Skip to main content

வலியார்முன் தன்னை நினைக்கதான்

குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
வலியார் - வலியன் - வலிமையுடையான்; திறமையானவன்; உடல்நலமுடையவன்; கரிக்குருவி; இறுகியநிலையுடையது.

வலியார் - (நம்மை விட)வலிமை உடையவர் 

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

நினைத்தல் -கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நினைக்கதான் - நினைக்காதவன் 

மெலியார் - meliyār   n. id. Weak,powerless persons; பலவீனர். மெலியார்மேன் மேகபகை (குறள், 861); வலியிலார்

மெலியார் -(நம்மை விட) எளியவர், நலிந்தவர் 

மேல் மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
மேல் செல்லும் - வெகுண்டுழுதல்,அதிகாரம் செலுத்துதல் (dominate)

முழுப்பொருள்
தன்னை விட மெலிந்தவர், பலவீனமானவர் முன் தன பலத்தை பிரயோகிக்க முயலும் அருள் இல்லாதவன், அவ்வாறு செய்யும் முன், அவனை விட வலிமை உடையவர் முன் அவன் அஞ்சி நிற்க வேண்டிய நிலையம் வரும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என உரைக்கிறார் வள்ளுவர்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்னும் சொல்லாடல் கூட இக்குறளை ஒற்றியே அமைந்து உள்ளது . 

இலங்கை ஜெயராஜ்
அருள் பெறுவதற்கு என்ன வழி? வலிமை உள்ளவன் உன்னை துன்புறுத்தி இருப்பான். அப்பொழுது பொறுத்துக்கொண்டு நீ வருத்தப்பட்டிருப்பாய். பிறகு உன்னைவிட எளியவன் (மெலிந்தவன்) உன் முன்னே வந்தால் அவனை நீ துன்புறுத்த ஒரு வாய்ப்பு வந்தால் நீ முன்புபட்ட துன்பத்தை நினைத்துப்பார். அருள் தானாக வந்துவிடும். அல்லது பிறர் நமக்கு இத்துன்பத்தை செய்தால் நமக்கு எவ்வளவு துன்பம் வருத்தமும் வரும் என்று ஒரு நொடி யோசித்துப்பார்த்தாய் என்றால் பிறருக்கு துன்ப செய்யமாட்டாய். அப்பொழுது அருள் பிறக்கும். இது பிற உயிர்களிடத்திலும் நீ காண்பிக்கும் அருளுக்கும் பொருந்தும். 

அப்படி என்றால் அரசர்கள் பிறரை தண்டிக்க கூடாதா? அதற்கும் திருவள்ளுவர் "குறள் 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்" என்று கூறுகிறார். அதாவது நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, "திருவிளையாடல்" திரைப்படத்தில், ஹேவனாத  பாகவதராக வரும் பாலைய்யா - சிவா பெருமானாக வரும் சிவாஜி பகுதியை கூறலாம்.

தன பாட்டுக்கு பாண்டிய நாடே,மற்றும் ஆண்டவனே அடிமை  அடிமை என்றும், தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்றும் அகந்தையில் கூறும் ஹேவனாத பாகவதரை சிவா பெருமான் சாதாரண விறகு வெட்டி போல் தோன்றி அவரை மிஞ்சும் விதமாக பாடி அவர் அகந்தையை அடக்கி வலியவர்க்கு வலியவர் உலகில் உண்டு என உணர்த்துவார் .



பரிமேலழகர் உரை
வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

மு.வரதராசனார் உரை
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
எளியோரிடம் கருணையுடன் இரு.

பொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.

அகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.

கருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.

Thirukkural - Management - Managing Anger
We all know the damages caused by anger. The moot question is, ’Is there a technique to manage anger?’ Yes, definitely there is one. A technique to manage anger is before you shout at, threaten, and abuse a helpless person who is weaker than you are, just think for a moment of your precarious position or helplessness or your fear when you are in the presence of someone who is stronger and more powerful than you are, challenges, Kural 250. When you put yourself in that predicament, you will 
understand the predicament  of the person who will be the victim of your anger.

When you threaten a weaker than yourself
Think of  yourself before a bully.

Just think of a situation where you were helpless when someone more powerful than you insulted you. Remember that the helpless recipient of your anger will have similar emotion when you express your anger at him.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...