பு அது வந்து சேர்ந்த நிலத்தின் தன்மைக்கேற்பதாகும். ஏன் எனில் ஒரு மாசு நிறைந்த நிலத்தில், விஷ அமிலங்கள் கொண்ட நிலத்தில், கழிவு நீர் தேக்கபட்ட நிலத்தில் மாசும் விஷமும் தான் மிச்சம். அந்த நிலத்தில் தண்ணீர் உற்றி, அதனை பின்பு எடுத்துக்குடித்தால் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் அல்லது நமது அழிவு நோக்கி எடுத்துச்செல்லும். ஆக மொத்தம் ஒரு கேடான நிலத்தினால் நல்ல ஆரோக்கியமான நீர் திரிந்து கெட்டு விட்டது.

அதுபோல, மனிதர்கள் சிறுமை (சிறுமை, செருக்கு, சினம் என பல இழுக்குகள்) கொண்ட மனிதர்களிடம் உறவு வைத்துக்கொள்வதனால் அவர்களும் கெடுவர் அவர்களுடைய அறிவும் கெடும்.

அதேப்போல நல்ல நிலத்தில் இருந்தால் நீர் நன்றாக ஆரோக்கியமானதாக இருக்கும். அதுப்போல அறிஞர்களுடன் உறவு வைத்துக்கொண்டால் வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

”செம்புலப் பெயல்நீர் போல” (குறுந்.40:4)

கம்பராமாயணத்தில் கும்பகருண வதைப்படலத்தில் கும்பகருணன், இராவணனுக்குக் கூறும் அறிவுரையாகக் கீழ்கண்டபாடல் இக்குறளின் கருத்தை ஒட்டியே சொல்லப்படுகிறது.
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்.
புலத்திய முனிவரின் வழிதோன்றல்களான வஞ்சனையற்ற நமது குலத்தின் தன்மை உன்னாலே ஒழிந்தது. நமது ஆட்சியே முடிவுறாதா? உனது செயல்களே நமது வெற்றிகள் வீழ்ச்சியடைய காரணமாகி விடும்.  குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின் இயல்பும் அன்றோ? என்று இராவணனைக் கேட்கிறான் கும்பகருணன்.  ஔவையாரின் (எந்த ஔவையாரோ?) வாக்கான “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்பது பிறந்த குலத்துக்கு ஏற்றவாரே ஒருவரது குணம் அமையும் என்று வருவதால், பலரும் எதிர்ப்பு கூறுவர். இதை வருணம் என்ற பொருளில் பொதுவாகக் கூறுவது தவறுதான். ஆனால் நற்குடிப்பிறப்பே ஒருவருவக்கு நல்லவற்றைக் கற்பித்துவிடும் என்பதில் ஐயம் இருக்கமுடியுமா? குப்பையில் மாணிக்கமும் உண்டு, அதைப்போல நற்குடிப்பிறப்பினருக்கு, ஊழ் வினையாலும் சேர்க்கையாலும் சில சமயங்களில் நற்குடிப்பிறந்தோரும் பிறழ்வது உண்டு. இராவணன் பிறப்பிலே உயர்ந்தவனாயிருந்தாலும், பெண்ணாசையிலே அறநெறி பிறழ்ந்தான், தாழ்ந்தான், மடிந்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். 
(எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.

மு.வரதராசனார் உரை
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

Thirukkural - Management - Personality Development - Environment
Valluvar resorts to a powerful simile in Kural 452 to substantiate his view on the role of environment  in shaping a person's personality.

The soil colours the water, and one's
One's mind.

The color of rainwater changes  according to the color of the soil that it comes into contact. The contents and the color of the rainwater are the same until that falls on earth. Once the rainwater falls on earth, it loses its originality and absorbs the characteristics of the earth. Similarly, a person has his originality until he connects with others. Once a person connects with another person or a group, that person loses his originality and gains the qualities of the other person or the group. The company he is frequently in influences his knowledge. Therefore, environment  is more powerful than the inherent or genetic qualities of a person.

No comments:

Post a Comment