Skip to main content

Posts

Showing posts with the label Index 124 உறுப்புநலனழிதல்

124 உறுப்புநலனழிதல்

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  உறுப்புநலனழிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் குறள் 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் குறள் 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் குறள் 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் குறள் 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் குறள் 1236 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து குறள் 1237 பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து குறள் 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் குறள் 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் குறள் 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு பதிவு வரிசை