Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எனைவகையான் தேறியக் கண்ணும்

குறள் 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

பொருள்
எனை - என்ன; எவ்வளவு; எல்லாம்.

வகை கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

எனைவகையான் -  ஒரு செயலை செய்வதற்கு அனைத்து வகையிலும் ஆராய்ந்து

தேர்-தல் -- tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி  

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தேறியக் கண்ணும் - தெளிவுப் பெற்று, திட்டம் தீட்டியப் பின்னரும்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வகை கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

வினைவகையான் - அச்செயலை ஒருவர் செயற்பாட்டில் செய்து முடிக்கும் திறனில்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

ஆகும் - ஆதல் - ஆவது எனப்பொருள்படும் இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

வேறாகும் - வேறுபடுவோர் (சிறப்பாக செய்து முடிப்போர், சுமாராக செய்து முடிப்போர், பாதியில் விடுவோர், மோசமாக செய்து முடிப்போர்)

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

பலர் அநேகர்; சபை.

மாந்தர் பலர் - இவ்வுலகத்தில் பலர்

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வதற்கு முன் எல்லோரும் அனைத்து வகையிலும் ஆராய்ந்து தெளிந்து இருப்பர். பின் தெளிவான திட்டம் தனையும் தீட்டி விடுவர். ஆனால் அவ்வினையை (செயலை) செயலாக்கும் விதத்தில் தான் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். பலருக்கும் அவர்கள் வேலை செய்யும் நேர்த்தி குறைசொல்லத் தக்க வகையிலேயே இருக்கும். பலர் அவ்வேலையை முடிக்கக்கூட மாட்டார்கள்.

(இந்தியாவில்) இன்றைய நிர்வாக சுழல்களில் ஒரு வினையை செயலாக்கும் திறமையை யுடைய நபர்கள் ”கொண்டாடப்படுவதற்கு” அதுவே காரணம். People who can execute well are valued highly these days. 

தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல, பொருளின் அதிகாரச்சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்த ரியல்பாதலால், எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத்தலைவர் வினையையும் இறுதிவரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும், சிறிது வேறு பட்டவிடத்தும் அவரை வினையினின்று விலக்கிவிடுவதும், இன்றியமையாதன வென்பதாம்.

உதாரணமாக: ஒரு குழுவில் ஐந்துப் பேர் வேலை செய்கிறார்கள். இருவர் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நல்ல தலைவர் அவர்களுடைய குறைகளை கண்டு அறிந்து திருத்தி அவர்களை முன்னுக்கு கொண்டு வருவார். இது தொலைநோக்கில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஆனால் திறன் இல்லாத தலைவர் அதே வேலை மீதமுள்ள மூன்று நபர்களிடம் கொடுத்து வேலை வாங்குவார் அல்லது தாமே திருத்தி வேலையை செய்து முடிப்பார். அஃது தவறான நிர்வாக திறமையாகும்.  (நிர்வாக திறமையின்மையில் இது ஒன்றாக. இதுப்போல் பல)

மேலும்: அஷோக்

பரிமேலழகர் உரை
எனை வகையான் தேறியக் கண்ணும்-எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.

விளக்கம் [கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், 'வேறாகும் மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.]

மணக்குடவர் உரை
எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும் அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எனை வகையான் தேறியக் கண்ணும் - எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும் ; வினை வகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ்வினையின் தன்மையால் தன்மை வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலராவர்.

ஒரு தனிப்பட்ட கொள்கையுடைய அரசியற் கட்சித்தலைவர் ஆளுநராக அமர்த்தப்பெறின் , அக்கட்சிக் கொள்கையை விட்டு விடுவதும் , நேர்மையானவரென்று கருதப் பெற்றவர். வணிகத் துறையதிகாரியானபின் கையூட்டு வாங்குவதும், தலைமை யமைச்சராகவும் படைத்தலைவராகவும் அரசனால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசனைக் கவிழ்த்து விட்டுத் தாம் அரசராவதும் , இன்று நிகழ்வது போன்றே அன்றும் நிகழ்ந்தமையின் , 'வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்' என்றார் . தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல , பொருளின் அதிகாரச்சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்த ரியல்பாதலால் , எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத்தலைவர் வினையையும் இறுதிவரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும் , சிறிது வேறு பட்டவிடத்தும் அவரை வினையினின்று விலக்கிவிடுவதும் , இன்றியமையாதன வென்பதாம்.

மு.வரதராசனார் உரை
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

Thirukkural - Management - Selection of Employees
Kural 514 cautions us that despite a rigorous selection process and standardized procedures, people change when they join organizations and start to perform. There are many shocking experiences for recruiters after the recruits join the organization. At times, the recruiters are surprised how and why a person is selected for a particular job.

Many pass all tests and yet Change in office.
The possible reasons for wrong selection of employees are that the candidate:
1) might have mastered the tools and techniques of selections and the methods employed by selectors,
2) might have been desperate to get the job at the time of selection, and
3) might have consciously projected his positive self.

This challenge is not only with selection of a person for a job, but also with selection of a bride or bridegroom. There are many surprises for spouses after  they get married. Mismatch is one of the reasons for divorces.

Therefore, Valluvar cautions us to be prepared for unexpected developments.

No comments:

Post a Comment