Skip to main content

Posts

Showing posts from June, 2016

ஞாலம் கருதினுங் கைகூடுங்

குறள் 484 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் [பொருட்பால், அரசியல், காலமறிதல்] பொருள் ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை கருதினுங் (கருதினும்) - எண்ணினாலும், ஆசைப்பட்டாலும், நினைத்தாலும், குறிக்கோள் கொண்டாலும், விழைந்தாலும், கைகூடுங்  (கைகூடும்) - நடைவேறும், கிடைக்கும், இலக்கை எட்டுவோம் காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; கருதி - பார்த்து, எண்ணி, ஆய்வு செய்து இடத்தாற் (இடத்தான்) - செயல் செய்யும் இடத்திற்கு ஏற்ப / தன்மைக்கு ஏற்ப செயின் - செய்தால் முழுப்பொருள் இவ்வுலகையே ஒருவர் விழைந்தால் அல்லது உலகம் போற்றும் சான்றோன் என்னும் உயரிய இலக்குகளை விழைந்தால் அதனை அவனால் அடைய முடியும். அவனுக்கு கிட்டும். ஆனால் அதனை அடைவதற்கு தேவையான செயல்களை நன்கு ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய இடத்தினை ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய சரியான நேரத்தை ஆராய்ந்து இருக்க வேண்டும். என்னதான் நாம் நன்றாகச் சிந்தித்துச் சரியான செயல்களைத் ...

உழவினார் கைம்மடங்கின் இல்லை

குறள் 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. [பொருட்பால், குடியியல், உழவு] பொருள் உழவினார் - உழவு செய்யும் விவசாயிகள்/மக்கள் கைம்மடங்கின் -  உழவுக்கு ஏர்பிடித்து, நாற்று நட்டு,  களை பறித்து, கதிர் அறுத்தல் முதலிய வேலைகளுக்கு கைகளை மடக்குதல்- உழவு வேலை செய்தல் இல்லை - இல்லாமல் போனால் விழைவு - விருப்பம் உம் - எதிர்மறையும்மை விழைவதூஉம் - நாம் விருப்ப படாத விட்டு - ஆகாசம் விட்டேம் - ஆகாசத்தை பார்த்துக்கொண்டு என்பார்க்கு - இருக்க வேண்டிய நிலை - நிலை வந்துவிடும் முழுப்பொருள் விவசாயிகள் ஏர்பிடித்து, நாற்று நட்டு, களை பறித்து, கதிர் அறுத்து விவசாய்ம் செய்வர். அப்படி தன்னை வருத்திக்கொண்டு உழவு தொழில் செய்து இவ்வுலகிற்கே உணவு படைப்பார்கள். அப்படிபட்ட உணவையே நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணுகிறோம். நம்மை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? எதுவும் வேண்டாம் என்கிற துறவியார்கள் கூட உணவு உண்டு தான் ஆகவேண்டும் ஆனால் அவ்விவசாயிகள் உழவு தொழிலை செய்யவில்லையென்றால் நமக்கு உணவு கிடைக்காது. உணவிற்கு வானத்தை பார்த்து தான் நாமும் ஏன் துறவிகள் கூட இருக்...

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For English meaning scroll to the bottom of this post) பொருள் அன்று - அந்நாள் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா. அன்று அறிவாம் - அந்நாளில் அறிந்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், செய்துக்கொள்ளலாம் என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express) என்னாது - என்று சொல்லாமல் அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) -  தருமம் ; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம், தன்னறம் - ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம்.   செய்க - செய்ய வேண்டும் மற்று அது - மற்றவை பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வை முதலியன குறைதல். பொன்றுங்கால் - இறுதிக்காலத்தில் பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உத...

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

குறள் 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] பொருள் சிதை - கீழ்மை சிதைவு - அழிகை, குற்றம்; கேடு; அழிய; தவற   இடத்து - இடம்; வாய்ப்பு,  இடம் கொடுத்தால்; தருணம்;  கொடுத்தால் சிதைவிடத்து - (கவனம்) சிதைய,அழிய வாய்ப்பு, இடம்,தருணம் கொடுத்தல் ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல். ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர் உரவு - Strength, force, firmness, hardness, வலி உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons) புதை - சரீரம் அம்பு - அத்திரம்; மூங்கில் பட்டு - (அம்பினால்) அடிப்பட்டு பாடு - நிலைமை, பெருமை, உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வரு...

இணருழ்த்தும் நாறா மலரனையர்

குறள் 650 இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இணர் - பூங்கொத்து [மெல்லிணர்க்கண்ணி], தொடர்ச்சி, குலை (bunch of fruit), ஒழுங்கு(arrangement), சுவாலை(flame), கிச்சிலிமரம், மாமரம். இணர்தல் - To pervade;வியாபித்தல்; pervade: (especially of a smell) spread through and be perceived in every part of. pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout. ஊழ் - நியதி, பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை ஊழ்த்தும் - குணமுடைய; மலர்ந்தும் நாறு  - மணத்தல், தோன்றுதல், மோத்தல் (to smell),  நாறா - மணக்காத மலர் - பூ  அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons கற்றது - அறிவு, வித்தை, நூல் ஆகியவற்றை பயின்று உணர - மற்றவர்களும் (தனக்குமே கூட) உணர படியாக, புரிந்துக்கொள்ளும் படியாக, கற்கும் படியாக விரித்து ...

அவாவினை ஆற்ற அறுப்பின்

குறள் 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் [அறத்துப்பால்,  துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் அவா - அது ; ஆசை, அவாவு, இச்சி, விரும்புதல், பற்றுச்செய்தல், ஒன்றைவேண்டிநிற்றல்,  இறங்குதல் அவாவினை   - ஆசை தனை ஆற்ற - ஆற்று,  மிகவும், முற்றும், Greatly,exceedingly, entirely ஆற்றல் - வலிமை, முயற்சி, மிகுதி, ஞானம், நிலையுடைமை(stability), அறு - அரிதல், ஊடறுத்தல், நீக்குதல், இல்லாமற்செய்தல், வெல்லுதல், அறுப்பின் - இல்லாமல் செய்தால், வென்றால், தவாநிலை - வழு வாநிலை, a firm condition தவா வினை - மீண்டும் பிறவாத நிலை அல்லது துன்பம் அல்லாத இன்பம் மட்டும் பயக்கும் நிலை தான்  வேண்டும்  - தான் வேண்டியது; தான் விரும்பிய ஆற்றான்   - வலியில்லாதவன் வரும் - வந்து சேரும் முழுப்பொருள் ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை, இச்சைகளை, விருப்பங்களை, பற்றுகளை முற்றிலுமாக நீக்கி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவனுக்கு தவ நிலை எனப்படும் மறுபிறவி அல்லாத நிலை வாய்க்கும். இந்நிலை என்பது ஒரு நிலையான நிலை (வழுவாநிலை). இந்நிலை அவன் ...