எனைத்தானும் நல்லவை கேட்க

குறள் 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
[பொருட்பால், அரசியல், கேள்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனை - eṉai   adv. என் What, why;என்ன.  , eṉai   எ³. adj. All; எல்லாம் சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62).--adv. However much;எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207).
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

எனைத்தானும் -  எவ்வளவு சிறிதாயினும்

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக
அனைத்தானும் - அந்த அளவில்

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
பெருமை - மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை
தரும் - ஈன்றும்

முழுப்பொருள்
எவ்வளவு சிறிதாயினும் சிறிது நேரமாயினும் எவ்வளவு சிறிது பயன் பயக்குமாயினும் நல்லவற்றை செவி வழியாவது கேட்டு கற்தல் வேண்டும். எல்லா நல்ல நூல்களையும் ஒருவரால் கற்க முடியாது. ஆதலால் சிலவற்றை செவி வழியாவது கேட்க வேண்டும்.  இதில் வள்ளுவர் பெரியோர் என்று வயதில் பெரியவரை குறிப்பிடவில்லை ஏனென்றால் எவ்வளவு வயதில் சிறியவர் ஆயினும் அவரிடம் கற்க ஏதாவது இருந்தால் அவரிடம் கற்கலாம். அப்படி சிறிதாயினும் ஒருவர் செவி வழியாக கற்றால் அது அவருக்கு மிகுந்த வல்லமையையும் பயனையும் ஈன்றுத் தரும். 

அது மட்டுமின்றி இங்கே நாம் நோக்க வேண்டிய மற்றோன்று நல்லவை கேட்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்கிறார். தீயவை என்றால் காது கொடுத்துக் கூட கேட்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.

உதாரணமாக
திருவருட்செல்வர் திரைப்படத்தில், மன்னர் (மன்னராக வருபவர் சிவாஜி கணேசன்) அவர்களுக்கு உள்ள சந்தேகத்தை போக்க ஒரு குழந்தை (குழந்தையாக குட்டி பத்மினி) வந்து பதில் கூறும். அதனை ஏற்றார் அரசர். ஆதலால் அவரால் கேள்விகளுக்கு விடைக்காண முடிந்தது. 

Image result for thiruvarutchelvar kutty padmini


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Thirukkural - Management - Listening
Though listening has its own benefits, we will not become wise just by listening to everything we come across. What gives us an advantage is the things that we listen to. We need to be choosy in our listening. The Kural 416 educates us of what we need to listen.

Listen to the good however little 
And gain that much.

Whatever little we listen to, let that be relevant  so that that will make us learned and wise. That sort of listening will help you learn things better and give you a deep fulfillment.

English Meaning - As I taught a kid - Rajesh
No matter how big or small irrespective of the size of learning,  or its impact, or from whomever we can learn, one should listen and learn from others. Through such numerous small learnings, its cumulative and compound effect would be have a bigger impact in our life and career. Listening and learnings from others is important because 1) We can learn only limitedly from books because we have only limited time 2) We can learn diverse perspectives, experiences, fine-tuning tips, pitfalls from others 3) We don't have to re-invent the wheel, we can build on existing things and move the needle. 

Questions that I ask to the kid
1) Why should listen to and learn from others? What are the benefits?
2) Can we learn everything from books? Why? So, what should we do ?

No comments:

Post a Comment