Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_035. Show all posts
Showing posts with label Athikaaram_035. Show all posts

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்ற - அல்லாத

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

அறுக்கும் - அறுத்தல் -  அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்த

மற்றும் - மேலும்; மீண்டும்

நிலையாமை - நிலைத்துநில்லாமை; உறுதியின்மை, உறுதியற்றதன்மை; அழிந்துபடும்தன்மை.
 
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணப்படும் - பிறர்க்குத் தெரியவருகிறது; உணரலாம்

முழுப்பொருள்
பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு என்று நீடுக்கொண்டே இருப்பது ஒரு சுழற்சி. பிறந்தவன் இறப்பான் - அதுவே நிலையாமையின் தன்மை. இத்தகைய நிலையில்லா வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து விடுபெற ஒருவர் பற்றற்று இருத்தல் வேண்டும். ஆசைகள் முற்றும் அற்று இருத்தலே நிலையில்லா வாழ்க்கையில் சுழற்சையை அறுத்து பிறப்பில்லாமால் ஆக்கும். இல்லையேல், ஆசையுடன் இருந்தால் மீண்டும் பிறந்து இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டியதுதான்.

அறநெறிப்பாடலில் வீட்டினையுறுவான் இயல்புபற்றி கூறும் பாடலில், “பற்றின்மை ஓட்டுவானுய்ந்துபோவான்” என்பார், முனைப்பாடியார். மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன் வீட்டுப்பேற்றினை அடைவான் என்பதே இதன் பொருள். சைவ ஞானிகள், சிவபெருமானை பிறப்பறுக்கும் பேராளனாக உருவகம் செய்திருக்கிறார்கள். திருவாசகத்தின்கண் வரும் சிவபுராணத்தில் சிவபெருமானை ‘பிறப்பறுக்கும் பிஞ்சகன்” என்றும், “மாயப் பிறப்பறுக்கு மன்னன்”, “பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” என்றும் மாணிக்கவாசகர் கூறுவார்.

“பற்றவா வேரொடும் பகையறப் பிறவிபோய்
முற்றவா லுணர்வமேன் முடுகினார்” (கம்ப.தாடகை.3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

மு.வரதராசனார் உரை
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
தலைப்பட்டார் - தலைப்படுதல் - talai-p-paṭu-   v. id. +.tr. 1. To unite, be in communion with; ஒன்றுகூடுதல் சிவனைத் தலைப்பட்டுச் சென்றொடுங்கும்ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet,cross; எதிர்ப்படுதல் ஓர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 3. [T. talapaḍu.] To under-take, enter upon; மேற்கொள்ளுதல் ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா 2). 4. To obtain, attain;பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள்,1289).--intr. 1. To advance; to improve incircumstances; முன்னேறுதல் 2. To be noble,exalted; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 3. To enter, asa character on the stage; புகுதல் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள் (பு. வெ 10, பொதுவி. 5,உரை). 4. To follow; வழிப்படுதல் தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப்.2). 5. To commence; தொடங்குதல் அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.

தீரத் - முற்ற; மிக

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்

மயங்கி - மயங்குதல் - மருளுதல்; தன்னைமறத்தல்; வெறிகொள்ளுதல்; மாறுபடுதல்; நிலையழிதல்; வருந்துதல்; தாக்கப்படுதல்; ஐயுறுதல்; தயங்குதல்; கலத்தல்; போலுதல்; நெருங்குதல்; கைகலத்தல்; அறிவுகெடுதல்; கலக்கமுறுதல்; உணர்ச்சியிழத்தல்.

வலைப்பட்டார் - வலைப்படுதல் - வலையில்அகப்படுதல்; சூழ்ச்சிக்குட்படுதல்.

மற்றையவர் - மற்றவர்கள்; பிற மக்கள்

முழுப்பொருள்
வீடுபேற்றினை அடைய முற்பட்டு துறவறம் பூண்டவர்கள் தனது ஆசைகளை பற்றுகளை விருப்பு வெறுப்புகளை முற்றும் துறந்தார் என்றால் அவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள். (துறவறத்தில் கூறியுள்ள மற்றவற்றையும் பின்பற்றினால் வீடுபேறு கிட்டும்). 

ஆனால் துறவறம் பூண்டுவிட்டு ஆசைகளைத் துறக்கவில்லையென்றால் (அது ஒருரே ஒரு ஆசையாக இருந்தாலும்) அவர் வீடுபேற்றினை அடைய மாட்டார். ஏனெனில் அந்த ஆசை என்னும் மயக்க வலையிலேயே அகப்பட்டு சிக்கித்தவிப்பார். 

முன்னர் வேறு ஒரு குறளில் "குறள் 208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று" தீவினையின் எச்சம் தனது காலடியிலேயே தங்கிவிடும். நேரம் பார்த்து வஞ்சித்துவிடும் என்று படித்து இருந்தோம்.

அதுப்போல் ஒரே ஒரு ஆசையாக இருந்தாலும், அவ்வாசை நம்முள் எங்கேயோ தங்கி நேரம் பார்த்து நம்மை வஞ்சனை செய்து கவிழ்த்துவிடும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பெனும் அதனின்மேற் கேடு மற்றுண்டோ
துறப்பெனத் தெப்பமே துணைசெ யாவிடின்
பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ” (கம்ப.மந்திரப்.21)

பரிமேலழகர் உரை
தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார், மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார். (முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார். இது மறுமைப் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

குறள் 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்றி - பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

விடாஅ - விடா - விடாமல் - நீங்காமல்

இடும்பைகள்இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

பற்றினைப் - பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

பற்றி - பற்றுதல் - பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.

விடாஅதவர்க்கு - விடாதவருக்கு; நீங்காதவருக்கு

முழுப்பொருள்
செல்வத்தின் மீது, உறவுகள் மீது, கொள்கைகள் மீது, வீடு வசதி வாய்ப்புகள் மீது, நிலத்தின் மீது, பொன் நகைகள் மீது, ஆடம்பரத்தின் மீது, கேளிக்கைகள் மீது, (இன்னும் பல ஆசைகள்) கொள்ளும் பற்றுகளை, ஆசைகளை விட்டு ஒருவர் குறிப்பாக துறவறத்தில் இருக்கும் ஒருவர் நீங்கவில்லையென்றால் அவரை துன்பம் நீங்காது பற்றிக்கொள்ளும். 

துன்பத்தின் ஊற்றுக்கண் ஆசைகளே என்று பொதுவாக கூறலாம். துறவறத்தில் பொருளியலுக்கு இடமில்லை லௌகீகத்துக்கும் இடமில்லை. ஆனால் துறவறத்தில் இருந்துக்கொண்டு ஆசைகளை பற்றிக்கொண்டால் உடல் இங்கேயேயும் உயிர் வேறெங்கேயும் இருப்பது போல் ஆகும். அதனால் ஒருவருக்கு வேதனையே. மேலும் ஆசையோடு இருத்தல் துறவறத்தில் முன்னேற, வீடுபேறு பெற மிகப்பெரிய தடையாக இருக்கும். முன்னே செல்லாமல் தேங்கி நிற்பதும் துன்பத்தை தரும்.

“பற்றி விடா “ என்பது பற்றிக்கொண்டு விடாமலிருப்பதையும், “பற்றிவிடா” என்பது, “பற்றுவதில்லை” என்பதையும் குறிப்பதைக் கருத்தில் கொண்டு இக்குறளைப் படிக்கவும்.

சம்பந்தரின் ஆருர் தேவாரம் பற்றுகளை  
”பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங் காதென” (சம்பந்தர்.ஆரூர்.5)

“தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர தாரமென்னும் 
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லெனப் பற்றினாயே”  (சம்பந்தர்.ஆரூர்.9)
என்று குடும்பத்து உறவுகளையே பற்று என்கிறது. உலக வாழ்வியலில் உறவுகள் மற்று வாழ்க்கை வசதிகள் இவற்றைத் துறப்பதே உண்மையான பற்றறுத்த துறவு நிலையாம்.

மேலும்: அஷோக் உரை

இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.

பரிமேலழகர் உரை
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.

மு.வரதராசனார் உரை
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
யான் - தன்மையொருமைப்பெயர்

எனது - தன்னுடைய

என்னும் -  யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

அறுப்பான் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

வானோர்க்கு - வானவர் - தேவர்.

உயர்ச்சி - உயரம்; மேன்மை ஏற்றம்
உயர்ந்த - மேன்மையான

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

புகும் - புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்.

முழுப்பொருள்
இது நான், இது என்னுடையது என்று எண்ணமுடையவன் செருக்கு அதாவது ஆணவம் / அகங்காரம் உடையவன் ஆகிறான். அந்த ஆணவத்தை அறுத்து முன்னேறுபவனை உயர்ந்த வானோர் தேவர் உலகம் ஏற்றுக்கொள்ளும்.

அழியும் தன்மை வாய்ந்தது இப்பொய் உடம்பு அதனை தான் என்றும், நிலையில்லா தன்மை வாய்ந்தது செல்வம் அதனை தனது என்றும், எண்ணுவது பேதைமை/அறியாமை மட்டும் அல்ல அகங்காரத்தின் வெளிப்பாடு ஆகும். அவ்விருளுள் இருந்து வெளிவந்தால் நாம் வெளிச்சத்திற்கு வரலாம்.

நான் எனது என்பவன் அகங்காரம் என்னும் சிறையில் அடைபட்டுக்கொள்கிறான். மயக்கத்தில் திளைக்கிறான். அவ்வகங்காரத்தை அறுத்து அறியாமையில் இருந்தும் அச்சிறையில் இருந்தும் வெளிவருபவன் வெளியே சொர்க்கத்தில் இருக்கிறான் என்றுக்கூட நாம் பொருள் கொள்ளலாம்.

திருக்கோஷ்டியூர் (சௌமியநாராயணப் பெருமாள் கோயில்)
திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டழுத்து திருமந்திர உபதேசம் பெற ராமானுஜர் வந்த போது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார்.



மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நீர்நும தென்றிவை
வேர்முதல் மாய்த்திறை
சேர்மின்” (திருவாய் 1.2:3)

பரிமேலழகர் உரை
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும். (மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும்யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

மு.வரதராசனார் உரை
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

சாலமன் பாப்பையா உரை
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
மற்றும் - மேலும்; மீண்டும்

தொடர்ப்பாடு - தொடர்ச்சி; பற்று; காமநுகர்ச்சி.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

எவன்கொல்? - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும்

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

கல் - kl   --கல்லு, கிறேன், கல்லினேன், கல்லுவேன், கல்ல, v. a. To work away earth, pebbles, &c., gradually, அகழ. 2. To dig out by little and little--as a hole, a tank, &c., to hollow, தோண்ட. 3. To scoop out --as a nut, துருவ. 4. To wash away earth, &c., by little and little-as following water, நீர்கல்ல. 5. To eat away--as caustic, அரிக்க. 6. [prov.] To catch and tear up the fibre in an ola when writing--as a style by being too sharp. எழுத்தாணிக்கூர்கல்ல. இக்காரங்கல்லிக்கல்லியெடுத்துப்போடும். This caustic will eat away (the proud flesh). மலைகல்லியெலிபிடிக்க. To excavate a moun tain to catch a rat; i. e. to take great pains or be at great expense for little profit.

அறுக்கல் - அறுத்தலை செய்தல்

உற்றார்க்கு - உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

உடம்பும் - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி

மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு.

முழுப்பொருள்
பிறவி இறப்பு பிறவி இறப்பு என்ற தொடர் சங்கிலி வேண்டாம் அது தருகிற துன்பங்கள் வேண்டாம் என்று இப்பிறப்பு சங்கிலியை அறுக்க ஒருவன் முற்படுவான் என்றால் அதற்காக துறவறம் பூணுவான் என்றால் அவனுக்கு இந்த உடம்பே ஒரு சுமை அல்லது தண்டனை எனலாம். ஏனெனில் இவ்வுடம்பினில் ஐந்து புலன்களால் ஏற்படும் பல ஆசைகள் வரும். அது மனிதனை அலைக்கழித்து அவனை படுத்தும் பாடு எல்லா துன்பங்களுக்கும் வேர். மேலும் இவ்வுடம்பு இருந்தால் அவனுக்கு உற்றார் உறவினர் என்று உறவுகள் தொடர்பு ஏற்படும். பிறவி வேண்டாம் என்கிறவனுக்கு உறவுகள் மட்டும் ஏன் ? இவ்வுடம்பு இருப்பதால் தான் அவர்கள் இவனை அடையாளம் கண்டுகொண்டு இணங்குகின்றனர். ஆதலால் இவ்வுடம்பே சுமை எனலாம்.

சடாயு உயிர் நீத்த படலத்தில், கம்பர் இக்குறளின் கருத்தின் போக்கிலே எழுதிய வரிகள் இவை: “உடலமும் மிகையென்றெண்ணுவீர்” (கம்ப.சடாயு உயிர்நீத்த 51) என்றும், “உடற் பொறை துறந்துயர் பதம் புக்க” (கம்ப.மராமர.50).

வளையாபதியின் ஆசிரியர், முற்றுக்கருத்தையும் திருக்குறளையே மேற்கோள் காட்டி, 
“மற்றுந் தொடர்பாடெவன் கொல் பிறப்பருக்கல் 
உற்றார் குடம்பும் மிகை இசையுள் வழி” என்று பாடியிருப்பார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.

மு.வரதராசனார் உரை
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை

குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

ஆகும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

நோன்பிற்கு - நோன்பு - தவம்; விரதம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

மயல் - மயக்கம்; பைத்தியம்; ஆசை; காமவிருப்பு; மாயை; ஐயம்; அச்சம்; செத்தை; நெருப்பு; மந்தம்; பிசாசம்.

ஆகும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மற்றும் - மேலும்; மீண்டும்.

பெயர்த்து - Again,in return; பின்னும்.

முழுப்பொருள்
ஒருவர் வாழ்க்கையில் ஒன்றை துறந்தார் என்றால் அந்த இன்மையே இயல்பாக மாறிவிடும். அதாவது இது வேண்டாம் என்று இருந்து விட்டால் அது நமக்கு தேவைப்படாது. அது இல்லாமலே நம்மால் வாழ முடியும். (பொதுவாக இது இல்லாமல் வாழ்வில் வாழ முடியாது என்று ஏதும் இல்லை). மேலும் அச்செயல் நமக்கு கட்டுப்பாட்டில் இருக்கும். முதலில் கடினமாக தான் இருக்கும்.  ஆனால் ஒன்றை உதறியப் பிறகு இன்னொன்று எளிது என்று நமக்கே தோன்றும். முதல் தடவை வேண்டாம் என்று சொல்வது கடினம், இரண்டாம் தடவை கடினம். இப்படி ஒரு 10-15 நாட்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதன் பிறகு வேண்டாம் என்று சொல்வது எளிதாக மாறுவதை நாம் உணர முடியும். பிறகு அது இயல்பாகிவிடும். அதனால் பலர் ஒரு மண்டலம் (42 நாட்கள்) ஒரு பழக்கத்தை கடைப்பிடிக்க சொல்வர். ஏனெனில் நமது மூலையிலும் அந்த மாற்றம் நிகழ வேண்டும்.

ஆனால் ஒன்றின் மேல் பற்றுக்கொண்டால் அது மேல் கொண்ட மயக்கத்தினால் அது நம்மிடம் மறுபடியும் மறுபடியும் வரும். அதுவே பற்றின் வலிமையும் தன்மையும் ஆகும். அதுமட்டும் இன்றி அந்த செயல்/பொருள்/பழக்கத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருப்போம்.

ஆதலால் வேண்டாம் என்று ஒரு பொருளை/செயலை/பழக்கத்தை விட்டுவிட்டு அதனை நோன்பாக கடைப்பிடித்தால் நமக்கு அந்த இன்மை  இயல்பாக மாறிவிடும். இயல்பு என்றால் ஒழுக்கம் என்ற அர்த்தமும் அடங்கும். அந்த நற்குணம் நமக்கு இன்பத்தை தரும்.

துறவு நிகழவேண்டிய ஒன்று. கனி பழுப்பது போல. நிகழாது ஏற்கப்படும் துறவு ஒரு வேடம். அது அவ்வேடதாரியை அற்பனாகவோ கோமாளியாகவோ அயோக்கியனாகவோ ஆக்கிவிடுகிறது என்பதை நினைவில் கொள்க.

எல்லோரும் அறிந்த குட்டிக்கதையொன்றை இங்கே நினவுகூறுவது நல்லது, துறந்த ஒருவருக்கு ஒருவர் தங்க இடம் கொடுத்தார். அவ்விடத்தில் எலித்தொல்லைத் தாங்கமுடியாமல் போக, அதற்காகப் பூனை வளர்த்தாராம் துறவி. அப்பூனையின் பால் தேவைக்காக, ஒரு மாட்டையும், அதை பராமரிக்க ஒரு கோனாரையும், அவன் காரணமாக, அவனுடைய குடும்பமும் குழந்தைகளும் வந்து சேர, இவ்வாறு தனித்திருந்த துறவிக்கு, ஒன்றன் பின் ஒன்றாக தேவைகளும், உறவுகளும் ஏற்பட்டதாகக் கதை. அதனுடைய சுருக்கமே இக்குறள்.

மேலும்: அஷோக் உரை

விதுரர் “ஆம், நான் துறக்க விரும்புவது இதைத்தான்” என்றார். இளைய யாதவர் “வெறுத்தலும் விரும்புதலும் இல்லாதவன் எங்கிருந்தாலும் துறவியே. அகம் அசையா நிலையே யோகம். உலகியலையும் யோகத்தையும் வெவ்வேறெனக் கருதுபவர்கள் அறியாதவர்களே. உலகியலில் யோகத்திலமைபவன் இரண்டின் பயனையும் அடைகிறான். செயல்களில் ஒட்டாதவன் செயல்களின் பயனால் சிறப்புறுகிறான். மெய்யறிந்தவன் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தவன்” என்றார்.

எழுத்தாளர் கமலதேவியின் ‘நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று’ சிறுகதை’யில் இவ்வரி வருகிறது. இதைப்படித்த பின்பு இக்குறளுக்கு எனக்கு ஞாபகம் வருகிறது. 
"ஒன்றை உதறியப் பிறகு இன்னொன்று எளிது போல."

பரிமேலழகர் உரை
ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம், உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குவதற்கு ஏதுவாம். (இழிவுசிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப்பெயர்த்தலான்' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப்பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாகவிட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்குஇடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது'என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்: பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்

மு.வரதராசனார் உரை
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Normally, if one gives up something in life, it is initially difficult and gives pain. However, if one is determined and says NO to it (i.e. I don't want this and gives up something), over next few days, the absence of it becomes natural to him/her. One realizes that he/she is in control not the one to which he/she said NO. Discipline becomes a nature to him. We know that discipline yields only good results and helps us to attain moksha/our goals. 

However, if one is a slave to his/her desires, anger, distractions(kama, krodha, moga), then those things comes to us repeatedly. That's power of desires/anger/distractions. Those control us.

Questions that I ask to the kid
What happens when you persistently say NO to one thing? (Follow up: What do you realize about the power of the thing to which you said NO)

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை

குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.

வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

ஐந்தன் - ஐந்து
புலத்தை - புலன்கள் - ஐம்புலன் நுகர்ச்சி யாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவை; பொறி; கருமேந்திரியம்; அறிவுடைமை; அறிவுக்கூர்மை; வெளிப்படக்காண்டல்; உறுப்பு; வயல்; நூல்வனப்புள்ஒன்று.

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.


வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

வேண்டிய - vēṇṭiya   adj. id. 1. Indispensable; இன்றியமையாத. 2. Required; தேவையான. 3. Sufficient; போதுமான. 4. Many;மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ(தாயு. மண்டலத். 10)

எல்லாம் - முழுதும்

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு.

முழுப்பொருள்
அடல் என்றால் வலிமை, வெற்றி என்ற பொருளிலே இங்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் ஒருவருக்கு வலிமை வேண்டும் என்றால் அவர் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும், நாம் ஆசைப்படுகின்ற எல்லாவற்றையும் ஒருசேர விட்டொழிய வேண்டும். அவ்வாறு செய்தால் அது நமக்கு வலிமையே. முன்பு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் சொன்னதுப்போல வேண்டாம் என்று விடுவதனால் நமக்கு இன்பமே. அதுப்போலவே இக்குறளில் சொல்லப்படுவது என்னவென்றால் விட்டொழிவதனால் வலிமை நமக்கு என்கிறார் திருவள்ளுவர். வலிமை வேண்டும் என்றால் வலிமைக்கு தடைகற்களாய் இருக்கின்ற அனைத்தையும் (ஐம்புலன்கள், ஆசைகள்) ஒருசேர விட்டொழிய வேண்டும். 

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் கருவி என்றால் அது நமது மனசாகும். உதாரணமாக, ஒருவருக்கு கண்ணைத் திறந்துக்கொண்டே தூங்கும் பொழுது  (அது உண்மையில் ஒரு நோயும் குட) அவர் எதையும் பார்ப்பது இல்லை. ஏனெனில் அவர் மனசு தான் பார்க்கிறது (அறிவியலாக பார்த்தால் ஒருவர் தூங்கும் பொழுது கண்ணுக்கும் மூலைக்கும் உள்ள ஒரு நரம்பு செயலில் இருக்காது). ஆதலால் வலிமை வேண்டும் என்றால் ஐம்புலன் நுகர்ச்சி யாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றை அடக்க வேண்டும். அதனால் வரும் ஆசைகள் அனைத்தையும் விட்டொழிய வேண்டும். 

பரிமேலழகர் உரை “வீடு எய்துவாருக்கு”என்கிறது. மறுப்பதற்கு இல்லையென்றாலும், அவர் கீழ்காணும் நாலடியாரின் பாடலையொட்டி பொருள் செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. அப்பாடலானது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும். (நாலடி 59)

“கசட்டுறு வினைத்தொழிற் கள்வ ராயுழல்
அசட்டர்கள் ஐவரை அறுவ ராக்கிய
வசிட்டன்” (கம்ப.திருவவதார.77)

“ஐந்தொ டாகிய முப்பகை மருங்கற அகற்றி
உய்ந்து போயினர்” (கம்ப.மந்திர 64_

“மிடலுறு புலன்கள் வென்ற மெய்த்தவர்”
“அடக்கிஐம் புலன்கள் வென்ற தவப்பயன்’ (கம்ப.கடல்தாவு.11,29)

“வீடுமின் முற்றவும்” (திருவாய் 1.2:1)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

வேண்டின்உண் டாகத் துறக்க

குறள் 342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வேண்டின் - இன்பங்களை வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
உண்டாகத் - உருவாக ?
துறக்க - துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம்.
துறந்தபின் - துறந்த பிறகு
ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் வந்துறும்; இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது;
இயற்பால - முறையான இன்பங்கள்
பல - பல உள்ளன

முழுப்பொருள்
மெய்யான இன்பம் தனை ஒருவர் விரும்புவார் என்றால் அவ்வின்பம் உண்டாக எல்லா போலியான பொருள்களையும் ஆசைகளையும் காமகுரோதமோகங்களை  துறக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அப்படி ஒருவர் எல்லாவற்றையும் துறந்தால் அவருக்கு மெய்யான பல இன்பங்கள் தானாய் இயற்கையாக உண்டாகும். இங்கே உண்டாகும் என்னும் சொல்லை ஏன் பயன்படுத்தப்பட்டது என்றால், இத்தகைய பலன்கள் ஒரு நாள் துறந்து மறுநாள் கிட்டாது. இவை துறவறம் போல் பல காலம் கடைப்பிடிப்பாயின் பல நிலையான இன்பங்கள் இயற்கையாக பயக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை


பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்.” 

இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.

எழுத்தாளர் போகன் சங்கர் தனது முகலில் தன்னுடைய தியான அனுபவத்தைப் பற்றி இப்படி ஒரு பதிவு இட்டார்

நான் எனது தியான அனுபவம் குறித்து இது பற்றியெல்லாம் நான் கேட்கும் குமாரன் ஆசானிடம் கேட்டேன்.எனக்கு அது ரமணரின் மரண அனுபவத்துக்கு ஒப்பானதாகத் தோன்றியது.அவர் என்னை ஒரு முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளச் சொன்னார்.எனக்கு அவர் என்னை அவமானப்படுத்துவதாகத் தோன்றியது.அவர் 'ரமணர் வந்து கேட்டிருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பேன்"என்றார்.என் உடலில் பிரச்சினை ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் அது ஒரு epiphany ஆக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.ஒரு அகதரிசனம்.

ஆனால் அந்த தரிசனத்தைக் கண்டது எது?அடைந்தது எது?என்று கேட்டேன்.
உன் மூளைதான் என்றார்.

"உன் மொபைல் போனில் நிறைய ஆப்கள் உள்ளன.போனின் மெமரி குறைவாக இருந்தால் அவை சரியாகச் செயல்படாது.தேவையற்ற செயலிகள்,அவற்றின் கடந்த கால சுவடுகள்(cache memory) இவற்றை அழித்தால் அவை செயல்படும்.தியானத்தில் இதுவே நிகழ்கிறது.நிகழ்ந்திருக்கிறது.Life is nothing but memory and data.எந்த ஒரு genetic scientistஐயும் கேட்டால் சத்தியம் செய்து சொல்வான்.ஆகவே be careful with your memory.Know your data capacity and  limit and act accordingly.
Delete your memory. Delete yourself."

பரிமேலழகர் உரை
துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல, வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க. (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல. இஃது இம்மைப் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

சாலமன் பாப்பையா உரை
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 


ஆனால் ஏன் நீங்கள் துறந்துசெல்லமுடியாது என்கிறேன்? பிதாமகரே, வாழ்தல் இயல்பானது. அதற்கு எந்தத் தூண்டுதலும் தேவையில்லை. உயிர்களுக்குள் வாழ்வதற்குரிய ஆணையை பிரம்மன் பொறித்திருக்கிறான். துறத்தல் மானுடர் தேர்வது. அதற்கு அவர்களுக்குள் இருந்து ஆணை எழவேண்டும். அதற்குரிய பயன் என்னவென்று உள்ளம் தெள்ளிதின் அறியவேண்டும்.


“நான் துறப்பதனால் பயன்நிகழாதென்று எண்ணுகிறீரா?” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “ஏனென்றால் இங்கு நிறைந்து அங்கு செல்பவர் அல்ல நீங்கள். இங்கு நிகழ்ந்து முடிந்தவரும் அல்ல.” பீஷ்மர் சீற்றத்துடன் “இல்லை, இதை நானே அறிவேன். நான் காடுகளில் ஒருகணம்கூட அஸ்தினபுரியையோ என் குடிகளையோ எண்ணாமல் பல்லாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், அங்கெல்லாம் உங்கள் உள்ளத்திற்குகந்த அஸ்தினபுரி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

பீஷ்மர் “இது அனைத்துமறிந்ததுபோல் பேசும் வீண்மொழி. அஸ்தினபுரியில் நான் மிகவிரும்பியது என் படைக்கலச்சாலையை. காட்டில் அதற்கிணையாக எதை உருவாக்கினேன்?” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா?” என்றார். பீஷ்மர் சிலகணங்கள் இமைக்காமல் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டார். இளைய யாதவர் “நீங்கள் துறந்து செல்ல இயலும், பிதாமகரே. ஆனால் தொடங்கிய புள்ளிக்கே மீளச்சுழன்று வந்துகொண்டிருப்பீர்கள். பெரும்பயனின்மையே அது” என்றார்.

English Meaning - As I taught a kid - Rajesh
If one wants to attain moksha or attain a goal, then one has to give up or eliminate the desires, anger, lust/distractions (Kama, Krodha, Moga). If one gives up untrue things or distractions and does his penance one automatically yields true things i.e. true happiness.

Questions that I ask to the kid
If one wants to attain a goal/moksha what should one do or give up? How will you earn the goal?

யாதனின் யாதனின் நீங்கியான்

குறள் 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
யாது - yātu   interrog. pron. யா². [T.ēdi, K. yāvudu.] What, which; எது. அருளல்லதியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254).; yātu   (interrog. pronoun) what, which?, எது?; 2. palm-tree-sap fermented, கள்; 3. memory, யாதி.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்; eṉiṉ   conj. if (it is) said so; 2. in consideration of.

நீங்கி - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

யான் - தன்மையொருமைப்பெயர்

நோதல் - நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை.

அதன் - It's   It's   It's  

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

இலன் - இல்லை
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

முழுப்பொருள்
எழுத்தாளர் ஜெயமோகனின் உரை (நேரடியாக சுட்டியைத் தட்டி வாசிக்கலாம்)
எழுத்தாளர் ஜெயமோகனின் வாழ்க்கையில் இருந்து பெற்ற விளக்கத்தை விட பெரியதாய் ஒரு விளக்கம் நான் கண்டடைய வேண்டியதில்லை. ஜெயமோகனின் விளக்கம் June-16-2015 அன்று சேர்க்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம ்வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். ”என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் ”சரி பரவாயில்லை. ஒரு வைப்பு அட்டை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா வங்கிகளிலும் கொடுப்பார்கள்”.நான் ”அதற்கு வங்கியில் பணம் போடவேண்டுமே..”என்றேன். அவர் சற்றுநேரம் வியந்து மாய்ந்துகொண்டிருந்தார். பொதுவாக கணிப்பொறி துறையில் இருப்பவர்களிடம் பிறர் எப்படி உயிர்வாழ்கிறார்கள் என்பதை சொல்லிப் புரியவைப்பத கஷ்டம்.

நான் கனடா போக விசாவுக்காக டெல்லிக்கு நேர்காணலுக்குச் சென்றபோது என் வருட வருமான அறிக்கை மற்றும் மாதச்சம்பள அறிக்கையை கூர்ந்து நோக்கிய செந்தலை அம்மையார் நம்பிக்கையில்லாமல், ”இந்த வருமானத்தில் எப்படி உயிர்வாழ முடியும்?” என்றார். ”முடியும் என்பதற்கு நான் வாழ்வதே ஆதாரமல்லவா?” என்றேன். சிரித்தாலும் விசா தர மறுப்பு எழுதிவிட்டார். பிறகு மத்திய அரசு பிரசுரத் துறை உதவி இயக்குநராக இருந்த எம்.கெ.சந்தானம் அவர்கள் மூலம் நான் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பதை விரிவாக நிரூபித்து விசா பெற்றேன். எனக்கே அந்த நிரூபணம் உற்சாகமாக இருந்தது.

என் பணியிடத்தை பார்த்த வினோத் ”அருமையான அறை. சிக்கலே இல்லாத நிம்மதியான வேலை… உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது…” என்றார். தன்னுடைய வேலையின் ஒவ்வொரு கணமும் எப்படி யானைகளால் இருபக்கமும் அழுத்தப்படுகிறது என்பதை விவரித்தார். கேட்கவே பீதியாக இருந்தது.

என் வேலை நான் விரும்பி தேர்வுசெய்துகொண்ட ஒன்று. இந்தவேலை இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு எழுதியிருக்க முடியாது. இருபத்துமூன்று வருடம் முன்பு வேலை கிடைத்து தொலைபேசி உதவியாளர் பயிற்சிக்கு சென்றபோது பயிற்சியாளர் வேலையை விவரித்தார். அவர் தொலைபேசி உதவியாளராக இருந்து பதினாறு வருடம் வேலைசெய்து மூத்து, மேற்பார்வையாளராக ஆகி, பயிற்சியாளராக பணியாற்றுபவர். அவர் சொன்னார், ”இந்த வேலை மிகவும் எளிது. ஒரு சிம்பன்ஸிக்கு இதே பயிற்சியை அளித்தால் அதுவும் இதேவேலையை நன்றாகச் செய்யும்” வகுப்பிலிருந்த தாமஸ் செறியான் எழுந்து கேட்டான், ”பதினாறு வருட அனுபவமானால் அது பயிற்சியாளராகவும் ஆகும் இல்லையா சார்?”

இருபத்து மூன்றுவருடங்களாக ஒரே வேலை. மீண்டும் மீண்டும். மூளை மற்றும் மனத்தின் தேவை இல்லாமலேயே புயல்போலச் செய்து முடித்துவிடலாம். அன்றாடம் தேடிவரும் கிராமவாசிகளில் நாலைந்துபேராவது ஆர்வமூட்டுபவர்களாக இருப்பார்கள். எழுந்துபோகும்போது எந்தவிதமான சுமையும் இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் பொதுவாக கண்ணுக்குத்தெரியாத ஊழியனாகவே இருப்பேன். இதை பலரும் கவனித்திருக்கலாம், அலுவலகங்களில் சிலர் வருடக்கணக்காக வேலைக்கு வருவது அவ்வப்போதுதான் நமக்குப் புலப்படும், மற்றபடி கவனத்திலேயே விழ மாட்டார்கள். அவர்கள் பொதுவாக மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். என்னை என் அலுவலக வாசலில் வந்து விசாரித்தால் ஊழியர்களில் பாதிப்பேர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். ‘மெமோ’வுக்குப் பதில் எழுதுவது, விண்ணப்பங்கள் நிரப்புவது, தொழிற்சங்க கூட்டம் தவிர பிற சமயங்களில் என்னை எவருக்கும் நினைவிருப்பதில்லை.

மொத்தத்தில் ‘குறையொன்றும் இல்லை’. எனக்கு பெரிய அளவுக்குப் பணம் எப்போதும் தேவை இருந்ததே இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு பணமுடையே இருந்ததில்லை என்று சொன்னால் என் நண்பர்கள் நம்புவார்கள். நாடோடியாக இருந்த நாட்களிலேயே ஏதாவது எங்காவது செய்தால் கிடைக்கும் பணமே போதுமானதாக இருக்கும். அக்காலத்தில் அச்சகங்களில் பிழை திருத்தும் பணி எளிதில் கிடைக்கும்.

இந்த வேலையில் இருந்து மேலே செல்வதில்லை என்ற முடிவை நான் இருபதுவருடம் முன்பே எடுத்துக் கொண்டேன். அருண்மொழியை திருமணம் செய்யும்போது அதை நிபந்தனை போலச் சொன்னென். என் பொருளாதார நிலையை இதற்குமேல் தூக்கிக் கொள்ள எதையுமே செய்ய மாட்டேன், இதுவே எனக்கு அதிகம் என. ஒத்துக் கொண்டது பெரிய விஷயமல்ல, இன்றுவரை அதைபற்றி மாறுக்கருத்து இல்லாமலும் இருக்கிறாள் என்பதே பெரிய விஷயம்.

உடைகள், உணவு, வசதிகள் எதிலும் ‘ போதும்,வேண்டாம்’ என்று சொல்லும் மனநிலையையே எப்போதும் கொண்டிருக்கிறேன். லௌகீக வாழ்வில் நான் பெரிதாக விரும்பி ஆசைப்படும் எதுவுமே இல்லை என்பதே உண்மை. நானே இதை அவ்வப்போது உண்மைதானா என்று கேட்டுக் கொள்வதுண்டு. அன்றைய செலவுக்கு அருண்மொழியிடம் வாங்கும் சிறு தொகை எப்போதுமே மிச்சமாகும். குடி, புகை உட்பட எல்லாவற்றுக்குமே ‘வேண்டாம்’ தான் — முழுமையாக.

அந்த மனநிலைக்கு வந்த பின் அதை ஒரு கோட்பாடாக ஆக்கிக்கொள்ள ஒரு தருணம் அமைந்தது. 1988ல் மலையாள நாளிதழ் ஒன்று தமிழிலும் கால்பதிக்க விரும்பியது. அதன் ஆசிரியராக என்னை பணியாற்ற முடியுமா என்று கேட்டார்கள். அன்று நான் தொலைபேசித்துறையின் தற்காலிக அன்றாடக்கூலி ஊழியன். நான் வாங்கியதை விட பன்னிரண்டு மடங்கு அதிக ஊதியம் பரிந்துரைக்கப்பட்டது. பிற வசதிகள். கௌரவங்கள், தொடர்புகள்.

நான் ஆசைப்பட்டேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் எழுத்தாளரிடம் ஆலோசனை கேட்டேன். ”இதழாளராக ஆவது உலகியல் ரீதியாக மிக நல்ல விஷயம். ஆனால் எழுத்தாளனாக அது உன் இறுதிமுடிவு. இந்தியாவில் நல்ல எழுத்தாளனாக வந்த இதழாளன் எவரும் இல்லை. நாளெல்லாம் மொழியை இயந்திரத்தனமாகக் கையாளும் ஒருவன் தனக்கென மொழியை உருவாக்க முடியாது. இந்திய இதழாளன் சிந்தனைச் சுதந்திரம் இல்லாம, முதலாளி இச்சைக்கு ஏற்ப நாளில் பெரும்பகுதியை வெறிபிடித்தது போல உழைத்துச் செலவிடுபவனாகவே இருக்கிறான். அங்கே போய் அழிந்த பலரை நான் அறிவேன்” என்றார்.

என்னால் ஒருவாரம் முடிவெடுக்கவே முடியவில்லை. மனதின் மாயம், நான் அந்த ஆசிரியரை வெறுக்க ஆரம்பித்தேன். அதற்கான நியாயங்களை சிந்தித்து சிந்தித்து உருவாக்கினேன். அவ்வெறுப்பு மூலம் அவரது ஆலோசனையை நிராகரிக்கும் முயற்சிதான் அது. ஆனாலும் ஒரு தயக்கம். அப்போது தற்செயலாக குறளைப் புரட்டிக் கோண்டிருந்தேன். ஒரு குறள் கண்ணில் பட்டு மனதில் நின்றது.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

அப்போது அதன் முழு பொருளும் எனக்குப் புரியவில்லை. ஆனால் அது ஒரு விடையாக இருந்தது. வேண்டாம் என்ற முடிவை எடுப்பதே ஆகபெரிய சுதந்திரம் என்று தோன்றியது. துணிந்து வேண்டாம் என்றேன். அதற்காக இப்போது எண்ண எண்ண மகிழ்ச்சியே உருவாகிறது. நான் வேண்டாம் என்று சொன்ன அனைத்துமே பின்னர் எனக்கு விடுதலையையும் நிறைவையும்தான் அளித்துள்ளன.

அந்தக் குறளை மீண்டும் மீண்டும் நான் மந்திரம் போல சொல்லிக்கொள்வேன். வாழ்வின் பல தருணங்களில். காலப்போக்கில் நோதல் என்ற சொல் என் நினைவிலிருந்து உதிர்ந்து என்வரையில் ‘யாதெனின் யாதெனின் நீங்கியான் அதனின் அதனின் இலன்’ என்ற வரியாக நீடிக்கிறது.

‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவு துயரம் இல்லாதவன்’ என்பது இக்குறளின் பொருள். பரிமேலழகர் ஒரு மேலதிகப் பொருள் அளிக்கிறார். அனைத்தையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுதலே விடுதலை அளிக்கும், ஆனால் ஒவ்வொன்றாக விடுதலும் அந்தந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே என்றே வள்ளுவர் சொல்கிறார் என்று.

பௌத்தமும் சமணமும் கண்டடைந்த ஞானத்தின் ஒரு விளக்கம்தான் இவ்வரி. ‘திருஷ்ணை’ என்று பௌத்தம் சொல்லும் வாழ்வாசையின் எந்த ஒரு கண்ணியை விட்டாலும் அந்த அளவுக்கு ஒருவன் விடுதலை அடைகிறான். அனைத்தையும் விடுதல் [ உபேக்ஷை] முழுமையான விடுதலையை அளிக்கிறது. உலகியலில் மாட்டியுள்ள மனம் உண்மையை அறிய முடியாது. தன் அச்சங்கள், ஆசைகள், தேவைகளுக்கு ஏற்பவே அது அனைத்தையும் காணும். அது நிபந்தனைகள் கொண்ட, எல்லைக்குட்பட்ட ஞானமேயாகும். விடுதலை கொண்ட மனமே முழுமையான உண்மையை அறிய முடியும். பின்னர் இந்தக் கோட்பாடு இந்து மெய்யியலிலும் வலுவாக ஊடுருவியது.

இந்த தத்துவார்த்தமான, முழுமையான பொருள்தளங்களுக்குள் செல்லாமலேயே நான் என் வாழ்க்கை சார்ந்து இதைப் புரிந்துகொண்டேன். இங்கே குறள் என்ற வடிவத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குறள்பாடல்கள் என்று சொல்வதை விட குறள்சூத்திரங்கள் என்று சொல்வதே முறை. பண்டைய நூல்களில் மூலநூல் தகுதி கொண்ட பேரிலக்கியங்கள் ரத்தினச்சுருக்கமாக வகுத்துக் கூறும் தன்மை கொண்டுள்ளன. குறள், கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், திருமந்திரம் போன்றவை. அவை வாசித்து பொருள் அறிய வேண்டியவை அல்ல. மனதில் பதியவைத்து மீண்டும் மீண்டும் ஓயாமல் நெஞ்சுள் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியவை. அதாவது அவை ஒருவகை தியான மந்திரங்கள்.

அவ்வாறு நெஞ்சுள் ஓட்டிக் கொண்டிருக்கும்போது அவை நம் வாழ்க்கையின் தருணங்களுடன் பொருந்தி நமக்குரிய பொருளை அடைகின்றன. குறளை பலரும் தங்களுக்கான பொருளுடன் சொல்வதை நாம் அவ்வப்போது காண்கிறோம். குறள்வரிகளில் உள்ளது அழியா விவேகம் ஒன்று. அதன் அனுபவப்பொருள் அதன் வாசகன் கண்டடைய வேண்டியதாகும். அப்படிக் கண்டடையும்போதே குறளை நாம் அறிகிறோம் என்று பொருள். அப்போது மட்டுமே குறள் நமக்கு உதவுகிறது.

குறளின் இந்த வரிகளின் அமைப்பே எனக்கு ஒரு மனச்சித்திரத்தை அளிக்கிறது. ஒரு பெரிய அங்காடியில் நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்துச் செல்கிறோம். ஒவ்வொன்றைப் பார்த்ததும் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்து முன்செல்கிறோம். அந்த அளவுக்கு நம் கைச்சுமை குறைகிறது. அந்த அளவுக்கு நாம் விடுதலையாக ஆகிறோம். ‘யாதெனின் யாதெனின்–அதனின் அதனின்’ என்ற வேகமான அடுக்கில் அந்த முன்செல்லும் பயணத்தின் சொற்சித்திரம் உள்ளது.

நாம் வேண்டும் என்று கொள்ளும் ஒவ்வொன்றும் அந்த அளவுக்குநம் சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த விவேகம் துறவிகளுக்கு மட்டும் உரியது அல்ல. அன்றாட குடும்ப, உலகியல் வாழ்க்கையிலேயே இதன் பொருள் அளப்பரியது என்பதை நான் மீண்டும் மீண்டும் உணர்ந்திருக்கிறேன். சுதந்திரம் என்ற பணத்தைக் கொடுத்தே எதையும் வாங்கமுடியும் இந்த அங்காடியில்.

ஒருவனுடைய சுதந்திரமே அவனுடைய இன்பத்தின் அடிப்படையாகும். அதுவே அளவுகோல். இந்த வீட்டில் எந்த அளவுக்கு குறைவான பொருள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் நடமாட ஓடிவிளையாட இடம் கிடைக்கிறது.

உலகியல் வழ்க்கையில் முற்றாக மறுப்பது சாத்தியமே அல்ல என்பதை அறிவேன். அடையும் ஆசைவும் அதற்கான விருப்புறுதியுமே வெற்றிகளை உருவாக்குகின்றன. வெற்றிகளே ஆளுமைநிறைவை அளிக்கின்றன. வேண்டும் என்று உள்ளுணர்வு வலுவாகச் சொல்வதை வேண்டுமென்பதே சிறப்பு. எது நம் ஆற்றலின் ஆகச்சிறந்த வெளிப்பாடோ அது நமக்கு வேண்டும்தான். நமது கடமைகள் நமக்கு வேண்டும்தான். குடும்ப உறுப்பினராக, சமூக உறுப்பினராக நமது பொறுப்புகள் வேண்டும். ஏன் , நமது அடிப்படை இன்பங்கள் கூட நமக்கு வேண்டும்தான்.

ஆனாலும் நமக்கு வேண்டும் என்பனவற்றை நாம் அடைவதற்கே கூட வேண்டாமென்று சொல்லும் திடம் தேவையாக ஆகிறது. வேண்டும் வேண்டும் என்ற விசை நம்மை இயக்கும் என்றால் நாம் இழந்துகொண்டேதான் செல்கிறோம். வேண்டாம் என்று சொல்வதற்கான மனநிலையே சுதந்திரத்தின் அடிப்படை. அதுவே நம்மை நாமாக நிலைநாட்டும் வல்லமை.
[அதிகாரம் 35, துறவு , குறள் 341]
<ஜெயமோகனின் உரை முற்றிற்று>

பொருள்
யாதனின் யாதனின் -  எந்தப் பொருள்களின் மீது ஆசை (அவா) கொள்கிறோமோ, அப்பொருள்களில் இருந்து 
நீங்கியான் - (அப்பொருளின் மீது கொண்ட பற்றினை அறுத்து), பற்றற்று நீங்கி நிற்கிறானோ
நோதல் - பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்
அதனின் அதனின் - அப்பொருள்களினால் 
இலன் -  ஒருவனுக்கு இல்லை / வராது

முழுப்பொருள்
ஒருவர் தான் ஆசைக்கொள்ளும் பொருள்கள் மீது உள்ள பற்றினை அறுத்து துறந்து அப்பொருள்களிடம் இருந்து விலகி நின்றால் அப்பொருள்களினால் அவனுக்கு துன்பம் ஏதும் என்றும் வராது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

எல்லாப் பொருள்களையும் துறத்தல் தலைமையான செயல். ஆயினும் ஒவ்வொன்றாக பற்றினை விடுதலும் அவற்றால் வரும் துன்பம் இல்லாமல் ஆகும் என்பது கருத்து. ஆதலால் எல்லாவற்றையும் ஒரே அடியாக விட கடினமாக இருப்பின் ஒவ்வொன்றாக விடுவதும் சிறந்தது என்கிறார்.

புறமாகிய செல்வத்தினையும் அகமாகிய யாக்கையின்கண்ணும் உள்ள பற்றினை (அவற்றினுடைய நிலையாமையை நோக்கி அறிந்து உணர்ந்து) துறக்கவேண்டும் என்ற விளக்கவே இவ்வதிகாரம் நிலையாமை அதிகாரத்திற்கு பிறகு வரும்.

இல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.

சமீபத்தில் Undo It (by How Simple Lifestyle Changes Can Reverse Most Chronic Diseases by Dean Ornish) என்ற ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதில் ஒரு வரி வரும். உனக்கு அமைதி என்பது கைவிடுவதால் வருவது, செய்வதால் வருவது அல்ல. Peace comes from undoing things not from doing things. இது நோய்களுக்கும் பொருந்தும். புதியதாக ஒன்றை செய்வதைக்காட்டிலும் ஆரோக்கியமற்ற பழக்கங்களை கைவிட்டாலே நோய்கள் குறையும் (அல்லது நோய்களின் தாக்கம் குறையும்) நமது ஆரோக்கியம் மேம்படும். 

எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

பி.கு: இக்குறளினை நான் முதன் முதலில் வாசித்தது ஒரு "தோல்" மருத்துவ வைத்தியரின் வளாகத்தில்.

பி.கு: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா.

மேலும்அஷோக்

துறவு பற்றி கவிஞர் தேவதேவன் இவ்வாறு கூறியுள்ளார் (தீராநதி பேட்டியில் (கவிதைப் பற்றி புத்தகம்)
கடினமான ஒரு சாதனை என்பது, நமக்கு விருப்பமானவற்றை எல்லாம் விட்டுவிலகி இருப்பதுதான். இதுதானே துறவு பற்றிய நமது பொதுப் புத்தியிலுள்ள படிமம்? ஆனால், துறவு பற்றிய சரியான சிந்தனை அல்ல அது.  விருப்பங்களில் அச்சமும், பதட்டமும், போட்டியும், பொறாமையும், சச்சரவுகளுமே சாத்தியம். மெய்யான துறவு என்பது, எவ்வித இழப்புணர்வும் இல்லாத ஒரு பெருநிலை. மெய்மையை நோக்கியவாறு பொய்மைகளைக் களைதல், ஒரு பேர் வேட்கையின் முன் சிறுசிறு விருப்பங்கள் உள்ஒடுங்கிப் போதல். இது மதவாதிகளின் அனுஷ்டானங்களில் உண்டாவதில்லை. இப்பெருநிலைக்குள் எல்லாவித உலக சுகங்களும் புலனின்பங்களும் இருக்க முடியும்.


“ஒருகணம்தான். உங்களுக்குள் வாழும் மதுவிழைவை பிறிதொரு தலையை எனக் கிள்ளி விலக்குக! விடுபடுக!” என்றாள் இந்திராணி. 

“மெய்மைக்கும் அப்பால் உள்ளது முழுமை. இளவரசே, நீங்கள் வெறும் வீரர் அல்ல. யோகி. யோகமுடிமேல் அமர்பவர்கள் மல்லிகார்ஜுனர்கள் மட்டுமே” என்றான்.

அர்ஜுனன் திரும்பி நோக்கி “ஆனால் அது அத்தனை எளிதல்ல என்று தோன்றுகிறது” என்றான். “எளிது! மிக மிக எளிது” என்றான் அவன். “அதற்கு முதலில் தேவையானது துறத்தல். ஒவ்வொரு விழைவையாக தொட்டு இதுவன்று இதுவன்று என்று அகன்று செல்லுங்கள். யாதெனின் யாதெனின் என்று நீங்கி அதனின் அதனில் இலனாகுங்கள். ஒவ்வொரு அம்பும் ஓர் எண்ணம். ஒவ்வொரு முறை வளைவதும் உங்கள் ஆணவம். ஒவ்வொரு முறை இழுபட்டு விம்முவதும் உங்கள் தனிமை. ஒவ்வொரு இலக்கும் நீங்கள் அடிவைத்து ஏறவேண்டிய ஒரு படி. ஒவ்வொரு எய்தலும் நீங்கள் உதறிச்செல்ல வேண்டிய ஓர் எடை”.

“இதை வென்றபின் நீங்கள் உங்களை வெல்லத்தொடங்கலாம். அதுவரை இவை அனைத்திலும் கட்டுண்டிருப்பீர்கள். மீட்பிலாதவராக.” 

தூயது சௌகந்திகத்தின் காலை. தூய்மையில் விளைவதே மெய்மை என்று அத்ரி முனிவர் அவர்களுக்கு கற்பித்தார். விலக்குவதன் வழியாக விளைவதே  தூய்மை. 

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
மனிதன் படும் துன்பத்திற்கு என்ன காரணம் ? இதற்கு விடை தேடித்தான் சித்தார்த்தன் அரண்மனை நீங்கினான். உலகின் புகழ்பெற்ற சிந்தனையார்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தே இயங்கினர். ஒவ்வொருவரும் அவரவர் கண்டடைந்த விடைகளைத் தெரிவித்தார்கள். 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் அறிவித்தார். ஆசையை விட்டொழித்தால் துன்பத்தில் இருந்து நீங்கிவிடலாம்தான்.

ஒழிக்கவே முடியாத ஆசைகளில் உயிராசையும் ஒன்று. உயிராசையை நீங்கினால் இறப்பை ஏற்கவேண்டும். இறப்பை ஏற்றுக்கொள் என்பது அறமாகாது. அதை வலியுறுத்தி எந்த மகானும் போதிக்க மாட்டார். அப்படியானால் உயிரோடிக்கும் வேட்கையை அனுமதிக்க வேண்டும். 

உயிரோடிருக்க உயிர்த் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். உயிர்த்தேவைகளாக பசி, தாகம், தூக்கம் ஆகியன இருக்கின்றன. தண்ணீர் பருக வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை தேடிய காலங்களில் தண்ணீர் அருகிவிடவில்லை. மழையும் நதிகளும் மிக்கிருந்தன.

உணவுக்கு என்ன செய்வது ? தானாய் விளைந்த கனிகளும் கிழங்குகளும் பயிர் செய்யப் பழகியிருந்த மனிதப் பக்குவமும் போதுமானதாயிருந்தன. இரவு தூக்கத்தில் கழிந்தது. இத்தகைய தேவைகள் மட்டுமே என்றால் அவற்றை நிறைவேற்றி உயிரோடிருத்தல் சாத்தியமே. 

துறவை ஏற்றவர்கள் இவ்வாறான வாழ்க்கைக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். அதற்கும் மேல் உடல் மற்றும் மன விருப்பங்களை நேர்செய்து கொள்ள விழைபவன் துறவை நாடாமல் இல்வாழ்க்கையினனாகத் தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டும்.

இல்வாழ்க்கை என்னும் வாழ்வறத்தில் நுழைந்தபின் அவன் மெல்ல மெல்ல துன்பங்களுக்கு இரையாகிறான். தன் மனைவி, மக்கள் என்று அறுக்க முடியாத பற்றுகள் உருவாகின்றன. அவர்களுக்கு நலம் செய்ய உழைக்கிறான். தன்னை ஒப்புக்கொடுக்கிறான். 

குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பாடுபடுஞ் சங்கிலியில் தம்மையும் ஒரு கண்ணியாகப் பிணைத்துகொள்கிறார்கள். காலம் பருவங்களால் பகுபட்டிருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் அறிவு வளர்கிறது. போதாத காலங்களுக்குப் போதுமான அளவு சேமிக்கத் தொடங்குகிறான். சேமிப்பின் வழி தன்வயமாகும் எல்லாம் உடைமைகளாகின்றன.

உடைமைகளை உருவாக்குவதில் ஓய்வொழிச்சல் இல்லாமல் ஓடுகிறான். தன் ஆற்றல் முழுவதையும் மிகை முயற்சிகளில் ஈடுபடுகிறான். எந்த ஒரு செயலுக்கும் அதற்கு நிகரான நேர் மற்றும் எதிர் விளைச்சல்கள் உண்டல்லவா? அவன் வினைகள் அவற்றுக்குரிய பலன்களைத் தருகின்றன. 

நேர்நிலைப் பலன்களில் மகிழ்கின்றவன் எதிர்நிலைப் பலன்களில் துவண்டுபோகிறான். துன்பத்திற்காளாகிறான். அவன் மானம், செல்வம், இல்லறம், இன்பம், போகம், மக்கட்பேறு, உடைமைகள், நன்றி, அழுக்காறு, வெகுளி என வெகுதொலைவு பயணம் செய்து இந்த இடத்திற்கு வந்துள்ளான். இப்போது துன்பப்படுகிறான்.

துன்பத்திலிருந்து நீங்குவதற்கு அவன் என்ன செய்ய வேண்டும் ? துன்பத்தை ஏற்படுத்துவது எதுவோ அதிலிருந்து அவன் நீங்கிக்கொள்ள வேண்டும். அவனுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியவை என்னென்ன ? அவனுடைய கருதுகோள்கள் துன்பத்தை ஏற்படுத்தின. அவனுடைய பற்றுகள் துன்பத்தை ஏற்படுத்தின. நம்பிக்கைகள், ஆசைகள், தேவைகள், முனைப்புகள், முயற்சிகள் என எல்லாமே துன்பத்தை ஏற்படுத்தின. 

மிகையூண் உடல் நோய்களை உருவாக்கின. மிகை போகம் புலன்களைத் தேய்த்தன. மிகை உடைமைகளால் உறக்கமும் உறவுகளும் தொலைந்தன. குளிர்காலத்தில் நெருப்பருகில் நிற்பதைப்போல் நீங்கவுமில்லாமல் நெருங்கவுமில்லாமல் இதமாக வாழ்ந்திருக்க வேண்டும். அளவறிந்து வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவன் வேட்கையின் வழிச்சென்றான். எல்லாவற்றையும் கொள்ளை கொள்ளையாய்ச் சேர்த்தான். 

நல்விளைவுகளுக்கு நகைத்திருந்தவன் எதிராய் விளைந்த தீமைகளை விழுங்கிச் செரிக்க முடியாமல் கண்ணீர் விடுகின்றான். இறுதியில் ஞானம் வாய்க்கிறது. ‘எந்த ஒன்றினாலும் துன்பம் உண்டு’ என்னும் ஞானம். 

எந்த ஒன்றினால் துன்பம் வருமோ அதை நீங்கி விடவேண்டுமா ? அப்படியும் முடியாது. அந்த ஒன்று உனக்கு என்ன நலம் பயக்குமோ அதன் மீதான பற்றை மட்டுமேனும் விட்டு நீங்கு. ஒன்றைவிட்டு நீங்குவதோ முற்றாகத் துறப்பதோ உனக்கு போதிக்கப்படவில்லை. ஆனால், அந்த ஒன்றினால் உனக்குள் நிகழும் ஒன்றை விட்டு நீங்கி நிற்கப் பழகு என்று வள்ளுவர் சொல்கிறார். 

அது முடியும்தானே ? உறவுகளால் உனக்கு உவப்பு என்றால் அந்த உவப்பிலிருந்து நீங்கி வாழ்வதைப் பழகிக்கொள். ஏனென்றால், அது உன்னளவில் நிகழ்வது. உணவு வாய்க்கு ருசியைத் தருகிறது என்றால் அந்த உணவு இருக்கட்டும், அது தரும் ருசியிலிருந்து நீங்கிப் பழகிக்கொள். இப்போது எப்படித் துன்பம் வரும் ? வள்ளுவர் இதை எத்துணை அழகாக விவரிக்கிறார் என்று பார்ப்போம். 
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.

யாதனின் யாதனின் நீங்கியான் = எந்த ஒன்றினால் தனக்குக் கிட்டும் எந்த ஒன்றிலிருந்தும் தன்னை நீக்கிக் கொண்டவன், விடுவித்துக் கொண்டவன்
அதனின் அதனின் = அதனால் அவனுக்குக் கிட்டும் அவ்வொன்றினால்
நோதல் இலன் = துன்புறுதலே இல்லாதவன்.

எந்த ஒன்றினாலும் தனக்குக் கிடைக்கும் எந்த ஒன்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டவன், அதனால் அவனுக்குக் கிட்டும் அந்த ஒன்றினால் அடையும் துன்பம் இல்லாதவனாகிறான்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின்கண்ணும் உளதாம் பற்றினை, அவற்றது நிலையாமை நோக்கி, விடுதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். 

விளக்கம்
(அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீக்குதல் - துறத்தல். ஈண்டத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி, ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் எவ்வெப்பொருளினின்று நீங்கினானோ ; அதனின் அதனின் நோதல் இலன் - அவ்வப் பொருளால் துன்பமுறுத லில்லை.

அடுக்குத் தொடர்கள் பன்மை குறித்தன. நீங்குதல் மனத்தால் நீங்குதல், அதாவது பற்று விடுதல். பொருள்களால் வரும் இம்மைத் துன்பங்கள்.

"ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலு மாங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடின் துன்பம் கெடினதுன்பம் துன்பக்
குறைபதி மற்றைப் பொருள் (நாலடி. 280)

என்பதனாலுணர்க. மறுமைத் துன்பங்கள் ஈயாமையாலும் செல்வச் செருக்காற் செய்யும் தீவினைகளாலும் வருவன. எல்லாப் பொருள்களையும் ஒருங்கே துறக்க இயலாதார் அவற்றை ஒவ்வொன்றாகத் துறக்கலாமென்றும், அவற்றைத் துறந்ததினால் இம்மையிலும் நன்மை யுண்டென்றும் கூறியவாறு.


பொருள்: யாதனின் யாதனின் நீங்கியான் - (ஒருவன்) எதினின்று எதினின்று நீங்கினானோ, அதனின் அதனின் நோதல் இலன் -அதனால் அதனால் துன்புறுதல் இலன்.

அகலம்: ஒரு பொருளினின்று நீங்கலாவது, அப் பொருளின் பற்றினை விடுதல். தாமத்தர் பாடம் ‘அதனி னிலை’. அதனின் அதனின் என்பன வேற்றுமை மயக்கம், ஐந்தாம் வேற்றுமை யுருபு மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால்.

கருத்து: ஒரு பொருளின் மீதுள்ள பற்றை விட்டால், அப் பொருளால் உண்டாகும் துன்பம் இல்லை.

மணக்குடவர் உரை
எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.

சாலமன் பாப்பையா உரை
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

மு. வரதராசன் உரை
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

மேலும் (நன்றி: தினமணி)
கண்ணில் கண்ட பொருட்களில் எல்லாம்
ஆசை கொள்ளக் கூடாது
அல்லல் தொல்லை துன்பங்கள்
அனுபவிக்கக் கூடாது.
எந்த எந்தப் பொருளானாலும்
விலகி நீயும் இருந்திட்டால்
அந்தப் பொருளால் உனக்குத்தான்
துன்பம் என்றும் இல்லையே.
 ------ ஆசி. கண்ணம்பிரத்தினம்

மேலும் (நாரயண ஸ்வாமிநாதன்)
இந்தக் குறளைக் கூறும் பொழுது உதடுகள் ஒட்டாது. வாய் அசைகிறது, ஓசை வருகிறது ஆனால் உதடுகள் ஒட்டவில்லை. அது போல வாழ்கை நடத்து, காரியங்கள் செய், ஆனால் அவற்றில் பற்று வைத்து ஒட்டிக்கொள்ளாதே என்று அழகாக சொல்லாமல் சொன்னது தான் இதன் சிறப்பு.

இது ஒன்றும் கடினமானது அல்ல. ப, ம இவ்விரண்டு எழுத்து சம்பந்தப்பட்டவற்றை ஒதுக்கினால் உதடுகள் ஒட்டாது. அதை சரியான இடத்தில உபயோகப் படுத்தியது தான் வான்மறை வள்ளுவனின் சிறப்பு. 

Thirukkural - Management- Managing Stress - Attachment
Stress is a silent killer. It is a modern day epidemic. Everyone suffers from stress related or stress induced diseases.

Stress leads to psychological and physical sufferings. “Stress,” according to Lazarus (1966) “arises when individuals perceive that they cannot adequately cope with the demands being made on them or with threats to their well being.” 

Valluvar confirms that attachment to things, events and people is the cause for stress. According to him, we cling  on to things, people, and events so possessively that the practice of clinging creates enormous stress on and for us.

This thought is presented objectively in Kural 341. One of the best techniques to manage stress is to detach yourself from people, objects, and events. We will not suffer from diseases because of what we discard from our life. We get diseases because of what we hoard and cling on to constantly. Hoarding can be both psychological and physical.

As one by one we give up
We get freer and freer of pain 

Therefore, there is no disease when there is sacrifice or renunciation. Another special quality of this Kural is when you recite the Kural, your lips do not touch each other. There is no contact between the lips. It is a sure indication that there is no attachment. There are cases of leaders who attached themselves to their positions and lost many things in the process.

The core message of the Bhagavat Gina is non-attachment. Attachment to the fruits of your action leads to many frustrations and disappointments. The result of all these is stress. To lead a stress free life, learn to practice detached attachment in all the five areas -  health, career, finance, family and society — of your life.

ஆனால் ஏன் நீங்கள் துறந்துசெல்லமுடியாது என்கிறேன்? பிதாமகரே, வாழ்தல் இயல்பானது. அதற்கு எந்தத் தூண்டுதலும் தேவையில்லை. உயிர்களுக்குள் வாழ்வதற்குரிய ஆணையை பிரம்மன் பொறித்திருக்கிறான். துறத்தல் மானுடர் தேர்வது. அதற்கு அவர்களுக்குள் இருந்து ஆணை எழவேண்டும். அதற்குரிய பயன் என்னவென்று உள்ளம் தெள்ளிதின் அறியவேண்டும்.


“நான் துறப்பதனால் பயன்நிகழாதென்று எண்ணுகிறீரா?” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “ஏனென்றால் இங்கு நிறைந்து அங்கு செல்பவர் அல்ல நீங்கள். இங்கு நிகழ்ந்து முடிந்தவரும் அல்ல.” பீஷ்மர் சீற்றத்துடன் “இல்லை, இதை நானே அறிவேன். நான் காடுகளில் ஒருகணம்கூட அஸ்தினபுரியையோ என் குடிகளையோ எண்ணாமல் பல்லாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், அங்கெல்லாம் உங்கள் உள்ளத்திற்குகந்த அஸ்தினபுரி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

பீஷ்மர் “இது அனைத்துமறிந்ததுபோல் பேசும் வீண்மொழி. அஸ்தினபுரியில் நான் மிகவிரும்பியது என் படைக்கலச்சாலையை. காட்டில் அதற்கிணையாக எதை உருவாக்கினேன்?” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா?” என்றார். பீஷ்மர் சிலகணங்கள் இமைக்காமல் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டார். இளைய யாதவர் “நீங்கள் துறந்து செல்ல இயலும், பிதாமகரே. ஆனால் தொடங்கிய புள்ளிக்கே மீளச்சுழன்று வந்துகொண்டிருப்பீர்கள். பெரும்பயனின்மையே அது” என்றார்.



Why you struggle to say no 
Saying no to other people’s requests is not easy. In fact, there are quite a few reasons why you may have difficulty doing this. Let’s review some of them.

a) Lack of clarity 
One reason you may have a hard time saying no is because you lack a clear vision. You don’t know what you want or where you are heading and, as a result, it is easy to become distracted. Of course, you’re not always in a position to say no at work or in your personal life. However, remember this: as a rule of thumb, the clearer you are regarding what matters to you—such as your goals and values—the easier it will be for you to make the correct decisions and say no when necessary.

Successful people have to decline requests most of the time. And this is one of the reasons they are so successful: they have clear priorities, well-defined values, and a specific vision. 

The following story of Richard Branson, the billionaire founder of Virgin, illustrates this situation very well. A company that wanted to hire Richard Branson as a keynote speaker offered to pay $100,000 for an hour-long speech, but he declined. They raised their offer to $250,000, but again he declined. Then $500,000, but still no. Finally, they offered to pay whatever price he named. Despite this lucrative offer, they received the following message from his office:

“No amount of money would matter. Right now, Richard has three strategic priorities he is focused on, and he will only allow us to allocate his calendar to something that significantly contributes to the accomplishment of one of those three priorities and speaking for a fee is not one of them.” 

As you can see, Richard Branson knows exactly what he’s doing and where he’s going, and he will let nothing prevent him from concentrating on his top priorities. Now, unlike Richard Branson, you’re probably not receiving hundreds of requests every day, but how are you going to design the life you want and achieve the success you desire if you’re unable to say no? And what will happen as you become more and more successful in the future? If you can’t say no now, how will you say no in the future? 

b) Lack of assertiveness 
Another reason you may have a hard time declining requests is because you’re afraid of hurting other people’s feelings. Like most people, you probably want everybody to like you. While understandable, this type of behavior will rarely allow you to perform at your best or design the life you want. You may lie to yourself, pretending you’re acting selflessly, but it’s often not the case.

In fact, if anything, being a people pleaser is a selfish action, not a selfless one. When you seek to please people, you act out of fear of not being loved. Consequently, the focus is on yourself and what people may think of you, not on the other person. This is why “Mr. Nice Guy” often finishes last. Instead of being himself, he wears a mask, hoping to make a good impression. He hides his true personality for fear of being rejected. In the end, he often is rejected; ironically, not for who he really is, but for who he pretends to be. 

Even worse, in the long term, this type of behavior tends to create resentment toward people who abuse your kindness. Under this condition, instead of having real relationships with people, you will develop fake relationships based on resentment and fear of showing your true self. This lack of assertiveness and the tendency to please other people often result from insufficient self-worth. For instance, a lack of self-worth can prevent you: 
* Standing for your values and what you believe in,
* Accepting that some people will not like you, 
* Valuing your time (and yourself), 
* Setting expectations and clear boundaries, and 
* Deciding on a clear direction you want to follow.

c) Lack of understanding of what saying yes means 
Whenever you say yes to something, you will probably have to say no to something else. For instance, when you help someone do something of little importance, you lose the opportunity to work on something of greater import, something that may have a bigger impact on the world. In short, saying yes too often can rob you of the opportunity to do something more meaningful and impactful with your time. In this regard, it is easy to see why saying yes is selfish.

Contrary to what people think, saying yes is not the default answer, saying no is. Remember this: nobody is entitled to your time. When someone asks you to give them some of your time, they assume they know what’s best for you and how you should use your time. Or worse, they simply don’t care about your time, and they are only considering their own interests. Isn’t that selfish? 

The point is, whenever you offer your time, you give away a chunk of your life, and time is a hugely valuable commodity. Is it worth your time? Shouldn’t you spend your time doing something you judge more important?

Don’t get me wrong, though. I’m not saying you should be a jerk and never help other people. The truth is, we usually love helping others. The helper feels good about sharing his or her knowledge, while the person asking for help is happy to find some. I’m merely encouraging you to become more selective in the way you use your time. Help people whenever you can, but don’t feel obligated to do so every time.

How to say no 
Many people struggle to assert themselves or ask for what they want. As a result, instead of being proactive and going after their dreams, these people tend to react to what life throws at them. If this sounds like you, it’s now time to assert yourself and go after what you want.

a) Start small 
If you struggle to say no, I encourage you to start small. Start by saying no to small requests with minor consequences. Perhaps you can say no to attending a party you’ve been invited to. Perhaps you can say no to someone who asks you for a small favor. At first, it might feel uncomfortable but it’s a good sign you’re making progress. People are not going to die because you say no to them.
b) Stop over-justifying yourself 
Do you try to justify yourself whenever you choose to say no to a request? I see people doing this all the time. Here is the thing: you don’t need to justify yourself. Remember what we discussed previously; when people ask you something, your default answer should be no. Therefore, you don’t need to come up with false excuses nobody would ever buy into. Instead, try telling the truth: 

* I’m sorry, but parties are not my thing, so I’m going to skip it this time.
* I’m sorry, but right now I’m entirely focused on a very important project. 
* I’m sorry, but I made a promise to my kids, and I won’t disappoint them. 

You don’t need to over-apologize either. Time is one of your most precious assets, so why squander it? Why not value your time more and say no to requests that aren’t the best use of your time? At first, it might feel uncomfortable to say no without offering lame excuses, but I encourage you to try it out. If you find it difficult to assert yourself, this exercise will help you immensely.

c) Practice saying no 
If you struggle to say no, an effective way to work on your assertiveness is to use role play. Role-playing has been shown to be effective in many different fields, especially sales. Anything you practice saying by yourself—or better, with someone else—becomes easier to say in real life. 

To practice, envision a specific situation when you want to say no. Perhaps it is when one of your colleagues ask you for a favor. Or perhaps it is when a friend wants you to attend a party. Now, imagine what you would say in this specific situation. See yourself actually saying it. Practice saying it out loud. The simple fact of having rehearsed your answer in your mind will help you when the situation arises in reality. 

d) Practice offering alternatives 
Rather than saying no, you can also offer alternatives when necessary. I find this method effective when I don’t want to say no, can’t say no or simply want to modify the request so it works better for me. 

For instance, let’s say someone asks you to attend a party and you don’t want to go. You could say something like, “I don’t feel like going tonight, but we can have lunch together tomorrow, if you’re free.” Of course, that’s providing you actually do want to meet that person. This alternative may come handy especially if you’re an introvert. 

Removing tasks you do reluctantly 
To declutter your schedule and reduce stress, it is also essential for you to remove tasks you do reluctantly during the day. These are often the tasks that generate the most stress. If they are part of your job, you might not be able to remove all of them, but you can probably eliminate at least a few. As you do so, you’ll make your day easier and will have more time and energy to dedicate to things that truly matter to you.

English Meaning - As I taught a kid - Rajesh
The one who says in spirit that I don't want this, says NO to it and practices it by totally avoiding it will yields good results. By saying NO, (it might be difficult in short term), whereas in the long term it only brings good and we won't regret it. 

In penance, saying NO (to desires and distractions) is essential. Only by saying NO to many things one can lead a path focused (and free from distractions) and attain moksha. 

Most importantly, the Freedom to say NO is the real freedom. Or else, its means that we are addicted or enslaved to a thing/desire/person.

Also, in tapas, it is not just about saying NO, but also more about removing the LIEs (illusions that we have within us)

Questions that I ask to the kid
What is the benefit of saying NO ? What is the long term of benefit? Do we loose anything by saying NO? (may  be in short term, but in long term we would benefit)
Why we should have the freedom to say NO? (It shows we are truly independent. Our senses are not slave to that. The courage of saying NO is the real big freedom)

What is saying NO? (removing lies/illusions. பொய்களை களைதல்)

பற்றுக பற்றற்றான் பற்றினை

குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு.
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்றுதல் பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.

பற்றுக – (பற்றை அறுக்கவேண்டுமாயின் ) பற்றிக்கொள்க

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

பற்றற்றான் – வேண்டுதல் வேண்டாமை இலானை (நினைவு கொள்க வேண்டுதல் வேண்டாமை இலானடி) / பற்று அற்றவன் 

பற்றினை – அவன்மேல் மட்டும் பற்று கொள்க

அப்பற்றைப் – அவன்மேல் கொள்ளும் அப்பற்றையும் 

பற்றுக – பற்றிக்கொள்ளுக

விடுதல் நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

பற்று விடற்கு – பற்றென்னும் நிலையாமையை துறப்பதற்கு

பற்றை விடவேண்டுமென்றால் பற்றறவவன் மீதான பற்றை பற்றிக்கொள்ளுக” என்று வள்ளுவர் சொல்கிறார். இங்கே பற்றற்றான் என்ற சொல்லுக்கு இறைவன் என்றே பரிமேலழகர் போன்றோர் உரை கூறுகின்றனர். ஆனால் பற்றறுத்த ஞானாசிரியன் என்ற பொருளும் பொருந்துவதே. பற்றற்றவனை பற்றுதல் என்பது பற்றறுக்கும் வழியேதான் என்பதற்கு மேல் உங்கள் கேள்விக்கு ஓர் ஆணித்தரமான பதில் தேவையா என்ன?

ஆனால் ஆன்மீகப் பயணத்தின் இறுதிப்படிகளில் குரு நம்மை விட்டுவிடுவார். நடக்க ஆரம்பித்த குழந்தையை அம்மா விட்டுவிடுவதுபோல. அதன் பின் சீடன் அவனது மெய்ஞானத்தையும் மீட்பையும் அவனே கண்டடைய வேண்டியதுதான். அந்தப்பயணம் முற்றிலும் தனியானது. அங்கே குரு என்றல்ல இறைவனும்கூட இல்லை.

குறளின் பல பாடல்களுக்கு சமணமதத்தின் கோணத்தில் பொருள்கொண்டால் மிக எளிதாகப்புரியும். இன்று நாம் கொண்டிருக்கும் இறை என்னும் கோணத்தில் பொருள்கொள்வதன் சிக்கல் நீங்கள் கொண்டிருப்பது.

இந்து தெய்வங்களில் எதையும் பற்றற்றான் என்று சொல்லமுடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில்கூட அளவற்ற அருளாளன், பெருங்கருணையாளன் என்றே தெய்வம் குறிப்பிடப்படுகிறது.

சமணர்களுக்கு ‘தெய்வங்கள்’ இல்லை. அவர்களுக்கு அருகர்களே முதன்மை வழிபாட்டுருவங்கள். அவர்கள் பற்றறுத்தவர்கள். முற்றிலும் பற்றறுத்தமையால்தான் அவர்கள் தெய்வத்திருக்கள் ஆனார்கள்.

சமண மதத்தில் அன்றாட வழிபாட்டுக்கு, வேண்டுதல்களுக்கு தீர்த்தங்காரர்களின் காவல்தேவதைகளான யட்சிகளையும் தேவர்களையுமே வழிபடுவார்கள். தீர்த்தங்காரர்களிடம் எதையும் வேண்டிக்கொள்ளலாகாது. அவர்களை வழிபடுவது உலகத்தின் பற்றிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமே. அந்த வீடுபேற்றை மட்டுமே அவர்களிடம் கோரவேண்டும்.

உதாரணமாக, பார்ஸ்வநாதரிடம் நாம் வாழ்க்கைநலன்களை வேண்டக்கூடாது. வாழ்க்கைப் பற்றை அறுத்து மீள்வதற்கான ஞானம், வைராக்கியம், தவம் ஆகியவற்றையே கேட்கவேண்டும். அவருடைய யட்சியான பத்மாவதி அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள்.

பற்றறுத்த தீர்த்தங்காரர்களைப் பற்றிக்கொள்க, இவ்வுலகத்துப் பற்றுகளை விட்டுவிடுவதற்கான வழி அதுவே—நேரடியாக இக்குறளின் பொருள் இதுதான்.

ஒப்புமை
”உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னொக்கும்
பற்றினா னாகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குறு மாறே” (வளையாபதி)

“மணஞ்சேரி, பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே” (சம்பந்தர்.மணஞ்சேரி.10)

“திரு ஆப்ப னூரானைப் பற்றும் மனமுடை யார்வினை
பற்றறுப் பாரே” (சம்பந்தர்.ஆப்பனூர் 1)

“பலவும்பய னுள்ள பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
குலவும்பொழில் கூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே” (சம்பந்தர்.குரங்கணில் முட்டம்)

“காழி அமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே” (சம்பந்தர்.சீகாழி 4)

“பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடு வான் ஆடி அடைந்தனம் அல்லல்ஒன் றிலமே” (சம்பந்தர்.தேவூர் 5)

“கோழம்பம் பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே” (சம்பந்தர்.கோழம்பம் 8)

“பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்” (திருமந்.298)

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உலகப் பொருட்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப் பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலைக் கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு, பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்.

" வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றுஅதில் பதினை யாண்டு
பேதை பாலகன் அதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகர் உளானே ! "

இது ஒரு பக்திப் பாடலாக இருந்தபோதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு" என்ற குறளில் இறைநிலையுணர்வும், பொருட்கள் மீது பற்று விட்டு மனம் தூய்மை பெற வேண்டியதும் ஒன்றிணைந்து பேறாக உணர்த்தப்பட்டுள்ளன. 

இறைநிலையை அதன் பேரியக்கச் சிறப்புகளை அதன் வியத்தகு விளைவுகளை ஐயமின்றி ஒருவர் உணர்ந்து கொண்ட பின்னர்தான் உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் நீங்கும். பிறவிக் கடலையும் கடக்க முடியும். பொருள் பற்று உடையவர்கள் அடிக்கடி உலகப் பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றை நினைந்து நினைந்து மனதை அவற்றிலேயே ஈடுபடுத்திக் கொண்டுருப்பார்கள். ஒவ்வொரு நினைவும் அவர் கருமையத்தில் வினைப் பதிவாகி அது அடிக்கடி மூளை செல்கள்  மூலம் அவ்வப்போது எண்ணங்களாக மலர்ந்து கொண்டிருக்கும். இதனால் மனம் களங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். இக்களங்கமே இறைநிலையை உணர முடியாத தடையாக அமையும். இதனை அழுகணி சித்தர் ஒரு கவியின் மூலம் விளக்குவதை உணர்வோம். 

"காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நம்மை மறித்து நகை புரியப் பார்த்தாலும்
காட்டனை மேலேறி என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ"

காட்டான் என்றால் உருவமற்றவன் தன் இருப்பை உணரக் காட்டிக்க் கொள்ளாதவன் என்பதாகும். இத்தகிய காட்டான் எனும் உருவமற்ற நிலை பேரியக்க மண்டலம் முழுவதிலும் நிறைந்து இறைவன்(இறைவெளி) ஆகவும், ஒவ்வொரு சீவனிலும் அறிவாகவும் இருக்கிறது. எனவ்வே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும்.

காட்டன் எனும் அறிவானது பேரியக்க மண்டல தத்துவங்களில் பஞ்ச பூதங்களாக உள்ள நிலம், நீர், வெப்பம், காற்று, விண் என்ற ஐந்து நிலைகளையும் தாண்டி இவற்றிற்குப் பிறப்பிடமாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும்போது எனது வாழ்க்கையில் நான் பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் எண்ணங்களாக அடுத்தடுத்து தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கின்றதென்றால் எனது வினைப் பதிவுகளிலிருந்து எழும் எண்ணங்கள் என்னை நோக்கி நீ எங்களையெல்லாம் தாண்டிப் போய் கடை நிலையாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து கொள்ள முடியுமா என்று தடுத்து நிறுத்தி என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் உள்ளது. எப்படியாயினும் எனக்கு உறுதியிருக்கிறது. வினைப்பதிவுகள் என்ற தடைகளை வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிகொண்டு என் அறிவைக் கொண்டே இறைவனை அடைவேன் என்ற கருத்தே இக்கவி. உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் எவ்வாறு இறைநிலையுணரும் பேற்றைத் தடுக்கின்றது என்பதை விளக்குவதற்கே உவமையாக இந்த அழுகணி சித்தர் பாடலை நினைவு படுத்தியுள்ளேன்.

மறை பொருட்களை உணரத் தக்க ஆறாவது அறிவோடு வாழும் உயர்ந்த பிறவியை பெற்ற மனிதனுடைய பிறவியின் நோக்கம் மிக உயர்ந்ததாகும். அது இறை நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து அறிவின் முழுமையைப்பெற்ற, பிறப்பு இறப்புத் தொடரை அறுத்து விட வேண்டுமென்பதேயாகும். பொருள் பற்றுப் பதிவுகள் அடிக்கடி ஒருவருக்கு எழுந்தால் மனமானது அந்தப் பொருளை அடிக்கடி நினைந்து நினைந்து அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் தனது ஆற்றலை வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் இறைநிலையை நாடுவதற்கும் அதனை உணர்வதற்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. எனவே இறைநிலையை உணர்வதற்கும் பிறவிக் கடலை நீந்துவதற்கும் பொருள் பற்றை நீக்கி மனத்தூய்மை பெற வேண்டும். இந்த உயர்ந்தப் பேற்றினை பெறுவதற்கு ஒருவர் தானாக் முயன்றால் அந்நிலை கிட்டுவது அரிது. ஏனெனில் அத்தகைய அறிவின் முழுமைப்பேறு போதனை முறை, சாதனை முறை இரண்டும் இணைந்ததாகும். எனவே இந்த உயர்ந்த அறிவு நிலையைப் பெற அறிவில் முழுமை பெற்று பற்று நீங்கிய ஒரு வழிகாட்டியான ஞானாசிரியர் துணை வேண்டும். எனவே முறையாகப் பயின்று பற்று விட்டு வாழும் ஒரு ஞானாசிரியரைப் பற்ற வேண்டும். இந்த நுட்பத்தை உணர்த்துவதே இந்த குறளில் முதற் பகுதில் வரும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பதாகும்.

வினைப்பயனாகத் தொடர்ந்து வரும் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற பெருநோக்கம்கொண்ட இறை வேட்பாளருக்கு ஞானாசிரியர் தரும் ஒரு நாள் போதனையால் மட்டும் பற்று விட்டு மனம் தூய்மை அடைந்து விடும் என்று கருத முடியாது. பற்று நீக்குவது போதனை முறை மட்டுமல்ல. சாதனையும் வேண்டும். ஞானாசிரியர் உடனிருந்து அவர் வாழ்க்கை முறையினைப் பின்பற்றி நடந்து பயிலவேண்டும். அத்தகைய நிறைவான அறிவு நிலையைப் பெறும் வரையிலும் ஞானாசிரியர் தொடர்பை விட்டு நீங்காமல் அவரை பற்றி நின்று பயன் காண வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் குறளாசிரியர். இக்குறளின் கடைப் பகுதியான "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று, நீ முழுமை பெற்று உனது பொருள் பற்று நீங்கி இறையுணர்வு பெற்று வெற்றியடையும் வரையில் ஞானாசிரியரை பற்றி நில் என்பதே இக்குறளின் பொருள்.

மேலும்: அஷோக்
மேலும்: குவியல்கள்


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.


அத்வைதம்

திருமூலர், திருவள்ளுவர் அறிவுரை

மொத்தத்தில் விஷயம் என்னவென்றால், அத்வைதந்தான் குறி என்றோ, அல்லது அத்வைதம் வேண்டவே வேண்டாம் என்பதாக த்வைதமே குறியாகவோ ஒரு ஜீவன் எப்படி நினைக்கிறானோ அதற்கேற்பத்தான் அவர்களுக்கு அத்வைத அல்லது த்வைத ஸித்தியை ஈச்வரன் அருளுகிறான்

"ஆசை அறுமின்கள்!ஆசை அறுமின்கள்!
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!"

என்று திருமூலர் சொன்னதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்று திருவள்ளுவர் சொன்னதும் ஒன்றுக்கொன்று வித்யாஸமாயிருப்பதாகத் தோன்றினாலும், இப்போது நாம் பார்த்துக்கொண்டு வந்த இரண்டு விதமானவர்களில் ஒவ்வொருத்தரை உத்தேசித்துச் சொன்னதுதான். இப்படிப் புரிந்துகொண்டால் இரண்டு உபதேசமுமே ஸரியானதுதான் என்று தெரியும்.

"ஸத்ய தத்வம் வாஸ்தவத்தில் எப்படியிருக்குமோ அப்படியே நமக்குத் தெரியட்டும். நாம் அதை ஸகுணமாக நினைத்து த்வைதமாக பக்தி பண்ணினாலும் அது நிர்குணமாக இருந்து அத்வைதமான ஞானத்தினால்தான் அடையத்தக்கதாக இருந்தால் நாம் அதை அப்படி அடையும்படியாகவே அது பண்ணுமானால் பண்ணட்டும்" என்று நினைப்பவர்களுக்கு அல்ல திருமூலரின் உபதேசம். ஸகுணமான ஈச்வரனிடம்தான் பற்று வைப்பது என்பதாக (பக்தி எனும்) தங்களுடைய ஸாதனா மார்க்கத்திலேயே பிடிவாதமான பிடிமானம் உள்ளவர்களைப் பார்த்தே திருமூலர் உபதேசம் செய்திருக்கிறார். "இப்படிப் பண்ணாதீர்கள்!ஈச்வரனிடமே யானாலும்கூட ஸகுணமாகத்தான் அவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டு விடாதீர்கள். 'அந்த ஈச்வரனுக்கும் இன்னொரு ஸ்வரூபம், இந்த ஈச்வர ஸ்வரூபத்தைவிடவும் ஸத்யமான ஒரு ஸ்வரூபமிருக்குமானால் அதன் அநுபவம் நமக்குக் கிடைக்கட்டும்' என்று திறந்த மனஸோடு இருங்கள்" என்பதைத்தான் 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்" என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆசைப்பட்ட லக்ஷ்யத்தைத்தான் ஈச்வரன் கொடுப்பான், அதற்கு மேலே கொடுக்க மாட்டானாதலால், அவனாகிய ஸகுண ஸ்வரூபத்திலே ஆசை வைத்தால் அதற்குமேல் பெற முடியாது என்ற அபிப்ராயத்தில் சொல்கிறமாதிரி இருக்கிறது.

எல்லாவிதமான ஆசையும் போகவேண்டும், (ஆசை யெல்லாம் போவதென்றால் மனஸ் போனால்தானே முடியும்? - இப்படி மனஸ் அடிபட்டுப் போய் ஞானஸித்தி பெற வேண்டுமென்று லக்ஷ்யம் வைத்துக்கொண்டிருப்ப -வர்களைப் பார்த்து ஆசார்யாள் ஞானத்துக்கு ஸகுணோபாஸனையை உபாயமாக வைத்தார். அவர்களை உத்தேசித்தேதான், ஆசார்யாளைப்போலத் திருவள்ளுவரும் ஈச்வரனிடம் பற்று வைக்கச் சொல்கிறார். இவர் 'அட்வைஸ்' பண்ணுகிறவர்களுக்கு ஈச்வரனிடம் பற்று இருந்தாலும் அதுவே லக்ஷ்யம் என்று வைத்துக்கொண்டு விடவில்லை. எல்லாப் பற்றும் அற்றுப்போன ஸ்திதிதான் அவர்களுடைய லக்ஷ்யம். அதே மாதிரி அப்போது அந்த ஈச்வரனும் இவர்களை த்வைதப் பற்றுடன் நிறுத்திவிடுவதில்லை. த்வைதப் பற்றோடு நின்று போககிறவர்களிடம் அவனும் அப்படி த்வைதமான பற்றுள்ளவனாகத்தான் தன்னையும் நிறத்திக்கொள்கிறான். எப்போதும் அவர்களுடைய பக்தியை ஏற்பது, தாஸ்யத்தை ஏற்பது, கருணை செய்வதுஎன்றால் அவனும் த்வைதப்பற்றுறவுதானே அவர்களிடம் வைத்திருப்பதாக அர்த்தம்? ஆனால் அங்கே திருவள்ளுவரோ அவனைப் பற்றற்றான்" என்றே சொல்கிறார். கடவுள் என்றோ, பகவான் என்றோ, ஆண்டவன் என்றோ எந்த வார்த்தையாலும் ஈச்வரனைச் சொல்லாமல் "பற்றற்றான்" என்றே இங்கே அத்விதீய வஸ்துவாகப் பெயர் கொடுத்திருக்கிறார். 'c ஈச்ரவன் என்று பற்றிக்கொள்வதன் வாஸ்தவத்தில் பற்றற்ற அத்வைத ஸ்வரூபம்.. அதனால் c லக்ஷ்யமாகக் கொண்டிருக்கிற பற்றற்ற அத்வைத ஸ்திதியில் உன்னை அவன் சேர்த்துவிடுவான். பற்று அறுக்க விரிம்பியும் முடயாதவர்கள் ஞானத்துக்கே நேரே ப்ரயாஸை பண்ண வேண்டியதில்லை. அவர்களுடைய லக்ஷ்யமான பற்றற்ற பொருள்தான் பற்றும் படியாக ஈச்வரனாக ஆகியிருப்பது. இப்படி 'ஆகியிருப்பதாக' இல்லாமல் உள்ளபடி இருப்பதான நிலையில் அந்த ஈச்வரனே 'பற்றற்றான்' என்பதை மறந்து போகாமல் அவனை பக்தியில் பற்றிக்கொண்டால் அவனே பற்றுவிட்ட ஞானத்துக்குத் தூக்கி விடுவான்" என்று இத்தனை அபிப்ராயத்தையும் உள்ளே அடக்கித்தான் ரத்னச் சுருக்கமாக இருண்டு வரி பண்ணிவிட்டார்.

ஆசையிலேதான் ஆரம்பித்தோம். அனர்த்த பரம்பரை அதிலிருந்துதான் என்று ஆரம்பித்து எத்தனையெத்தனையோ தினுஸாக ஆசைகளைப் பற்றிப் பார்த்தோம். ஆசையின் அந்த அஸுர பரம்பரைகளை தேவ சக்திகள் என்று சொல்லக் கூடிய உயர்ந்த நல்ல குணங்களால் ஜயித்து அடக்க வேண்டுமென்று பார்த்தோம். கடைசியில் பார்த்தால் அந்த நல்ல குணங்களான தேவ கணங்களும்கூடக் கெடுதல் பண்ணிவிடமுடியும். எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிற ஈச்வரனிடம்கூட ஆசை என்று வைத்துவிட்டால் ஸத்ய ஸாக்ஷ£த்காரம் கஷ்டம்தான் என்கிற அளவுக்குத் தெரிகிறது. நம்முடைய குறி ஆதார ஸத்யந்தான் என்று திர்மானமாக வைத்துக் கொள்ளாவிடடால் நம்முடைய மற்ற குறிகளை நாம் அடையப் பண்ணியே ஈச்வரன் மாயம் செய்துவிடுகிறான் என்று நினைக்கும்படியாக இருக்கிறது. இப்படிப் பலகாலம் பண்ணினாலும், அப்புறம் 'ஐயோ, பாவம்' என்று அவனே உண்மையான, குறிதப்பாத ஞானதாஹத்தைக் கொடுத்து, அப்புறம் அதைப் பூர்த்தி செய்வானென்று வைத்துக்கொள்ளலாம்.

என்றாலும் அவன் என்றைக்கோ அப்படிச் செய்கிறபடிச் செய்யட்டுமென்று இருந்துவிடாமல் நாமும் இடைநிலை ஸாதனைகளில் அல்லது ஸாதனைகளின் இடைநிலையில் பெற்ற அநுபவங்கள் சக்திகள் முதலியவற்றிலேயே ஆசை மோஹம் கொள்ளாமல், ஆசைக்கே இடம் தராததான அத்வைத லக்ஷ்யத்தை அப்போதப்போதும் நினைத்து உறுதிப்படுத்திக் கொள்வதுதான் ச்லாக்யம். அதுதான் விவேகம்.

“பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ள பற்றுகளை அகற்றுவதற்கே, அப்பற்றைப் பற்ற வேண்டும்.” (பற்று: ஆசை, பற்றுதல்: இறுக்கப் பிடித்துக் கொள்ளுதல் அல்லது பாச, பந்தங்களை விடுதல்)

இராமனின் கருணை (ஆன்மீக கருத்துக்கள்)
ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.

ஸோ ஹம் பருஷிதஸ் தேந
          தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
           ராகவம் சரணம் கத: II

பொருள்: (பற்று கொளற்கு) பற்று அற்றான் பற்றினை பற்றுக‡ (வேண்டிய) பொருள்களை அடைவதற்குப் பற்று அற்று நிற்பவனது பற்றுக் கோட்டினைப் பற்றுக ; பற்று விடற்கு(ம்) அப் பற்றை(யே) பற்றுக - உலகப் பொருள்களின் பற்றை விடுவதற்கும் அப் பற்றுக்கோட்டினையே பற்றுக.

அகலம்: பற்றுக் கோடு -பற்றும் கொம்பு. அப் பற்றையே என்பதன் ஏகாரமும், விடற்கும் என்பதன் உம்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. ‘அப் பற்றை’ என்றமையால், ‘பற்றுக் கொளற்கு’ என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது. துறவதிகாரத்தின்கண்ணே பொருள்களைக் கொள்ளுதலைக் கூறுவானேன் என்னின், பொருளில் லாதார் துறவார், துறத்தற்கு அவர்பால் ஒன்றும் இன்மையான். பொருள் இல்லாதார் துறக்க வேண்டின், அவர் துறப்பதற்குரிய பொருள்களை முன்னர்க் கொள்ளல் வேண்டும். பற்று என்னும் சொல் மீண்டும் மீண்டும் வருதலால் இது சொற்பொருட்பின் வரு நிலை யணி.


கருத்து: பொருட்பற்றை விடுதற்கும் பொருளைக் கொள்ளுதற்கும் கடவுளைப் பற்றுக.

பரிமேலழகர் உரை
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை, 'இதுவே நன்னெறி' என்று மனத்துக் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க, விடாது வந்த பற்று விடதற்கு. 
விளக்கம்
(கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் 'பற்றற்றான்' என்றார். 'பற்று அற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் 'பற்று' என்றது, பற்றப்படுவதனை 'அதன்கண் உபாயம்' என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும்உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றே இயல்பாகப் பற்றில்லாதவனாகிய இறைவனிடத்துப் பத்தி செய்வதை மனத்திற் கொள்க ; பற்று விடற்கு - விடாது தொடர்ந்து வரும் ஆசைப் பிணிப்பு முற்றும் நீங்குதற்கு ; அப்பற்றைப் பற்றுக - அவ்விறைவன் பத்தியையே ஊழ்க ஒன்றுகைகளால் ( தியான சமாதிகளால் ) இறுகக் கடைப்பிடிக்க.

சார்ந்ததன் வண்ணமாதல் ஆதன் ( ஆன்மா ) இயல்பாதலால், பற்றற்றானைப் பற்றினவன் தானும் பற்றற்றானாவன் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

மணக்குடவர் உரை
பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.