Skip to main content

Posts

Showing posts with the label Leadership_DeliverResults

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

குறள் 666 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம். எண்ணிய - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம். எண்ணியாங்கு - எண்ணியப்படி;  தாம் கருதியவாறே எய்துப- எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எண்ணியார் - எண்ணியவர், நினைத்தவர் திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை. திண்ணியர் - செயல்களில் உறுதியும் திண்மையும் ஆகப்பெறின் -  உடையவராக இருப்பின் முழுப்பொருள் முன் குறிப்பு: ( @14:58  https://youtu.be/iQnyTQAmvs4?t=898 ) இன்று (16-feb-2023) எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் ஒரு நேர்காணல் காணொளியில் இன்றைய வாழ்வில் எப்படி தன்னை கண்டடையும் முன்பே 17 வயத...

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்  கருமமே கட்டளைக் கல் [பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பெருமைக்கும் -  பெருமை -  மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை ஏனைச் -  ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன். ஏனைய , neut. pl. the other things, the rest, ஏன; 2. adj. as ஏனை. சிறுமைக்கும் -  சிறுமை -   இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. தத்தம் -  நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை தத்தம் - tttm   s. Theirs, respectively--as தம் தம். (p.) அவரவர்தத்தமிடஞ்சேர்ந்தார். They went to their respective places. கருமமே - கருமம் -  செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. கட்டளைக்கல் -  பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல்; நிறைகல், படிக்க...