Skip to main content

Posts

Showing posts with the label Index 120 தனிப்படர்மிகுதி

120 தனிப்படர்மிகுதி

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  தனிப்படர்மிகுதி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி குறள் 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி குறள் 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு குறள் 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் குறள் 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை குறள் 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது குறள் 1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் குறள் 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் குறள் 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு குறள் 1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு பதிவு வரிசை