Skip to main content

Posts

Showing posts with the label Index 129 புணர்ச்சிவிதும்பல்

129 புணர்ச்சிவிதும்பல்

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  புணர்ச்சிவிதும்பல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு குறள் 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் குறள் 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் குறள் 1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு குறள் 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து குறள் 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை குறள் 1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து குறள் 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு குறள் 1289 மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் குறள் 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று பதிவு வரிசை