Skip to main content

Posts

Showing posts with the label W - அப்துல் ரகுமான்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For English meaning scroll to the bottom of this post) பொருள் அன்று - அந்நாள் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா. அன்று அறிவாம் - அந்நாளில் அறிந்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், செய்துக்கொள்ளலாம் என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express) என்னாது - என்று சொல்லாமல் அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) -  தருமம் ; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம், தன்னறம் - ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம்.   செய்க - செய்ய வேண்டும் மற்று அது - மற்றவை பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வை முதலியன குறைதல். பொன்றுங்கால் - இறுதிக்காலத்தில் பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உத...