Skip to main content

Posts

நெடும்புனலுள் வெல்லும் முதலை

குறள் 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்  நீங்கின் அதனைப் பிற. [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய் குறுகியகுப்பிகளில் நீர்மப்பொருளை ஊற்ற உதவுங்கருவி நெடும்புனல் - ஆழமுள்ளநீர்நிலை உள் -உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. வெல்லும் - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். முதலை - நீர்வாழ்உயிரி; காண்க:செங்கிடை; இறகின்அடிக்குருத்து. அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல் அடு - aṭu   IV. v. t. cook, சமை; 2. destroy, அழி. "அட்டாலும் பால் சுவையில் குன்றாது," though milk be boiled its flavour does not diminish. அடு - aṭu   VI. v. t. approach, கிட்டு; 2. be near, close, adjacent, சேர்ந்திரு; 3. adhere, apply for protection, சார்; 4. v. i. (with dat.) belong to, be suitable to, be becoming, உரியதாகு; 5. h...

நயனிலன் என்பது சொல்லும்

குறள் 193 நயனிலன் என்பது சொல்லும் பயனில  பாரித் துரைக்கும் உரை. [அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை] பொருள் நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி. நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை. -> ஒழுக்கம் (பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் (திருக்குறள்)) -> நன்மை, சிறப்பு, நயம் (பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (திருக்குறள்) இலன் - இல்லாதவன் நயனிலன் - நயன் இல்லாத; நளினம் இல்லாதல் ஒழுக்கம் இல்லாத; முறை இல்லாத; அறம் இல்லாத ஒருவன். என்பது - eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிர...

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல

குறள் 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை [அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை] பொருள் அகழ் - akaẕ   அகழு, II. v. t. dig out, excavate. தோண்டு. அகழு - akẕu  -அகழ், கிறேன், அகழ்ந்தேன், வேன், அகழ, v. a. To dig out, excavate a well or ditch, form a hole as a rat, &c., தோண்ட. 2. To dig, turn up the earth, plough, உழ. (p.)  அகழ்வாரைத் - அகழ்வார் - தோண்டுவோர்  தாங்கும் - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல். நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை போல -  ஓர்உவமவுருபு தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிப...

கதுமெனத் தாநோக்கி தாமே கலுழும்

குறள் 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. [காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்] பொருள் கதுமெனல்  - katum-eṉal   - விரைதல், n. Expressiondenoting quickness; விரைவுக்குறிப்பு. கதுமெனக்கரைந்து (பொருந. 101).   கதும் - விரைவுக்குறிப்பு (swiftly) - - கற்பு உடை உமையாள் மைந்தன் கதும் என கழுத்தில் இட்டான் ( திருவிளையாடற் புராணம் ) - கதும்  எனக் கனல்  பொத்தித் தள்ளு மின் ( கம்பராமாயணம் ) (விரைவாக நெருப்பை மூட்டி அதில் அவனைத்  தள்ளுங்கள்) கதும் எனத் - விரைவாக என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. தா - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஆ)வலிமை; வருத்தம்; கேடு; குற்றம்; பகை; பாய்கை; குறை. தா - தானே நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். நோக்கித் - பார்த்து தாமே - தானே கலுழ்தல் - கலங்குதல்; தடுமாறுதல்; அழுதல்; ஒழுகுதல்; உருகுதல் கலுழும் -  கலுழு கண்மழை (தேம்பாவணி...

காலம் கருதி இருப்பர்

குறள் 485 காலம் கருதி இருப்பர் கலங்காது  ஞாலம் கருது பவர். [பொருட்பால், அரசியல், காலமறிதல்] பொருள் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல். இருப்பர் -  இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். கலங்குதல் - நீர்முதலியனகுழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல். கலங்காது - தவறாது ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை. கருதுதல்  - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல். கருது பவர் - எண்ணுபவர் ஞாலம் - உலகம்  காலம் கருதி இருப்பர்  - காலத்தை எண்ணி காத்திருப்பவர்  ...

இயல்பினான் இல்வாழ்க்கை

குறள் 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இயல்பு -  தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று இயல்பினான் - இயல்பு அறிந்து அறத்தோடு (நெறிகளின் படி) இயந்து ; இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன். இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது  -> இயல் - இயல்புகாண் டோற்றிமாய்கை ((சி. சி. 1. 3) -> ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்பும் குன்றின் (குறிஞ்சிப். 15) -> நற்குணம்.ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44) -> நேர்மை  -> முறை இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை., இல்லற வாழ்க்கையில் கூடி வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழ்பவன் - வாழ்க்கையை நடத்துபவன்  என்பான் - என்று சொல்லப்படுபவன் வாழ்பவன்  என்பான்  - சிற...

ஊரவர் கெளவை எருவாக

குறள் 1147 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். [காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்] பொருள் அலரறிவுறுத்தல் - அலர் + அறிவுறுத்தல் அலர்   - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி. அறிவு -  ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உறுத்தல் - உறுத்துதல்; மிகுக்கை; ஒற்றுகை. அம்பல் - சிலரறிந்து புறங்கூறுமொழி, கிசுகிசு, பழிச்சொல், பழிமொழி, பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை, ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல் . ஊரே அறிந்தால் அலர் . அறிவுறுத்தல் - உபதேசித்தல், போதித்தல் ஊரவர் - ஊரார், அன்னியர், (தன்னை வீடு, அலுவலுகம் போன்ற சுற்றத்தில் உள்ள மக்கள்) கெளவை - kauvai   n. prob. hvay. 1. Sound,noise, roar; ஒலி குயிற் கெளவையிற் பெரிதே(ஐங்குறு. 369). 2. Disclosure; வெளிப்பாடு கற்பொடு புணர்ந்த கெளவை (தொல். பொ 41). 3. Ill-report, scandal, disrepute; பழிச்சொல் கல்லென்கெளவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131). 4. Affliction, distress; துன்பம் (பிங்.) 5. Toddy; கள் (பிங்.)   எரு - உரம்; சாணி...