Skip to main content

Posts

Showing posts with the label Index 099 சான்றாண்மை

099 சான்றாண்மை

பால்  - பொருட்பால் இயல்  - குடியியல் அதிகாரம்  - சான்றாண்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு குறள் 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண் குறள் 984 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு குறள் 985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை குறள் 986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் குறள் 987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு குறள் 988 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் குறள் 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் குறள் 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை பதிவு வரிசை